ஒவ்வொரு நாளும் ஜோமாட்டோ; வீட்டு உணவு பிரியர்களுக்கான ஒரு புதிய வசதி


ஒவ்வொரு நாளும் ஜொமாட்டோ (Zomato Everyday) என்ற புதிய வசதியை பிரபல உணவு விநியோகச் செயலி ஜொமாட்டோ அறிமுகம் செய்துள்ளது.  இந்த வசதியைப் பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவானது,  ‘குடும்பத் தலைவிகள் வழங்கிய செய்முறையிலிருந்து தயாரிக்கப்படும், என்று ஜொமாடோ கூறியுள்ளது. 

வீட்டிலிருந்து வெகுதூரம் விலகி பெருநகரங்களில் வசிக்கும் நபர்கள் வீட்டில் சமைத்தது போன்ற உணவை உண்ண வேண்டும் என்ற விருப்பத்துடன் இருப்பர். அவர்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜொமாட்டோ என்ற இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உணவு விநியோக நிறுவனம் 'வீட்டு தலைவிகளுடன் இணைந்து மலிவு விலையில் புதிய வீட்டு முறையிலான உணவை வழங்குவதாக ஜொமாட்டோ கூறுகிறது . '

Must Read: வீட்டிலேயே நெய் எப்படி தயாரிப்பது என்று தெரியுமா?

ஜொமாட்டோஇணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல். உங்கள் வீட்டில் சமைக்கப்பட்ட உணவைப் போன்ற வசதியை அனுபவிக்கவும். வீட்டு தலைவிகளால் வடிவமைக்கப்பட்ட மெனுக்களுடன், இது உங்கள் வீட்டை கொஞ்சம் நினைவூட்டும் என்று நம்புவதாக ட்வீட் செய்துள்ளார்.

ஜொமாட்டோவின் புதிய சேவை

அவரது ட்வீட்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இந்த புதிய சேவையின் அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

(1) அதன் படி இந்த திட்டத்தில் இணைந்துள்ள குடும்பத்தலைவிகள் திட்டத்தின் கீழ் உள்ள சமையல்காரர்களுடன் இணைந்து சமையல் குறிப்புகளை வழங்குவர்கள். 

(2.)குறிப்பிட்ட மெனுவை சமைக்க மிகச்சிறந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படும், இதனால் அது சுவையாக இருக்கும். இந்த உணவும் மிக உயர்ந்த தரமாக இருக்கும்.

(3) அன்றாட உணவின் தொடக்க விலை ₹ 89 வரை குறைவாக இருக்கும்; 

(4.) இந்த வசதியில் ஆர்டர் செய்யப்பட்ட 10-15 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்படும் 

(5.) இந்த வசதி தற்போது குருகிராமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது, மேலும் காலை உணவு (காலை 8:30-11:30 மணி) மற்றும் மதிய உணவு (காலை 11:30-பிற்பகல் 3:30). என்ற அளவில் கிடைக்கும். 

#homecookedfood  #homemadefood #Zomato #ZomatoEveryday

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments