மென்சஸ் பிரச்னை தீர ஆடுதீண்டாப்பாளை சாறு...


மாதவிடாய் சீராகும்

காய்ச்சலையும் தீர்க்கும் 

பாம்பு விஷம் முறியும் 

தமிழ் பாரம்பர்ய மருத்துவமுறையில் பல்வேறு மூலிகைகள் நமது உடல் நலக் கோளாறுகளுக்கு தீர்வாக அமைந்துள்ளன. இன்று இரண்டு மூலிகைகள் குறித்தும் அதன் மருத்துவப் பயன்கள் குறித்தும் பார்க்கலாம். 

மாற்றடுக்கில் அமைந்த வெள்ளை பூச்சி உள்ள முட்டை வடிவ இலைகளை உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. செடியின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் மாதவிலக்கை தூண்டும் மருந்தாகவும் பேறு கால வலியை மிகுக்கும் மருந்தாகவும் பயன்படும் 10 மில்லி இலைச்சாறு காலை மாலை குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் குணமாகும் இலை சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் உட்கொள்ள பாம்பு விஷம் மலக் கிருமிகள் கருங் குட்டம் யானைத் தோல் சொறி தீரும் 

Also Read:தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

வேரை அரைத்து காலை மாலை 5 கிராம் கொடுக்க கடும் பத்தியத்தில் வைக்க புதுப்பானையில் உப்பில்லாத பச்சரிசி பொங்கல் 24 மணி நேரமும் தூங்க விடக்கூடாது மூன்று நாட்களில் எல்லாவித பாம்பு நஞ்சு முறியும் 

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் கோளாறு சீராக ஆடு தீண்டாப்பாளை

வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை தீர்ந்து சுகப் பேறு ஆகும் விதைச் சூரணம் 5 கிராம் விளக்கெண்ணையில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி சூதகத் தடை முறை காய்ச்சல் மகப்பேறின் போது வேதனை மலக்கிருமிகள் நீங்கும். 

ஆமணக்கு 

கொட்டைமுத்து என்றும் சொல்வார்கள் பொதுவான பயன்பாடுகள் இலை எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை இலை வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது நெய் மலமிளக்கும் தாது வெப்பு அகற்றும் இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவரப் பால் சுரப்பு மிகும்

தாய்பால் சுரக்க ஆமணக்கு

இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டிவர மூலக்கடுப்பு கீல்வாதம் வாத வீக்கம் ஆகியவை தீரும் ஆமணக்கு துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும் 

Also Read:ஆடாதோடை சாறு, தேன் கலந்து குடித்தால் மூச்சு திணறல் சரியாகும்...

ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து நான்காம் நாள் வேலை தி 30 மில்லி விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும் பசியின்மை வயிற்றுவலி சிறுநீர்ப்பாதை அழற்சி வெட்டை நீர்க்கடுப்பு மாதவிடாய்க் கோளாறுகள் இரைப்பிருமல் பாண்டு ஆறாத கட்டிகள் தொண்டை அழற்சி மூட்டுவலி ஆகியவை தீரும் கண் வலியின் போதும் கண்ணில் மண் தூசி விழுந்த போதும் ஓரிரு துளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும் 

நன்றி; ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம்

#CureForIrregularPeriods  #PattiVaithiyam  #AaduTheendaPalaiBenefits  #Amanakku   #AmanakkuBenefits 


Comments


View More

Leave a Comments