
சத்து மிக்க கஞ்சி வழங்கும் அன்பு உள்ளங்கள்
உடுமலை மருத்துவமனை அருகே கஞ்சி வழங்கும் அன்பு உள்ளங்கள் குறித்து பதிவு எழுதினேன். பதிவு எழுதிய சற்று நேரத்தில் மதிப்பிற்குரிய தோழி சுகுணா முத்துசாமி தொலைபேசியில் அழைத்தார். நீங்க பதிவு போட்டது ரொம்ப சந்தோஷம் ஷாஜி. அந்த வேலையை நாமதான் செய்துட்டிருக்கோம்.
என்னது... நீங்களா? ஆமா ஷாஜி. நானும் இன்னும் சிலரும் சேர்ந்து செய்யறோம்.
அங்கே இருந்தவங்க கிறிஸ்துவர்கள் மாதிரி இருந்துச்சு. அதையும் நான் பதிவில் எழுதினேன்.
கிறிஸ்துவர்கள் மட்டுமில்லே ஷாஜி. எல்லாருமே இருக்கோம். கஞ்சி தயார் செய்து கொடுக்கிறவர் நிசார் பாய். அதை ஆட்டோல கொண்டு வந்து இறங்கி, பாத்திரங்களை திரும்ப எடுத்துட்டுப் போறவர் சவேரியார். அப்புறம் நானும் என்னோட சேர்ந்த பலரும் நிதி திரட்டித்தான் செய்யறோம்.ராம் பிரசாத்தான் மெயினா இதை செய்துட்டிருக்கார்.
Must Read: தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம்… உள்ளம் நெகிழ்ந்த பதிவுகள்!
அப்புறம், இந்தக் கஞ்சி வழங்கும் பணி எப்படி யாரால் தொடங்கப்பட்டது, அதில் வந்த சிக்கல்கள் என்ன என்று விரிவாக விளக்கினார். அந்த முழுக்கதையும் நமக்கு வேண்டாம். அதில் இருக்கிற நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
சனிக்கிழமை இந்தக் குழு மருத்துவமனை அருகிலும், ஞாயிற்றுக்கிழமை இன்னொரு குழு உழவர் சந்தை எதிரிலும் வழங்குகிறார்கள்.கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. உலகம் எவ்வளவு சிறியது.
கஞ்சி விநியோகிக்கும் பணிக்கு உதவிக்கு ஆள் தேவை என்றால் என்னையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்தத் தம்பிக்குத் தெரிவியுங்கள். நான் தினமும் காலையில் சீக்கிரமே விழித்துக் கொள்வேன். எனவே, ஆறரை ஏழு மணிக்கு விநியோகப் பணிக்குப் போவது பெரிய விஷயமில்லை, ஒரு நாள் முன்னதாகச் சொன்னால் போதும் என்று சொல்லியிருக்கிறேன்.
#freehealthmixdistribution #freefood #feedpoor
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments