கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்
நமது வீட்டில் உள்ள சமையல் அறையில் இருக்கும் பாரம்பர்யமான உணவுப் பொருட்களை கொண்டே நமது உடல் நலனை பேணி பாதுகாக்க முடியும். அந்த வகையில் நமது சமையலறையில் இருக்கும் பொருட்களின் நன்மைகள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆதனூரை சேர்ந்த திரு.ASNசாமி அவர்கள் தொடர்ந்து நமக்கு வழங்கி வருகிறார். இன்று கடுகு மற்றும் கடுக்காயில் உள்ள நன்மைகள் குறித்து அவர் கூறும் தகவல்களைப் பார்க்கலாம்.
கடுகு
சமையலில் தாளிப்பதற்கு பயன்படும் இது இந்தியாவில் வட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது இதில் கரும் கடுகு கடுகு என வகை உண்டு
மருத்துவ தன்மை
வாந்தி உண்டாக்குதல் மிகுதல் சிறுநீர் பெருக்குதல் செரிமான வேகத்தை மிகுத்தல் ஆகியவை கடுகை பொடித்து ஒரு கிராம் அளவுக்கு ஆல்கஹால் அல்லது பாயசத்தில் கலந்து காலை மாலை கொடுத்து வர உடலின் அக உறுப்புகளில் உள்ள மாசுக்களை அகற்றும் சிறுநீர் கற்களை அகற்றும் வலிகளை நீக்கும் நினைவாற்றல் உடல் பலம் செரிமான ஆற்றல் ஆகியவை மிகுக்கும்
கடுகுடன் சம அளவு முருங்கைப் பட்டை சேர்த்து அரைத்து பற்றுப்போட கை கால் குடைச்சல் மூட்டு வலி நரம்பு பிடிப்பு ஆகியவை குணமாகும் பற்றினால் எரிச்சல் உண்டானால் உடனே பற்றை அகற்றி கழுவி விடவேண்டும்
Also Read: ’எகிப்து நாட்டின் புதுமையான டாப் டக்கர் ’டக்கா மசாலா எப்படி செய்வது தெரியுமா?
10 கிராம் கடுகை பொரித்து கால் லிட்டர் நீரில் இட்டு ஊறவைத்து வடிகட்டிக் கொடுக்க விக்கல் உடனே நிற்கும் கடுகு எண்ணெயோடு 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிது கற்பூரம் கட்டி கூட்டி தடவி வர மூட்டு வலி மார்பு வலி தீரும் கடுகை பொடித்து அரிசி மாவுடன் கலந்து நீரில் பிசைந்து கறி போல் வேக வைத்து துணியில் தடவி வலி உள்ள இடங்களில் போட்டு வர வயிற்றுவலி வாத வலி தொண்டை வலி தீரும்
கடுக்காய்
கரும் பச்சையாக நீள்வட்ட இலைகளை மாற்றடுக்கில் கொண்ட ஓர் இலை உதிர் மரம் காய்கள் பளபளப்பாக நீண்ட உருளை வடிவத்தில் இருக்கும் காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பாரே இது சித்தர்கள் வாக்கு கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய் இளம்பிள்ளை தாய்க்கே 7 கடுக்காய் போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை உணர்த்துகின்றன
உடல் தேற்றுதல் பித்தம் தணித்தல் திசுக்களை இருக்கச் செய்தல் மலமிளக்கி சிரிக்க வைத்தல் உடல் உரமாக்குதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது கடுக்காய் 15 கிராம் கடுக்காய் பொடியுடன் 4 கிராம் கிராம்புப் பொடி சேர்த்து நூறு மில்லி நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து அதிகாலையில் கொடுக்க வயிற்று வலி இன்றி இரண்டு அல்லது மூன்று முறை மலம் கழியும்
Also Read: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்
இம்முறையை அவ்வப்போது பயன்படுத்தி வர அக வெப்பத்தை தணிக்கும் இரைப்பை பலப்படும் புலன் பொறிகளை சரிவர இயங்கும் வாயு மூலம் பவுத்திரம் வீக்கம் தலைவலி இதய நோய் ஆகியவை குணப்படும் ரத்தம் தூய்மை அடையும் கடுக்காய் கடுக்காய் பொடியை பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்து வர இரு வலி வீக்கம் ரத்தம் கசிதல் ஆகியவை குணமாகும்.
கடுக்காய் பொடியுடன் பாதி எடை திராட்சை கலந்து அரைத்து ஒரு கிராம் அளவாக காலையில் சாப்பிட்டு வர பித்த வாந்தி தலை சுற்றல் வாய் கசப்பு ஆகியவை தீரும் கடுக்காய் பொடியுடன் காய்ச்சுக்கட்டி சமன் கலந்து வைத்துக்கொண்டு சிறிது அளவு மருந்தை தேனில் குழைத்து நாவில் தடவி வர வாய்ப்புண் ஆறும் கடுக்காய் நெல்லி வற்றல் தான்றிக்காய் இவற்றை சமனெடை பொடித்து தேங்காய் எண்ணையில் அரைத்து ஆறாத புண்களில் பூசி வர புண்கள் விரைவில் ஆறும்
-ASNசாமி ஆதனூர்
#KadukaiBenefits #KadukuBenefits #MustardBenefits #PattiVaithiyam
Comments