தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்
வேளாண் பயிற்சி முகாம்கள்
வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள்
மரபுவழி பயிற்சிகள்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
Also Read: ’’எகிப்து நாட்டின் புதுமையான டாப் டக்கர் ’டக்கா மசாலா எப்படி செய்வது தெரியுமா?
இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம் காந்திக் கிராமத்தில் உள்ள ஊழியரகமும், தாய்வழி இயற்கை வாழ்வியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்ற "இயற்கை உணவுத் தயாரிப்பு" பயிற்சி வருகிற சனவரி 9, 2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. இயற்கையான சத்துள்ள உணவுகள் தயாரிப்பு முறைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், கீரைச்சாறுகள் தயாரித்தல்,பல்வேறு வகையான நலந்தரும் சுவையான சமைக்காத உணவுகள் தயாரித்தல்,மூலிகைச் சாறுகள் தயாரிப்பு, இயற்கை உணவுகளின் மூலம் நோய்களைத் தீர்க்கும் கலை, சந்தைப்படுத்தல் போன்றவை குறித்து பயிற்சியில் விளக்கப்படும்
Also Read:உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் மஞ்சள் பூசணியை உணவில் சேர்க்க மறக்க வேண்டாம்...
சிவகாசி மாறன்ஜி பிஎன்ஒய்எஸ் அவர்கள் பயிற்றுநராக பயிற்சி அளிக்க உள்ளார். 2022ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஞாயிறு காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணமாக ரூ.500/- மட்டும். (உணவு உட்பட) வசூலிக்கப்படும். பயிற்சி கட்டணத்தை வரும்போது செலுத்தினால் போதுமானது.பயிற்சிக்கு வருபவர்கள் அவசியம் பதிவு செய்ய வேண்டும்.முன்பதிவிற்கு திரு. காந்தி அவர்களை 9600460581 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.laftitn@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
லாஃப்டி((LAFTI)), ஊழியரகம்,காந்திகிராமம், திண்டுக்கல் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. இயற்கை உணவுகளைப் பரவலாக்கவேண்டும், மக்கள் மையப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கில் அறப்பணிகள் ஆற்றி வரும் எங்களது பணிகள் உங்கள் மூலமாக உங்கள் ஊரில் தொடர வேண்டும் எனும் முனைப்புடன் வாருங்கள்.பயிற்சியின்போது கொரோனா தொற்று தடுப்பு விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
தகவல் நன்றி; பாமயன் முகநூல் பதிவு
#AgriEvents #OrganicTraining #NaturalLife
Comments