சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாமா?


லவங்கப்பட்டை ஒரு பொதுவான மசாலா பொருளாகும். இது இனிப்பு, நுட்பமான சுவை, வாசனைக்கு பெயர் பெற்றது. ஆனால் இந்த பழங்கால மசாலாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் சேர்த்து அந்த தண்ணீரைக் குடிப்பது  உடலில் இன்சுலின் உணர்திறன் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இலவங்கப்பட்டை தேநீர் என்றும் அழைக்கப்படும் இலவங்கப்பட்டை தண்ணீர் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

இலவங்கப்பட்டை தண்ணீர் நன்மைகள் 

இலவங்கப்பட்டை, குறிப்பாக சிலோன் இலவங்கப்பட்டை ஆரோக்கியமானதாகும். சக்திவாய்ந்த மருத்துவப் பொருளாக  அறியப்படுகிறது. இந்த மசாலா பல பழங்கால மருந்துவ முறைகளில் பல நோய்களைக் குணப்படுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

Also Read: அன்னம் மறுக்கப்பட்ட விவகாரம் நரிக்குறவப்பெண்ணுடன் உணவு உண்ட அமைச்சர்

இலவங்கப்பட்டையை தண்ணீரில் ஊறவைத்து உட்கொள்வது நமது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது, இது ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. 

இலவங்கபட்டை தண்ணீரால் ஏரள நன்மைகள் உள்ளன

அதுமட்டுமின்றி, வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பதன் வாயிலாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க முடியும். இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் இந்த தண்ணீரை குடிக்கலாமா? 

வேளாண் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 1 கிராம் இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக்கொள்வது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் மற்றும் வகை-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. 

Also Read: நம்மாழ்வாரின் சிந்தனைகளை உள்வாங்கி தெளிவு பெறுவது அவசியம்

இலவங்கப்பட்டையில் உள்ள ஆண்டிபயாடிக், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும், நிர்வகிக்கவும் உதவும். உண்மையில், உங்கள் தினசரி உணவில் சிறிதளவு இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், சிறந்த செரிமானத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றி, தூக்கத்தைத் தூண்டுவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.

இலவங்கப்பட்டை தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஒரு டம்ளரில் ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து,1 அங்குல இலவங்கப்பட்டை மற்றும் 2-3 எலுமிச்சை துண்டுகளை சேர்க்கவும். இரவு முழுவதும் ஊற வைத்து, நாள் முழுவதும் பானத்தை கொஞ்சம், கொஞ்சமாக குடிக்கலாம். .

இலவங்கபட்டை தண்ணீர் குடிப்பது நல்லது

 

இதுதவிர 2 கப் தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும், இந்த தண்ணீரை ஒரு கிளாஸில் ஊற்றி, அதில் 2 சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்படியும் இலவங்கப்பட்டை தண்ணீரை தயாரித்து குடிக்கலாம். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை ஆரோக்கியத்துக்கான ஒரு தகவல் மட்டுமே. எந்த ஒரு பரிந்துரையையும் மருந்துவரிடம் கேட்டபிறகு செயல்படுத்துவது நல்லது. 

-பா,கனீஸ்வரி 

#CinnamonWater   #HealthyOfCinnamonWater  #CinnamonBenefits  #Diabetes


Comments


View More

Leave a Comments