தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்
வேளாண் பயிற்சி முகாம்கள்
வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள்
மரபுவழி பயிற்சிகள்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
சீர்தானிய மரபு திண்பண்டங்கள் செய்முறை பயிற்சி
ஊத்துக்குளியில் 'இயல்வாகை' நடத்தும்.சீர்தானிய மரபு திண்பண்டங்கள் செய்முறை பயிற்சி 28/11/21 - ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. முதல் பயிற்சியில் நிறைய பேர் ஆர்வத்துடன் கலந்துகொள்ள கேட்டிருந்தார்கள், பயிற்சி முடிந்த பிறகும் தொடர் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது, எனவே இரண்டாவது முறையாக இப்பயிற்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம்..
Also Read: செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு செய்யறது ரொம்ப சிம்பிள்
நம் குழந்தைகளை ரசாயனங்கள் கலந்த பாக்கெட் தீனிகளில் இருந்து விடுவித்து மரபு ரக உணவுகளில் குழந்தைகளுக்கு சுவையான திண்பண்டங்களைத் தர நினைக்கும் பெற்றோர்களுக்கும், சீர்தானியங்கள், மரபு ரக அரிசி வகைகள் குறித்த விழிப்புணர்வும், பயன்பாடும் பெருகி வரும் நிலையில் வீட்டிலிருந்தபடியே சீர் தானிய திண்பண்டங்கள் தயாரித்து பொருளீட்ட விரும்புபவர்களுக்கும் சிறந்த வாய்ப்பாகும்.
செயல்முறை பயிற்சியாகமாப்பிள்ளை சம்பா அரிசி, மிளகு தட்டுவடை, ராகி முடக்கத்தான், ஓலை பக்கோடா, தினை மிக்சர், தக்காளி மிக்சர், புதினா மிக்சர் ஆகியவை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் இளநீர் முறுக்கு, செவ்வாழை முறுக்கு, சின்ன வெங்காய முறுக்கு, பாலக்கீரை முறுக்கு, சின்ன வெங்காய முறுக்கு, புதினா முறுக்கு, கறிவேப்பிலை முறுக்கு, கருப்பட்டி முறுக்கு வகைகள் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வல்லாரை முறுக்கு, தூதுவளை முறுக்கு, முடக்கத்தான் முறுக்கு போன்ற மூலிகை முறுக்கு வகைகள் தயாரிப்பது குறித்தும் பயிற்சியில் விளக்கம் அளிக்கப்படும்.
உள்ளூர் விற்பனை மற்றும் ஏற்றுமதியின்போது பாக்கெட்டில் அடைக்கப்படும் தீனிகள் நீண்ட நாட்களுக்கு (Storage ல்) மொறுமொறுப்பு குறையாமலும், எண்ணெய் சிக்கு வாடை வராமல் இருப்பதற்கான தயாரிப்பு நுட்பங்கள் போன்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்படும்.
தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கான விற்பனை வாய்ப்புகள் குறித்தும் பயிற்சியாளர்கள் விளக்கம் அளிப்பார்கள். "நம்ம ஊரு சந்தை " யின் பெருமை மிகு பங்கேற்பாளர் பரமத்தி வேலூர். திரு.கணேசன் -( Cavery foods,) பயிற்சிகளை அளிக்க உள்ளார்.
Also Read: உயர் ரத்த அழுத்த ஆபத்தை ஏற்படுத்தும் உடல் எடையை குறைப்பது எப்படி?
திரு. கணேசன் அவர்கள் சீர்தானியம், மரபு அரிசி வகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திண்பண்டங்களை சுவையாக ( சமையல் சோடா, நிறமூட்டி, சுவையூட்டி எதுவுமில்லாமல்) தயாரிப்பதிலும், அதன் றுட்பங்களை பிறருக்கு பயிற்றுவிப்பதிலும் வல்லவர்..
பயன் பெற விழைவோர் 9942118080 என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்காக ரூ.500/- பங்களிப்பு செலுத்த வேண்டும். (பயிற்சியின்போது மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்) இயல்வாகை குழந்தைகள் நூலகம், ஊத்துக்குளி.திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெறும்.
#AgriEvents #OrganicTraining #NaturalLife
Comments