பிறந்த குழந்தைக்கு தாய்பாலுக்குப் பின்னர் என்ன உணவு கொடுக்கலாம்?
பிறந்த குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்பால் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலை விட ஆரோக்கியமான சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. எனவே தாய்பாலை தவிர வேறு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஒரு ஆண்டு வரையாவது பிறந்த குழந்தைக்கு தாய்பால் மட்டுமே கொடுப்பது மிகச்சிறந்ததாக இருக்கும்.
ஒரு ஆண்டுக்குப் பின்னர் என்னென்ன உணவுகளைக் கொடுப்பது, கொடுக்கக்கூடாது என்பது குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவர்கள் கூறுவதை இளம் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
பசும்பால் கொடுக்கக்கூடாது
ஒரு ஆண்டு வரை தாய் பால் கொடுக்கப்படும் நிலையில் சில பெண்களுக்கு தாய்பால் போதுமான அளவு சுரக்காத நிலை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் உடனே பசும்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தும் வரை பசும்பால் கொடுக்கக்கூடாது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Must Read: காலை உணவை தவிர்ப்பது நல்லதல்ல…
பசும்பாலில் கேசின் என்ற புரதம் இருக்கிறது. இதை எளிதாக செரிக்கும் அளவுக்கு ஒரு ஆண்டுக்குள் குழந்தையின் செரிமான உறுப்புகள் வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, பசும்பால் குழந்தைக்கு தரக்கூடாது. அதற்கு பதிலாக வேறு திரவ ஆகாரங்களை சேர்க்க வேண்டும்.
உப்பு
தாய்மூலமே குழந்தைக்கு தேவையான சோடியம் கிடைத்து விடும். இதைத் தாண்டி உணவிலும் உப்பு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைக்கு உடலில் உப்பு அதிகமாக சேரும் அபாயம் உண்டு.
எனவே குழந்தைகளுக்கு இணை உணவுகள் தரும்போது அதில் உப்பு சேர்ப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இனிப்பு
பிறந்த குழந்தைக்கு ஒரு ஆண்டு பூர்த்தியாகும் வரை இனிப்பு கொடுக்கக்கூடாது. குறிப்பாக வெள்ளைச் சர்க்கரையைக் கொடுக்கக் கூடாது. இனிப்பு நிறைந்த தேன் கூட சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பழசாறு கொடுத்தாலும் கூட அதில் இனிப்பு சேர்க்க வேண்டியதில்லை. பழத்தில் இருக்கும் இனிப்பு சுவையே போதுமானதாக இருக்கும்.
முட்டை
குழந்தைக்கு ஒரு வயது ஆனபின்னரே முட்டை கொடுக்க வேண்டும். அதுவும் நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டைகள் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆஃபாயில், ஆம்லேட் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது.
இணை உணவுகள்
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் வரை இணை உணவுகளை மிக்சியில் அரைத்து கூழாக மாற்றித்தான் கொடுக்க வேண்டும். திரவ உணவுகளைக் கொடுக்கலாம். ஒரு ஆண்டு வரை இணை உணவுகளைத் தவிர்து தாய்பால் மட்டுமே கொடுப்பது சிறந்தது.
-பா.கனீஸ்வரி
#BreastMilkImportant #MotherMilk #FoodForNewBorn #FoodForOneYearBaby
Comments