நின்று கொண்டே உணவு உண்பது நல்லதா?


 

உணவு சாப்பிடும் முறை 

நின்று கொண்டே சாப்பிடுவது நல்லதல்ல

உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது

உட்கார்ந்து ஆற அமர பொறுமையாக சாப்பிட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது. அதிவேகமான பரபரப்பான வாழ்க்கை  சூழலில் உட்காந்து சாப்பிடுவதற்கு நமக்கு நேரம் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் நிதானமாகவும் அனுபவிக்கவும் நேரம் இல்லை. போகிற போக்கில் பாஸ்ட்புட் உணவகத்தில் நின்று கொண்டே சாப்பிட்டோம் என்ற பெயரில் வாயில் அள்ளிப்போட்டு விட்டுச் செல்கின்றோம். பயணத்தின்போது அல்லது நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் நல்லதா?  நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

சாப்பிடும் முறை உங்கள் செரிமானத்தை எவ்வாறு பாதிக்கிறது?

இது பலருக்கு விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் தோரணை அதாவது சாப்பிடும் முறை உங்கள் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. படுத்துக் கொண்டே சாப்பிடும்போது அதிகமாக சாப்பிடுவதாக சிலர் சொல்கின்றனர். அப்படி சாப்பிடுவது அவர்களுக்கு வேண்டுமானல் திருப்திகரமாக இருக்கலாம். 

Also Read: மழைக் காலத்திற்கு ஏற்ப உணவு முறையில் மாற்றம் தேவை...

ஆனால் இது நிச்சயமாக செரிமானத்தை பாதிக்கிறது, ஏனெனில் வாயுவால் உப்புசம் ஏற்பட்டு வயிறு வீக்கம் ஏற்படும். அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். படுத்துக் கொண்டே சாப்பிடும் பழக்கம் கொண்ட பெண்கள் சிலரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இப்படி சாப்பிடுவதால் அசௌகரியத்தை அனுபவிப்பதாகவும், உட்கார்ந்து உணவு உண்பவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் உடலில் செரிமான செயல்முறை மெதுவாக இருப்பதாகவும் தெரியவந்தது.

சாப்பிட்ட உடன் நிற்பது பயனுள்ளதாக இருக்கும்

மற்றொரு ஆய்வின்படி, படுத்திருக்கும்போது அல்லது உட்கார்ந்து சாப்பிட்டாலும் கூட, சாப்பிட்டவுடன் நிற்பதுடன், நடப்பது விரைவான செரிமானத்திற்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. படுத்து கொண்டே சாப்பிடுவது மிகவும் மோசமான ஒன்றாகும். படுத்துக் கொண்டே சாப்பிடக் கூடாது. உட்கார்ந்து சாப்பிடுவதே சிறந்ததுசாப்பிட்ட பிறகு நடப்பது சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது  அப்படி செய்வதால் சுமார் 50 கலோரிகளை எரிக்க வழிவகுக்கிறது. இருப்பினும், இது நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்காது. ஏனெனில் எடையை பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமின்றி, எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியமாகும். 

நின்று கொண்டே சாப்பிடலாமா? 

​​எழுந்து நின்று சாப்பிடுவது கலோரிகளை எரிக்க உதவும் என்று உங்களில் பெரும்பாலோர் மகிழ்ச்சியடையலாம். இது ஆரோக்கியமான நடைமுறை அல்ல. நின்று கொண்டே சாப்பிடுவதால் உண்ணும் வேகம் அதிகரிக்கிறது. நின்று கொண்டே சாப்பிடுவதால் சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். 

உங்களுக்கு பசியை உண்டாக்குகிறதா?

நின்று கொண்டே சாப்பிடுவதன் மூலம் சிலர் சிரமமின்றி உடல் எடையை குறைக்கலாம் என்று நினைக்கின்றனர். சாப்பிட்ட பிறகு நடப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதன் மூலம், உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு சாப்பிடுவதைவிட நின்று கொண்டே சாப்பிடுவது பசியை உணர வைக்கிறது.

நெஞ்செரிச்சல் குறைக்க உதவுகிறது

நெஞ்செரிச்சல்,  ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு சாப்பிடும் போது நிற்பது உதவியாக இருக்கும். 

உட்கார்ந்து சாப்பிடுவதே நல்லது ஆரோக்கியமானது  

உண்மையில், நிமிர்ந்து நிற்பது செரிமான செயல்முறையை விரைவுபடுத்த உதவுகிறது. அமில ரிஃப்ளக்ஸ் வாய்ப்புகளை குறைக்கிறது என்று நிபுணர்களால் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. இது சில சந்தர்ப்பங்களில் வயிறு உப்பிசம் ஆகி வீக்கத்திற்கு வழிவகுக்கும், இது நபருக்கு நபர் மாறுபடும்.

உட்கார்ந்து சாப்பிடுவதே ஆரோக்கியமானது 

நின்று கொண்டே சாப்பிடுவது கலோரிகளை எரிக்க உதவும் என்று முடிவு செய்யலாம், ஆனால் இது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான நடைமுறை அல்ல. நின்று கொண்டே சாப்பிடுவதால் அதிகப்படியான உணவு உண்ணும் சூழல் ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் இது நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. 

Also Read:மழை நேரத்துக்கான இயற்கை உணவுகள் என்னென்ன சாப்பிடலாம்?

ஆனால் இது நிச்சயமாக ஒரு கவனமான உணவு முறை அல்ல. எனவே, எப்போதும் உட்கார்ந்து  சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது,  உட்கார்ந்து சாப்பிடுவது  நீங்கள் கவனமாக சாப்பிட உதவுகிறது. நீங்கள் உண்ணும் உணவில் இருந்து தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உங்கள் உடல் எடுத்துக் கொள்ள உதவுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

-ஆகேறன்

#HowToEat  #EatFoodOnstanting #EatFoodOnSitting  #HealthyEat #HealthyLifeStyle


Comments


View More

Leave a Comments