மழை நேரத்துக்கான இயற்கை உணவுகள் என்னென்ன சாப்பிடலாம்?


மழைக்கு ஏற்ற சிறந்த உணவுகள் 

மழை காலத்தில் வரும் நோய்கள் 

மழைகாலத்தில் உண்ண வேண்டிய உணவுகள் 

வடகிழக்குப் பருவமழை, தென்மேற்கு பருவமழை காலகங்களில்தான் தமிழ்நாட்டுக்கு போதுமான மழை கிடைக்கிறது. மழைகாலங்களில் போதுமான மழை பெய்வதால்தான் விவசாயத்துக்கும், குடிநீருக்குமான தண்ணீர் நமக்கு கிடைக்கிறது. எனவே இந்த மழையை கண்டு அச்சப்படத் தேவையில்லை. மழை நமக்கு அவசியம் இந்த மழைகாலத்தில் நாம் எந்தமாதிரி உணவுகளை சாபிடலாம் என்று பார்க்கலாம். 

முருங்கை விதை 

மழைக்காலம் என்பதால் ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக வயதானவர்கள் பலர் இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். குளிர்ந்த உணவுகளைத் தவிர்த்து சூடான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது என்று எல்லோரும் சொல்லும் தகவலாக இருக்கலாம். அதுவும் முக்கியம். 

Also read: காற்று மாசுபாட்டில் இருந்து உங்களை பாதுகாக்கும் பானங்கள்

அதேவேளையில், நன்கு காய்ந்த முற்றிய முருங்கைவிதையை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துச் சாப்பிட்டு வருவது பலன் தரும். ஒரேயடியாக சாப்பிடாமல் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று என சாப்பிடலாம்.

முருங்கை விதை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது

இதுதவிர வழக்கமான டீ, காபியைத் தவிர்த்து ஒருநாள் ஆடாதொடை இலையுடன் மிளகு, பனங்கற்கண்டு நீர் சேர்த்து கொதிக்கவைத்து குடிக்கலாம். இதேபோல் அதிமதுரத்துடன் மிளகு அல்லது வால்மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்கலாம். கற்பூரவல்லி இலை அல்லது திருநீற்றுப்பச்சிலை அல்லது துளசி இலைகளுடன் மிளகு, வெற்றிலை சேர்த்து கொதிக்க வைத்து வெறுமனேயோ பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம்.

முசுமுசுக்கை, கல்யாண முருங்கை தோசை 

இவைதவிர முசுமுசுக்கை இலைகளை அரைத்து தோசைமாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிடலாம். இன்னொருநாள் கல்யாண முருங்கை இலையை அரைத்து மாவுடன் கலந்தும் சாப்பிடலாம்.

மாலைச் சிற்றுண்டியாக கல்யாணமுருங்கை இலையை பொடிப்பொடியாக நறுக்கி உளுந்து அல்லது கடலை பருப்பு அரைத்த மாவுடன் கலந்து வடை சுட்டு சாப்பிடலாம். கற்பூரவல்லி இலையை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிடலாம். இரவு வேளைகளில் இட்லி, இடியாப்பம் என எளிதில் செரிமானமாகும் உணவாக இருக்கட்டும். மல்லித்தழை, கறிவேப்பிலை சட்னி அல்லது தூதுவளை சட்னி நல்லது. பகல் வேளையில் மாதுளை மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கக் கொடுக்கலாம்.

Also read: இயற்கை உணவுக்கு மாறியதால் குணம் பெற்றவரின் அனுபவ கட்டுரை

இவற்றைச் செய்தால் நிச்சயம் ஆஸ்துமா தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம். இதுபோன்று வயதான காலத்தில் முதியோருக்கு வரும் மற்ற பிரச்சினைகளில் இருந்தும் காத்துக்கொள்ள அவர்களுக்கென ஒரு சிறப்பு இல்லம் நடத்தலாம் என்ற திட்டமும் உள்ளது. மற்ற இல்லங்களைப்போல அல்லாமல் இதுபோன்ற நலம் காக்கும் முதியோர் இல்லம் தொடங்குவது பற்றிய யோசனை இருக்கிறது. இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். நேரம் கூடும்போது அதை நடைமுறைப்படுத்தலாம்.

-எம்.மரியபெல்சின்.(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#HealthyDietForRainSeason #DietForRainySeason #WhichIsHealthyAtRain #FoodForRain #FoodForMonsoon 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments