இயற்கை வாழ்வியல் குறித்த 2 பயிற்சிகளை தவற விடாதீர்கள்…


பாரம்பரிய மருத்துவ பயிற்சி 

மாறிவிட்ட உணவுமுறை மற்றும் பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தத்தில் தொடங்கி சர்க்கரை நோய், குழந்தையின்மை குறைபாடு, ஆண்மைக்குறை, மாதவிடாய்க்கோளாறு மற்றும் கருப்பை கட்டி என பல்வேறு உடல்நலக்கோளாறுகள் வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிறது. 

இவற்றிலிருந்து விடுபட நமது பாரம்பரிய மருத்துவத்தில் சில எளிய வழிமுறைகள் உள்ளன. அதற்கான ஒருநாள் பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலில் நடத்தப்படும் இந்தப்பயிற்சியின்போது மூலிகைகள் இனம் காண்பது, நலம் பெற்றவர்களின் அனுபவ பகிர்வுகளும் இடம்பெறும். கலந்துகொண்டு பலன்பெறுங்கள்.

Must Read: இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக்கூடாத கட்டுரை…

செம்பருத்தி மூலிகை மருத்துவம் சார்பில் நடைபெறும் இந்த பாரம்பரிய மருத்துவ பயிற்சி வரும் 18 ஆம் தேதியன்று கழனி இயற்கை பண்ணை, 2/121 ராஜா தெரு, கொட்டிவாக்கம், சென்னை-600041 என்ற முகவரியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். 

மூலிகை ஆர்வலர் திரு. மரிய பெல்சின் அவர்கள் பயிற்சி அளிக்கிறார். பயிற்சியில் பங்கேற்க முன் பதிவு அவசியம். முன்பதிவுக்கு 9551486617 ,   7401702380 ஆகிய எணகளில் தொடர்பு கொள்ள வேண்டும். பயிற்சி நன்கொடையாக  ரூ.750  வழங்கப்படும். பயிற்சியின் போது மதிய உணவு வழங்கப்படும். 

சோற்றுக் கற்றாழை மதிப்புக்கூட்டல் பயிற்சி

வானகத்தில் சோற்றுக் கற்றாழை மதிப்புக்கூட்டல் பயிற்சி  வரும் 11-06-2023 அன்று நடைபெற உள்ளது. இதில் இயற்கை வாழ்வியல் மற்றும் தற்சார்பு பொருளாதாரத்திற்கு நலம் தரும் " நற்குமரி சோற்றுக்காற்றாழையின் " பங்கும் பயனும்பற்றிய செய்திகளும், செயல்முறை விளக்கங்களும் இடம் பெறும்.

பயிற்சியாளர் அலோவெரா அய்யா “ இராம.சண்முகம் “ அவர்கள் பயிற்சி அளிக்கிறார். 11-06-2023 ஞாயிற்றுக்கிழமையன்று  காலை 10.00 முதல் மாலை 05.00 வரை பயிற்சி நடைபெறும். 

வானகம் – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெறும். பயிற்சி நன்கொடையாக ரூ 600/-(non-refundable) வசூலிக்கப்படும். மதிய உணவு வழங்கப்படும்.

சோற்றுக்கற்றாழை மதிப்புக்கூட்டல் பயிற்சி

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation : A/C No: 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank Name : Indian Overseas Bank,

Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu 

பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு 86680 98495,   94458 79292 , 86680 98492 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியின் போது வெளியிலிருந்து கொண்டுவரும்  உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது. பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு : https://vanagam.org https://vanagam.page.link/app

#Nammalvar_people_forum #organicfarming #organic #naturallifestyle


Comments


View More

Leave a Comments