இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக்கூடாத கட்டுரை…
இயற்கை வேளாண்மை செய்ய விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தடாலடியாக இயற்கை வேளாண்மை என இறங்கி நஷ்டமடைவர்களும் அதிகம் பேர் உள்ளனர். இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவோருக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித்தர நம்ம ஊரு சந்தை களம் இறங்கி இருக்கிறது. அதே போல திருமதி ஆரண்யா அல்லி என்ற இயற்கை விவசாயி மற்றும் அவரது குழுவினர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட விரும்புவோருக்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர். இந்த இரண்டு தகவல்களும் இங்கே அவர்களின் எழுத்துகள் வாயிலாக ஒரு சேர வழங்கப்படுகிறது.
நம்ம ஊரு சந்தை மூலம் தேடி வரும் வாய்ப்பு
இயல்வாகை இயற்கை வழி உழவர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட இயற்கை வழி உழவாண்மை செய்து கொண்டிருக்கும் உழவர்களை சந்தித்து, அனுபவங்களையும் வழிமுறைகளையும் கேட்டறிந்து, சிறப்பாக உழவு முறை செயது கொண்டிருக்கும் உழவர்களின் வழிமுறைகளையும், அனுபவங்களையும் செல்லும் தோட்டங்களில் பகிர்கிறோம்.
Must Read: இயற்கை வாழ்வியல், உணவு கட்டுப்பாடு மூலம் சர்க்கரை நோய் குணமாகுமா?
உழவர்களின் உற்பத்திப் பொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் நேரிடையாக பயனாளர்களை சென்றடைய சந்தைப்படுத்தலுக்கு " நம்ம ஊரு சந்தை " மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம்.
அந்த வகையில் திருப்பூர் - பல்லடம் செல்லும் சாலையில் அருள்புரம் அருகே திரு.சதீஷ்குமார் அவர்களின் தோட்டம் பார்வையிட்டோம்.தென்னை, பப்பாளி, கொய்யா, சப்போட்டோ, முள் சீதா, முருங்கை, வாழை, சுண்டக்காய் என கலப்பு பயிர் சாகுபடி முறையில் உழவு செய்து வருகிறார்.

இதுபோக அடுத்து காய்கறி, கீரைகளும் கலப்பு பயிர் சாகுபடியில் செய்ய இருக்கிறார்.திருப்பூர் சார்ந்த கம்பெனி வேலை செய்துகொண்டே பகுதி நேரமாக வேளாண்மையும் செய்து வருகிறார். இளைஞர்கள் வேளாண்மையில் அதிக அளவில் ஈடுபடுவது வரவேற்கப்பட வேண்டிய செயல். விவசாயம் என்பது வியபாரமல்ல. அது ஒரு வாழ்க்கைமுறை. (இயல்வாகை அமைப்பைத் தொடர்பு கொள்ள 9942118080 என்ற மொபைல் எண்ணில் அழைக்கவும்)
சூடேறிக் கிடந்த நிலம் குளிர்மை கொண்டதாக மாறியது…
நண்பர் டேனியல் இயற்கை_வேளாண்மையில் ஆர்வம் உள்ள நண்பர். பணி செய்வது சாஃப்ட்வேரில். விவசாய_நிலம் வாங்குவது குறித்து எங்களிடம் ஆலோசனைக்கு வந்த பொழுது, நாங்கள் சொன்ன முதல் கருத்து எக்காரணம் கொண்டும் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட வேண்டாம் என்பதுதான்.
ஏனென்றால், ஏதோ ஒரு தவறான வழிகாட்டுதலைப் பின் தொடர்ந்து வேலையை விட்டு விவசாயம் செய்ய வந்த பல இளைஞர்களின் கண்ணீர் கதையைக் கேட்டுக் கேட்டு மனம் வருந்திக் கொண்டிருக்கிறோம் என்பதால். டேனியலின் பட்ஜெட் என்ன, அவரின் விருப்பங்கள் என்ன, என்பதை நன்குத் தெளிவு படுத்திய பிறகு சில ஆலோசனைகளைக் கூறினோம்.
Must Read: பணம் கொடுத்து வாங்கினாலும் உணவை வீணாக்கக்கூடாது…
அதன்படி ஒரு சில இடங்களை அவருடனே சென்று பார்வையிட்டு இந்த இடம் அவருக்குப் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியதால் வாங்கச் சொன்னோம். நிலம் வாங்கிய பிறகு ஒவ்வொரு வேலையாகத் தொடங்கினோம்.
தண்ணீர்அமைப்புகள், காய்கறி தோட்டத்திற்கான நிரந்தரவேளாண்மை Permaculture படுக்கைகள், ஏற்கனவே இருந்த மாமரங்களுக்கான தண்ணீர் வசதிகள் என்று ஒவ்வொன்றாக உடன் நின்று செய்தோம் (கட்டணம் வாங்கிக்கொண்டுதான்). இது சரளைச் செம்மண் பூமி எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் உடனடியாக உலர்ந்து விடக் கூடிய நிலம்.

ஆனால் பலவிதமான பயிர் வகைகளின் விளைச்சலுக்கு மிகவும் ஏதுவான அருமை மண். நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான் மண் கண்டம் ஈரப்பதம் இல்லாமல் பொடியாக இருப்பதை மாற்றி அங்ககத்தன்மையை இணைத்து நீர்ப்பிடிப்பை மேம்படுத்துதல். இதைச் செய்து விட்டாலே போதும். மற்றவற்றை இயற்கைத் தானாகவே பார்த்துக் கொள்ளும் என்பதைச் சொன்னோம்.
அதன்படியே தொழுஎரு மற்றும் இலைதழை குப்பைகளால் நிறைத்தோம். அந்த நிலத்தில் பெர்மாகல்ச்சர் பாத்திகள் அமைக்கப்பட்டது. மற்றொரு பகுதியில் பலதானியப்பயிர் விதைத்தோம். விவசாயத்தின் எந்த ஒரு தொடர்பும் இல்லாத முதல் தலைமுறை விவசாயியான டேனியல் அருமையான மாணவராக இருந்தார்.
இயற்கையை அதன் மேன்மையை பொறுமையாகக் கற்றுக் கொள்பவராகவும் இருந்தார். துளி ரசாயனம் இல்லை. சூடேறிக் கிடந்த நிலம் இன்று பொதுபொதுப்பும் குளிர்மையும் கொண்டதாக மாறி இருக்கிறது. அணில்கள், முயல்கள், பாம்புகள், கீரிகள், ஓணான்கள், பறவைகள், பூச்சிகள், வண்ணத்திகள், மண்புழுக்கள் என பன்மயமானதொரு உயிர்ச்சூழல் நிலவும் அழகிய பிரதேசமாக மிளிர்கிறது.
"தாயின் மார்பைப் பிளந்து ரத்தம் குடிக்கும் வெறி அல்ல......அவளின் மார்பில் துளிர்க்கும் அமுதத்தை மட்டுமே பருகும் பழங்குடி நாமாவோம்". இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் இருந்தாலும் ஒரு கிணற்றின் பயன்பாடு தான் இதுவரை. இன்று எங்கள் நிலத்தில் விளைந்தவை என்று அவர் கொண்டுவந்துக் கொடுத்த காய்கறிகள் கீரைகளை விடப் பெருஞ்செல்வம் வேறு உண்டா? (ஆரண்யாஅல்லி அவர்களை 9600800221 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். )
#organicfarming #organicagriculture #organic
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

Comments
View More