ஆடாதோடை சாறு, தேன் கலந்து குடித்தால் மூச்சு திணறல் சரியாகும்...


 ஆடாதோடை நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி தானாக வளரக்கூடியது இலை பூ வேர் மருத்துவ பயன் உடையவை சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும் 

இலைச் சாறும் தேனும் சம அளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி கோழை மிகுந்து மூச்சுத் திணறல் இருமல் இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும் குழந்தைகளுக்கு 5 துளி சிறுவர்களுக்கு 10 துளி பெரியவர்களுக்கு 15 துளி கொடுக்கலாம் 

ஆடாதொடை இலையுடன் தேன் கலந்து கொடுப்பது நல்லது

இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி ரத்தபேதி குணமாகும் 10 இலைகளை அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தேன் கலந்து காலை மாலை 40 நாட்கள் பருகி வர என்புருக்கிக் காசம் இரத்தக் காசம் சளி சுரம் தலைவலி நீங்கும் 

Also Read: அரைக்கீரையில் நெய் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் தெரியுமா?

ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்து சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு சுவாச காசம் சன்னி ஈளை இருமல் சளி ஜுரம் குடைச்சல் வலி ஆகியவை தீரும் 

ஆடாதொடை இலையையும் சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி காலை மாலை பருகி வர குட்டம் கரப்பான் கிரந்தி மேகப்படை ஊறல் விக்கல் வாந்தி வயிற்றுவலி தீரும் உலர்ந்த ஆடாதொடை இலைத் தூளை ஊமத்தை இலையில் சுருட்டி புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும் 

ஆடோதொடை நுரையீரல் நோய்களை குணப்படுத்தும்

700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில் அக்கரகாரம் சித்தரத்தை வகைக்கு 10 கிராம் லவங்கம் 10 கிராம் ஏலம் 4 ஆகியவற்றை தூள் செய்து போட்டு பொன் வறுவலாக வறுத்து இரண்டு லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக காய்ச்சி வடிகட்டி அதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதமாகக் காய்ச்சி ஆடாதோடை மணப்பாகு வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட வேண்டும். 

Also Read: செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு செய்யறது ரொம்ப சிம்பிள்

இதன் வாயிலாக நீர்க்கோவை தீரும் ஒரு நாளைக்கு 3 வேளையாக நீண்ட நாட்கள் கொடுத்து வரக் காசம் என்புருக்கி மார்புச்சளி கப இருமல் நீடித்த ஆஸ்துமா நிமோனியா ஆகியவை குணமாகும் குரல் இனிமையாக உண்டாகும் 

நன்றி: ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505

#AdathodaiLeaf  #AdathodaiLeafBenefits  #AdathodaiCureCold  #AdathodaiCureLungs 


Comments


View More

Leave a Comments