
இயற்கை உணவுக்கு மாறியதால் குணம் பெற்றவரின் அனுபவ கட்டுரை
இயற்கை உணவால் எடைகுறைந்தது
இயற்கை உணவே நல்லது
மூலிகை தேநீர் வகைகள்
நமது உணவுப் பழக்கத்துக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காஃபி, தேநீர் குடிப்பதால் மனம் லேசாகும் என்று நினைக்கின்றோம். அவை சிறிது நேரம் நமக்கு உற்சாகம் தரலாம். ஆனால், எந்த விதத்திலும் நமது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை அளிக்காது. நமது இயற்கை உணவுகளே என்றைக்குமே நமது உடலுக்கும் மனதுக்கும் நம்மை பயக்கும். அண்மையில் முகநூல் பதிவு ஒன்றில் தமிழ்ச்செல்வி ஜெகதீசன் என்ற சகோதரி தமது அனுபவத்தை பதிவு செய்திருந்தார். அந்த பதிவை இங்கே வெளியிடுகின்றோம்.
எடை குறைந்தது
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் அப்பாவின் இழப்பை நினைத்து உடல் நிலை மோசமானது.அந்த சமயத்தில் பால் டீ,காஃபி ஒரு நாளைக்கு 3 வேளை பருகினேன்.பிறகு அதிலிருந்து மீள முதலில் பால் டீ, காஃபி பழக்கத்தை அடியோடு நிறுத்த தொடங்கினேன்.ஒரு வருடமாக பால் காஃபி,டீ நான் அருந்துவது இல்லை.அதனால் உடல் எடை குறைய ஆரம்பித்தது.
பிறகு தினமும் ஏதாவது ஒரு மூலிகைத் தேநீர் நடைப்பயிற்சி என தொடர்ந்து 21 நாட்கள் நானும் எனது கணவரும் மேற்கொண்டோம்.எனது முகநூல் பக்கத்தில் தினம் ஒரு மூலிகைத் தேநீர் என பதிவு செய்து இருக்கின்றேன்.
மூலிகை தேநீர் குடிப்பது நல்லது
பிறகு அதுவே பழக்கம் ஆகிவிட்டது.தற்போது எங்கள் தோட்டத்தில் துளசி, கற்பூரவள்ளி, முசுமுசுக்கை, தூதுவளை, முடக்கற்றான் வைத்து இருக்கிறேன். தேவைப்படும்போது தேநீர் தயாரிக்க இவை போதுமானதாக இருக்கின்றது.என் மகன்கள்தான் யூடியூப் சேனல் ஆரம்பித்து இந்த நல்ல விஷயத்தை நான்குபேரிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
Also Read:மழைகாலத்தில் என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்று தெரியுமா?
என் கணவர் ஜெகதீஷன் விருப்பமிருந்தால் செய் எனக் கூறிவிட்டார். என் மகன் யூடியூப் எடிட்டிங் வேலைகள் கவனிக்கிறார். முதலில் தேநீர் வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோவை பதிவேற்றம் செய்தேன்.
கற்பூரவள்ளித்தேநீர் தயாரிப்பது பற்றிய என்னுடைய முதல் வீடியோ வெளியானது. தொடர்ந்து ஆறு விதமான மூலிகைத் தேநீர் குறித்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்து இருக்கின்றேன்.அண்மையில் துளசி, பசுமஞ்சள்,தேநீர் குறித்து பதிவேற்றம் செய்து இருக்கின்றேன்.இந்த தேநீரின் சுவை நன்றாக இருக்கிறது.
பூண்டு, பசுமஞ்சள், தேங்காய் கலந்த உணவு
தற்போது அடுத்த கட்டமாக உடல்நிலையை சீராக்க பூண்டு, பசுமஞ்சள், தேங்காய் கொண்ட உணவுப் பொருட்களை கடந்த ஒரு மாதமாக எடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.அதுவும் எனக்கு நல்ல பலனைத்தருகிறது.
Also Read:சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாமா?
பூண்டு பசுமஞ்சள் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு உணவில் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன். பூண்டு, பசுமஞ்சள், தேங்காய் சேர்த்து சப்பாத்தி, தோசை என விதம் விதமான உணவுகளை சமைப்பது குறித்தும் பதிவேற்றம் செய்து இருக்கின்றேன்.
பூண்டு, பசு மஞ்சள், தேங்காய் தோசை செய்முறை
தேவையான பொருட்கள்; வீட்டில் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவு எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் சேர்ப்பதற்காக ,பூண்டு, பசுமஞ்சள், தேங்காய் மூன்றும் சேர்த்து விழுதை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். மரச்செக்கு தேங்காய் எண்ணெய் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
தோசை மாவுடன் பூண்டு, பசுமஞ்சள், தேங்காய் விழுதை தேவையான அளவு சேர்த்து தோசையாக வார்க்க வேண்டியதுதான்.உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்னியுடனோ , சாம்பார் உடனோ சாப்பிடலாம். பச்சைப்பட்டாணி குருமாவுடன் நான் சாப்பிட்டேன். சுவை அருமையாக இருந்தது. இயற்கை உணவே நமது உடல்நலத்துக்கு நல்லது.
நன்றி; தமிழ்ச்செல்வி ஜெகதீசன் முகநூல் பக்கம்; ;https://www.facebook.com/tamilselvi.palanivelan
#FoodForWightLoss #OrganicFoodForWightLoss #HealthyFoods #HerbalTea
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments