முதியோர்களுக்கு உணவு வழங்கும் நங்கநல்லூர் சாண்டி கிச்சன்
விக்ரமன், ஆனந்த் ஆகிய சகோதரர்கள், சகோதரி அனுராதா இணைந்து இந்த கிச்சனை நடத்துகின்றனர். மதிய உணவுக்கான தென்னிந்திய உணவு வகைகளை இந்த கிச்சன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது, வயிற்றுக்கு சுகமான உணவு மட்டுமல்ல. விலையிலும் கட்டுப்படியாகக்கூடிய உணவு வகைகளை இவர்கள் வழங்குகின்றனர்.
Must Read: பப்பாளி பழத்தை உரிய முறையில் சாப்பிடாவிட்டால் நச்சு தன்மையாக மாறிவிடும்…
“நாங்கள் முக்கியமாக எங்கள் சுற்றுப்புறமான நங்கநல்லூரில் உள்ள முதியோர்களுக்கு சேவை செய்கிறோம். அவர்கள் எங்கள் உணவை விரும்புகிறார்கள், ஏனெனில் அதில் எந்த காரமும் சேர்ப்பதில்லை.
உணவின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டின் அடிப்படையில் அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது, ”என இந்த கிச்சன் நிறுவனத்தின் ஆனந்த். சாம்பார், ரசம், கூட்டு மற்றும் பொரியல் உள்ளிட்ட செட் உணவுகள் வழங்கப்படுகின்றன
சாம்பார் வடை குழம்பு, கார குழம்பு மற்றும் மோர்-குழம்பு ஆகியவையும் இன்னொருநாள் உணவு மெனுவில் இருக்கும். வார இறுதி நாட்களில், புல்காஸ், ராஜ்மா மசாலா, சன்னா மற்றும் டம் பிரியாணி உள்ளிட்ட வட இந்திய மெனுக்களையும் வழங்குகின்றனர். ஒரு நபருக்கு ₹120 என்ற விலையில் மதிய உணவு தருகின்றனர். இப்போது இரவு நேரத்திலும் உணவு வழங்குகின்றனர். மேலும். விவரங்களுக்கு 8925963330 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
#SandyKitchen #CloudKitchen #NanganallurKitchen

Comments
View More