அன்னம் மறுக்கப்பட்ட விவகாரம் நரிக்குறவப்பெண்ணுடன் உணவு உண்ட அமைச்சர்


மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அன்னதானத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவப் பெண்ணுடன் அமர்ந்து உணவு உண்டது சமூக நீதியின் உரிமையை வலியுறுத்தும் அம்சமாக பார்க்கப்படுகிறது. 

கோயில்கள், கடவுள் எல்லோருக்கும் பொது என்று சொல்லப்பட்டு வந்தாலும், கோயில்களில் ஒரு சிலர் மட்டும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, எளியவர்களை அவர்களின் தோற்றத்துக்காக, ஜாதிக்காக வெறுத்து ஒதுக்குவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

Also Read: நம்மாழ்வாரின் சிந்தனைகளை உள்வாங்கி தெளிவு பெறுவது அவசியம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள  ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டத்தின்கீழ் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 

 

அன்னதானம் மறுக்கப்பட்ட பெண்ணுடன் அமைச்சர் சேகர்பாபு உணவு உண்டார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பங்கேற்க அந்த பகுதியை சேர்ந்த நரிக்குறவர் பெண் அஸ்வினி தன் குழந்தையுடன் வந்திருந்தார். பசியோடு நீண்டநேரம் காத்திருந்த நிலையில், அன்னதானம் தொடங்கும் நேரத்தில் முதல் பந்தியில் அமரப்போனார். அங்கு வந்த சிலர் இதனை தடுத்து நிறுத்தியதுடன் அவரை திருப்பி அனுப்பி விட்டனர். இது குறித்து மனம் நொந்த நரிக்குறவப் பெண் மன வருத்த த்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது வைரலாகப் பரவியது.

இந்த விவகாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது அறிவுறுத்தலின் பேரில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மாம்மல்லபுரம் சென்றார். சம்பந்தபட்ட கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். 

Also Read: வயிற்று வலியை தடுப்பதற்கான வழிமுறைகள் வீடியோ செய்தி

பின்னர் அன்னதானத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் பெண்ணை வரவழைத்து கோயில் வளாகத்தில் அமர்ந்து, மதிய உணவை சாப்பிட்டார்.இதன் மூலம் இந்த அரசு எல்லோருக்குமானது என்பதை உறுதி படத் தெரிவித்திருக்கிறார். சமூக நீதி நிலை நாட்டப்பட்ட தமிழ்நாட்டில் இதுபோல அவ்வப்போது சிலர் தங்களது சொந்த சமூக நீதியை திணிக்கும்போது அது விமர்சனத்துக்கு உள்ளாகிறது. மீண்டும் சமூக நீதியை நிலை நாட்டவேண்டிய தேவை எழுகிறது. இத்தகையோர் இனியாவது திருந்தவேண்டும். 

நரிக்குறவப் பெண்ணுடன் அன்னதானம் உண்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, “இது தொடர்பாக, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.  அந்தப் பெண் உட்பட அனைத்து பக்தர்களுடனும் கோயில் வளாகத்தில் அன்னதானத்தில் பங்கேற்றேன்,” என்று கூறினார். ,தமிழ்நாட்டின் இதர கோயில்களில் நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். 

-பா.கனீஸ்வரி 

#TembleAnnadhanam #AnnadhanamScheme   #DeniedEntryOfAnnadhanam  #DeniedAnnadhanamForNarikuravarWoman

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

 


Comments


View More

Leave a Comments