’எகிப்து நாட்டின் புதுமையான டாப் டக்கர் ’டக்கா மசாலா எப்படி செய்வது தெரியுமா?


இந்தியாவின் பாரம்பர்ய மசாலா பொருட்களை கொண்டு வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மசாலா வகைகள் பெயர்தான் வேறாக இருக்கிறது. ஆனால், மசாலா வகைகளில் இருந்து கிடைக்கும் சத்துகள், உடல் நல நன்மைகள் ஒன்றுதான். ஒரே மாதிரி மசாலா வகைகளையே செய்து சாப்பிட வேண்டுமா என்று அலுத்துக்கொள்பவர்கள், எகிப்து நாட்டின் இந்த மசாலா வகையை முயற்சி செய்து பார்க்கலாம். 

Also Read: உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் மஞ்சள் பூசணியை உணவில் சேர்க்க மறக்க வேண்டாம்...

சீரகம் சேர்க்கப்படும் எகிப்து நாட்டின் பிரபலமான மசாலா வகை தான் ’டக்கா…’ பெயரில் புதுமை போல, சுவையிலும் புதுமை தான்!

இரண்டு ஸ்பூன் சீரகம், மூன்று ஸ்பூன் கொத்தமல்லி விதைகள் மற்றும் எள், ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் மிளகு… இவை அனைத்தையும் தனித்தனியாக இளம்வறுப்பாக வறுத்து, ஒன்றாக பொடி செய்துகொண்டு, அதில் ஒரு ஸ்பூன் காய்ந்த புதினா இலைகளை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். 

எகிப்து நாட்டின் டக்கா மசாலா செய்வது எப்படி?

தேவைக்கு ஏற்ப முந்திரியை தூளாக்கி சேர்த்துக்கொள்ளலாம். கடைகளில் வாங்கும் மசாலாக்களுக்கு பதிலாக எகிப்திய மசாலாவைப் பயன்படுத்துங்கள். உணவுகளில் புதுமையும் புத்துணர்வும் உண்டாகும்… 

டக்காவில் உள்ள நன்மைகள் 

டக்காவில் சேர்க்கப்படும் சீரகத்தால் வயிறு கோளாறுகள் சீராகும். நமது செரிமான மண்டலம் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும். டக்காவில் சேர்க்கப்படும் இன்னொரு பொருளான எள் காரணமாக வாயு தொல்லை குறையும். வயிற்றுக் கொதிப்பு, வலி போன்றவற்றையும் தீர்க்கக் கூடியது. 

Also Read: மென்சஸ் பிரச்னை தீர ஆடுதீண்டாப்பாளை சாறு...

டக்காவில் சேர்க்கப்படும் வெந்தையத்தில் அதிக நார்சத்துகள் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். இன்னொரு பொருளான மிளகு சேர்ப்பதால் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஜலதோஷம், நெஞ்சு சளி போன்றவையும் கட்டுப்படும்.மொத்தத்தில் இந்த டக்கா மசாலா ஆரோக்கியத்துக்கும் டக்கரான மசாலாதான். 

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S), நலக்கண்ணாடி

#DukkahMasala  #EgyptFoods #EgyptMasala  


Comments


View More

Leave a Comments