உயர் ரத்த அழுத்த ஆபத்தை ஏற்படுத்தும் உடல் எடையை குறைப்பது எப்படி?


உயர் ரத்த அழுத்த ஆபத்து 

கெட்டகொழுப்பால் அதிகரிக்கும் எடை 

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் 

மருத்துவர் அரவிந்த் ராஜின் ஆலோசனை

1. முதன்மை உயர் இரத்த அழுத்தம் (Primary Hypertension)

என்ன காரணி என்றே தெரியாமல் வரும் உயர் ரத்த அழுத்தம். 90 சதவிகித மக்களுக்கு ஏற்படுவது இவ்வகை உயர்ரத்த அழுத்தமே.

2. இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary Hypertension)

10 சதவிகித மக்களுக்கு மட்டும் ஏதோ நோயின் காரணமாகவோ, அல்லது உறுப்பு பாதிப்பு மூலமாகவோ உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

Also Read: நின்று கொண்டே உணவு உண்பது நல்லதா?

ஆனால், மருத்துவத்தின் தலைசிறந்த புத்தகமான Harrison தனது தற்போதைய பதிப்பில், இதுவரை 90% காரணமே அல்லாமல் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் உண்டாக மிக முக்கிய காரணம் 'உடலில் சேர்த்து வைத்துள்ள கெட்ட கொழுப்பு' என கூறியுள்ளது.

உடல் எடை அதிகரிப்பால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்

இப்படியாக, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, PCOD, தைராய்டு குறைபாடு என எங்கு சென்றாலும் 'உடல் பருமன்' குறுக்கே நந்தி போன்று வந்து நிற்கிறது.எனவே, மக்கள் இனிவரும் காலங்களில் தங்களுக்கு ஏற்படும் உடல் பருமனை கூர்ந்து ஆராய வேண்டும். பல வியாதிகளுக்கான பிள்ளையார்சுழி உடல்பருமன் என்பதால் அதை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்தல் அவசியம்.

INTERMITTENT FASTING என்னும் உண்ணாவிரத முறை எளிதில் உடல் எடையை குறைப்பது எப்படி? என்பதை இப்போது பார்க்கலாம். தென்னிந்தியர்களின் உணவுபழக்கம் என்பது மிக எளிது. காலையில் டிபன், மதியம் அரிசி சாதம், இரவு டின்னர், நடுவில் டீ, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீணிகளை உள்ளடக்கியதே நமது அன்றாட உணவு முறை.

Also Read: மழை காலத்திற்கு ஏற்ப உணவு முறையில் மாற்றம் தேவை...

நாம் உண்ணும் தென்னிந்திய உணவுகளில் அதிகம் இருப்பது கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து). இந்த மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்; இன்சுலின் மிக அதிக அளவில் சுரக்கும்; அதிக அளவு உருவான சர்க்கரை Triglyceride என்னும் கெட்ட கொழுப்பாக படிந்து தொப்பையாக மாறும்; உடல் எடை கூடும்.

கெட்ட கொழுப்பை குறைப்பது முக்கியம்

மூன்று வேளை உணவு, மூன்று வேளை நொறுக்குத்தீனி எடுத்துக்கொண்டேயிருப்பதால், இன்சுலின் சுரப்பும், அதன் பீட்டா செல்களும் பழுதடைந்து நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியும் வந்து சேரும். ஆக, உண்ணாவிரத முறை தான் எளிதில் எடை குறைய மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரசெய்யும் மாபெரும் யுக்தி.

உண்ணாவிரத முறை 16:8 என்ற முறையில் கடைபிடிக்கப்படுகிறது. அதென்ன 16:8 என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 16 மணி நேரம் - நிறைய தண்ணீர், உப்பிட்ட லெமன் ஜூஸ் மட்டும் பருகுவது. 8 மணி நேரம் - குறைமாவு, நிறை கொழுப்பு மற்றும் நிறை புரத உணவுகளை எடுத்துக்கொள்வது.உடனே, உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.டாக்டர்.... 3 வேளையும் ஒழுங்கா சாப்பிடலன்னா 'அல்சர்' வருமே??.

பதில் - கிடையாது. இந்த புவியில் உள்ள அனைத்து ஜீவராசிகளில் சரியாக மூன்று வேளையும் அலாரம் வைத்து உண்பது மனிதன் மட்டுமே. வேறுஎந்த உயிரினமும் மூன்று வேளையும் உண்பதில்லை. ஆதிமனிதனுக்கு அல்சர் இல்லை; அவன் என்ன மூன்று வேளை உண்டானா?? கிடையாது. வேட்டையாடி கிடைத்த உணவை உண்பான்; கிடைக்காத நேரத்தில் பட்டினியோடு இருப்பான்.

Also Read: சன்ஸ்கிரீனில் உள்ள துத்தநாக ஆக்ஸைடு நச்சாக மாறும் ஆபத்து...

இந்த 16:8 உணவுமுறையை தொடங்குவது எப்படி? இதை இரவு 8 மணிக்கு தொடங்கவும். இரவு 8 மணிக்கு உங்களுடைய முதல் உணவை எடுக்கவேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் மாவுச்சத்து 75 கிராமுக்கு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; நல்ல புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவான சிக்கன், மட்டன், முட்டை, பாதாம், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவை எடுத்த்துக்கொள்ளலாம். சமையல் எண்ணெயாக நெய்/வெண்ணெய்/தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உடல் எடையை குறைப்பது முக்கியம்

சாப்பிட்டு நீங்கள் தூங்கி விடுங்கள். அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு உங்கள் இரண்டாவது குறைமாவு உணவை உண்ணுங்கள். அதற்கு இடைப்பட்ட 16 மணிநேர காலம் தான் உங்களுடைய உண்ணாவிரத சமயம்.அந்த 16 மணி நேரத்தில் நீங்கள் நிறைய நீர் பருக வேண்டும்; உப்பிட்ட லெமன் ஜீஸ், உப்பிட்ட பிளாக் காபி, க்ரீன் டீ, மல்டிவிட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாம். இப்படியாக 8 மணி நேரத்தில் குறைவான மாவுச்சத்து உணவு உண்டு, 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் எளிதில் உடல் எடை குறையும்; இன்சுலின் அதிகம் தூண்டப்படாததால் சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

மேலும், விரதமுறை மூலம் 'Autophagy' எனப்படும் செல்கள் தன்னைத்தானே புதுப்பிக்கும் முறையை மேற்கொண்டு சரும பளபளப்பு, நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவையும் ஏற்படும்.உடல் எடை குறைக்க விரும்புவோர் இந்த உண்ணாவிரத முறையை பின்பற்றி ஆரோக்கியம் பெறுங்கள்.திரு.அரவிந்த ராஜ் அவர்களை 091235 64231 என்ற அவரது மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

~நன்றி; Dr.அரவிந்த ராஜ் முகநூல் பதிவுகள்

#CureHypertension  #WeightLoss #BadCholesterol #DRAravindRaj


Comments


View More

Leave a Comments