குடி தண்ணீரை கட்டாயப்படுத்தி விற்கும் உணவங்கள் திருந்துமா?
மறுக்கப்படும் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதே ஒரு வேலையாக செய்ய வேண்டியிருக்கிறது. சமீபத்தில் இரண்டு சம்பவங்கள். முதல் சம்பவம் அண்ணா நகரில் உள்ள கோரா புட்ஸ் எனும் இடம். இந்த இடம் 24 மணி நேர உணவகம். கண்டெயினரைக் கொண்டு சிறுசிறு கடைகள். விதவிதமான உணவுகளை தருகிறார்கள்.
அங்கே உணவு உண்ண வேண்டுமென்றால் அவர்கள் கொடுக்கும் உணவு கார்டை 20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். அந்த கார்டில் சார்ஜ் ஏற்றிக் கொண்டுதான் சாப்பிட வேண்டும். கார்டுகளில் உள்ள பணத்தை திரும்பப் பெற வேண்டுமானால் கார்டை திரும்பக் கொடுத்தால் அதுவும் பணமாய் கொடுத்திருந்தால் மட்டுமே உங்கள் பணத்தை திரும்பப் பெற முடியும்.
Must Read: ஒவ்வொரு நாளும் ஜோமாட்டோ; வீட்டு உணவு பிரியர்களுக்கான ஒரு புதிய வசதி
கார்டுக்கான 20 ரூபாயை கழித்தே கொடுப்பார்கள். அதில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு வாடகை கிடையாது. அவர்களின் விற்பனையில் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் கோரா புட்ஸ் நிறுவனம் எடுத்துக் கொண்டுதான் கடைக்காரர்களுக்கு செட்டில் செய்வார்கள் இவர்களின் வரவு செலவை பார்க்க, நாம் அவர்களுக்கு 20 ரூபாய் கொடுத்து கார்டை வாங்க வேண்டும்.
இதை எதிர்த்து நான் ஏற்கனவே ஈ.ஏ மால், மற்றும் பல மால்களில் போராடி கார்டுக்கான சார்ஜுகளை வாங்குவதை தடுத்திருக்கிறேன். தற்போது ஈ.ஏ, மற்றும் பலோசோ மாலில் எல்லாம் கார்டுகளுக்கு என்று தனி சார்ஜ் கிடையாது. அது மட்டுமில்லாமல் கார்ட்டில் உள்ள பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். இதுவே ஒரு அநியாயம் என்றால் இன்னொரு அநியாயத்தை அங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தியேட்டர்களிலேயே குடிநீர் வைக்க வேண்டும் என்று போராடி வைத்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமில்லாமல் நிறைய உணவகங்களில் குடிநீர் தரச் சொல்லி கேட்ட்டு இப்போது கே.எப்.சி போன்ற நிறுவனங்களில் உள்ள உணவங்களில் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கோரா புட்ஸ் நிறுவன கடைகளில் நீங்க எத்தனை ரூபாய்க்கு உணவு வாங்கினாலும் அனைவரும் குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில் தான் கட்டாயம் வாங்க வேண்டும்.
இதை நான் எப்போதும் எதிர்ப்பவன். கொங்கு நாட்டு உணவகம் ஒன்றில் உணவு ஆர்டர் செய்து விட்டு குடிப்பதற்கு தண்ணீர் அதுவும் சுடு நீர் கேட்ட போது பாட்டில் தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அப்படி கட்டாயப்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் கொண்டு வந்த உணவை எடுத்துச் செல்லாம் என்றவுடன் வேறுவழியில்லாமல் ட்ம்ளர்களில் தண்ணீர் அதுவும் சுடுநீர் கொடுத்தார்கள்.
உணவை தரும் உணவகஙக்ளின் லைசென்ஸ் விதியே அங்கே வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல காற்றோட்டமான இடம் வசதி, குடிநீர், மற்றும் நல்ல கழிப்பறை இருக்க வேண்டியது அவசியம். அது உணவக லைசென்ஸ் விதியிலேயே உண்டு. அப்படி இருக்க கட்டாயம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயபப்டுத்துவது மிகவும் தவறு. உரிமை மீறலும் கூட.
Must Read: ஒவ்வொரு நாளும் ஜோமாட்டோ; வீட்டு உணவு பிரியர்களுக்கான ஒரு புதிய வசதி
இவர்களின் கடை என்று இல்லாமல் எல்லா கடைகளிலும் இதான் நிலை. அது மட்டுமில்லாமல் பல கடைகளின் வாசலில் கோரா புட்ஸ் கார்ட் இல்லாமல் அக்கடைக்காரர்கள் உணவு கொடுத்ததால் போட்டுக் கொடுத்தால் ஐந்து லட்சம் தருவார்களாம். எப்படி இருக்கு பாருங்கள். இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு நமக்கு உணவு தருகிறார்கள்.
குடிநீர் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மிகவும் தவறான செயல். நான் கேட்டதால் தண்ணீர் கிடைத்தது. எல்லோரும் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. கேளுங்கள். உங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை கேட்டுப் பெறுவோம்.
#கேட்டால்கிடைக்கும் #KoraFoodStreet #dontbuywaterbottleinestaurants #cheatingrestaurants

Comments
View More