உணவுச் சங்கிலியில் முக்கியத்துவம் கொண்ட பூச்சிகள் பற்றி பயிற்சி முகாம்..
உலகின் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஒரு உயிரின கூட்டம் எது என்றால், அது "பூச்சிகள்" தான். நம்மை சுற்றி இருக்கும் அவை, சத்தமில்லாமல், உணவுச் சங்கிலியில் முக்கிய ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கின்றன.
அவை இன்றி நாம் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட பூச்சிகள் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், அறியச் செய்ய வேண்டும் என்ற சிறிய முயற்சி தான் இது. பூச்சிகள் பற்றி தெரிந்து கொள்ள தேனியில் வரும் அக்டோபர் 2ம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
Must Read: புரட்டாசி சனிக்கிழமை விரதம் தொடங்கியது….
இந்த நிகழ்வில் திரு பூச்சி செல்வம் அவர்கள், குழந்தைகளிடம் கலந்துரையாடுவதோடு பூச்சிகளோடு நேரடி அனுபவ வகுப்பும் எடுக்கிறார். பூச்சியல் நிபுணரான திரு பூச்சி செல்வத்தை தெரியாத விவசாயிகள் தமிழகத்தில் இருக்க முடியாது.
தொடர்ச்சியாக பல தளங்களில் எது நல்ல பூச்சி ,எது கெட்ட பூச்சி, எது நம் வாழ்வியலுக்கு அவசியமான பூச்சி என்கிற புரிதலை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்.
அவர்களோடு கற்றல் இனிது இணைந்து இம்முன்னெடுப்பை எடுத்து வைக்கிறது. அம்முயற்சியில் பங்கெடுக்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.இதில் பங்கேற்க 8 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டணம் இல்லை. மேலும் விவரங்களுக்கு; மருத்துவர். மு.பிரீத்தா நிலா அவர்களை 8098328205 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Comments