அரைக்கீரையில் நெய் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் தெரியுமா?
தமிழ்நாட்டில் பாரம்பர்யமாக நமது உணவில் சேர்த்துக்கொள்ளும் கீரை, கிழங்கு வகைகளில் அற்புதமான சத்துகள் நிறைந்துள்ளன. நமது முன்னோர்கள் உணவு முறையில் இடம்பெற்ற மூலிகைகள் நமது உடல் நலனைக் கருத்தில் கொண்டே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
நாளடைவில் உலகமயமதால் உள்ளிட்ட காரணங்களால் வெளிநாட்டு உணவுகளின் மோகத்தால் அவற்றையெல்லாம் நாம் மறந்து விட்டோம். மூலிகைகள் குறித்து அதன் நற்பயன்கள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணையை சேர்ந்த திரு.சாமி சொல்லும் தகவல்களை அவ்வப்போது இங்கே படிக்கலாம்.
அரைக்கீரை
அரைக்கீரை என்று பெயரில் விற்பனைக்கு வரும் கீரை தமிழகமெங்கும் பரவலாக பயிரிடப்படும் கீரை வகை சித்த மருத்துவத்தில் இதன் பயன்பாடுகள் நிறைய உண்டு
Also Read: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்
இளம் தண்டுடன் கூடிய இலைகள் சமைத்து உண்ணக் கூடியவை இதன் மருத்துவ குணம் காய்ச்சல் போக்குதல் கோழை அகற்றுதல் மலம் இறக்குதல் காமம் பெருக்குதல் ஆகிய குணங்களை உடையது.

அரைக் கீரையை நெய் சேர்த்து சமைத்து உண்டுவர நீர்கோவை சளிக் காய்ச்சல் குளிர் ஜுரம் விஷ ஜுரம் ஜன்னி பாத ஜுரம் டைபாய்டு ஆகியவை தீரும் ஏழு வகை உடற் சத்துக்களை பெருகி வலிவும் வனப்பும் உண்டாகும் பிடரி வலி சூதக சன்னி தீரும்
ஆகாச கருடன் கிழங்கு
ஆகாச கருடன் கிழங்கு கோவை இனத்தை சார்ந்த பெரும் கிழங்கு டைய ஏறு கொடி ஆகாச கருடன் கிழங்கு ஒரு கருடனுக்கு சமம் அதாவது கருடன் இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் நெருங்காது

அப்படித்தான் இந்த ஆகாச கருடன் கிழங்கை வைத்திருக்கும் வீட்டில் விஷ ஜந்துக்கள் வராது அதேபோல் எதிரிகளால் ஏவப்படும் பில்லி சூனியம் ஏவல் செய்வினை போன்ற கெட்ட சக்திகள் அணுகாது
Also Read: செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு செய்யறது ரொம்ப சிம்பிள்
கிழங்கை ஒரு சிறிய கயிற்றில் கட்டி வாசற்படியில் தொங்கவிட்டால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கிழங்கிலிருந்து கொடி பறக்க ஆரம்பிக்கும் அப்படி இந்தக் கிழங்கு வெகு விரைவாக தழைத்து விட்டால் வீட்டில் சுபிட்சம் ஆகிவிடும்
மருத்துவப்பயன் கசப்பு சுவை உடையது கிழங்கு மருத்துவப் பயனுடையது உடல் தேற்றவும் உடல்பலம் மிகவும் மருந்தாகும் கொட்டைப்பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50 மில்லி நீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய் நரி குரங்கு பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீரும் புளியங்கொட்டை அளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள் நஞ்சும் நீங்கும்.
நன்றி: திரு. ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505
#BestHerbals #BenefitsOfHerbals #AraiKeerai #AkasaKarudanKilangu

Comments
View More