
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்
வேளாண் பயிற்சி முகாம்கள்
வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள்
மரபுவழி பயிற்சிகள்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
Also Read: கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்
இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
காய்கறித் - மாடித்தோட்டம் செயல்முறை ஒருநாள் பயிற்சிமுகாம்.
மனிதஇனம் ஒன்று மட்டும்தான் அடுத்த தலைமுறைக்கு எப்படி வாழனும் அப்படிங்கிற விஷயத்தை கத்துக் கொடுத்தும் கை மாற்றி கொடுத்துட்டும் போக வேண்டிய சூழ்நிலைல இருக்கு. நம்மாழ்வார்ஐயா சொன்ன ரெண்டு விஷயத்தை இப்ப நினைச்சு பார்க்குறேன், அறிவு அப்படின்னா என்ன? முதல்ல நம்மை பற்றி அறிந்துகொள்வதும் அப்புறமா நம்மை சுற்றி உள்ள சுற்றுப்புறத்தை பற்றி அறிந்து கொள்வதும்தான் அறிவு.
அப்படி நம்மை அறிந்து கொள்ளவும் நமது புறச்சூழலை புரிந்து கொள்ளவும் இக்கூடலை பயன்படுத்திக்கொள்வோம்.கூட்டுவாழ்க்கைக்கான வழிமுறைகளை உருவாக்கவும்,கற்றுகொள்ளவும், அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் வாருங்கள். பெருநகரம் எனும் பாலையில் நமக்கு ஆசுவாசம் அளிக்கும் வாழ்வை உருவாக்கிகொள்ள ஒன்றுகூடுவோம் நண்பர்களே..
இந்த ஒன்றுகூடலில் பாரம்பரிய காய்கறித் தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சிவகுப்பு நடக்க இருக்கிறது. இது வெறும் பயிற்சிவகுப்பா இல்லாம கூட்டு வாழ்கைக்கான துவக்க புள்ளியா இருக்கும்.
டிசம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி முதல் மாலை 4மணி வரை இயல்வாகை, குழந்தைகள் நூலகம், கதித்தமலை சாலை, ஊத்துக்களி - 638751, திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது.
25 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் 9942118080 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். மதிய உணவு, தேநீர், பயற்சி உட்பட ரூ.500 மட்டும் பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படும்.
பயிற்சியில் தோட்டம் அமைப்பதற்கான சூழலை அறிதல், விதைகளை தேர்வு செய்யவது பாதுகாப்பதற்கான வழிமுறைகள், தொழு மண்,மண் புழு உரம்,வீட்டுக் கழிவுகள் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பு, நீர் மற்றும் ஆற்றல்களின் சிக்கன பயன்பாடு, பூச்சிகளை அறிதல் மற்றும் இயற்கைவழியில் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, மூடாக்கு இடுதல், இடுபொருட்கள் தயாரிப்பு, கயிற்றுபந்தல் அமைப்பு, தோட்ட பராமரிப்பு, தற்சார்பு வாழ்வியல் வழிமுறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
ஒருநாள் முழுவதும் புதுநண்பர்களுடனான கூடுதலில் மேலும் கூட்டுச் சிந்தனையின் மகிழ்வினை உணருவோம் வாருங்கள்.
முகப்பு படம் நன்றி; Lattur Rathinam Shankar முநூல் பதிவு
#AgriEvents #OrganicTraining #NaturalLife
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments