இயற்கை வாழ்வியல், உணவு கட்டுப்பாடு மூலம் சர்க்கரை நோய் குணமாகுமா?
சர்க்கரை நோயாளிகள் காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக கொய்யா இலை, சீத்தா மர இலை போன்றவற்றை நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதை வெறும் பானமாகக் குடிக்கலாம். வெறுமனே அருந்துவது சாலச் சிறந்தது. கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
வாரத்தில் இரண்டு நாட்கள் நெல்லிக்காய், பாகற்காய் சேர்த்து அரைத்த ஜூஸ் குடிக்கலாம். ஒரு நெல்லிக்காய் எடுத்துக்கொண்டு அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக பாகற்காய் சேர்த்து அரைத்து வடிகட்டிக் குடிக்கலாம். அதன்பிறகு காலை உணவாக பழங்கள் சாப்பிடுவது நல்லது.
Must Read: பணம் கொடுத்து வாங்கினாலும் உணவை வீணாக்கக்கூடாது…
ஆம்... சர்க்கரை நோய்க்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. 200, 300 என்று இருந்தவர்களில் தொடங்கி இன்சுலின் ஊசி போடுபவர்கள் என சர்க்கரை நோயால் சிரமப்பட்ட பலரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். நம்பிக்கையூட்டும் இந்த மருத்துவத்தை நீங்கள் செய்வதற்கு மிக குறைவாக செலவிட வேண்டியிருக்கும்.
மாதந்தோறும் மருந்து மாத்திரைக்கு செலவழிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. சர்க்கரை நோயினால் மட்டுமல்ல அதற்கு சாப்பிடும் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்தும் நீங்கள் விலக முடியும். வென்றெடுத்த பலர் உள்ளனர்.
ஜனவரி மாசத்துல ரெண்டு, மூணு ஃபங்ஷன்க்கு போனதால பிரியாணி, பொரிச்ச மீனுன்னு தொடர்ந்து சாப்பிட்டிருக்கார் எழுபதைத் தாண்டிய அந்த ஆண். போன எடத்துல சாப்பிட தர்றதை சாப்பிடாம இருக்க முடியாதே. அதுமட்டுமில்ல கூட வந்தவங்கள்லாம் சாப்பிடும்போது இவர் மட்டும் சும்மா இருக்க முடியுமா என்ன?
வயசு எழுவதை தாண்டுனாலும் உடம்பை கட்டுக்கோப்பா வச்சிருக்கிறவர்தான். ஆனாலும் அவருக்கு உடம்பு எச்சரிக்கை கொடுத்ததால ப்ரஷர், சுகர் டெஸ்ட் பண்ணுனதுல கொஞ்சம் தாறுமாறா இருந்திருக்கு. அவர் அப்பப்போ மூலிகை, கீரை, காய்கறின்னு சாப்பிடக்கூடியவர். அப்படியிருந்த எனக்கே இப்படியான்னு நம்மகிட்ட ஆலோசனை கேட்டார்.
ஏற்கெனவே சில இயற்கை மருந்துகளை சாப்பிட்டாலும் நம்ம சொன்னபடி முழு எலுமிச்சம்பழத்தையும் இஞ்சியையும் சேர்த்து தண்ணி விட்டு கொதிக்க வச்சி குடிச்சார். அதோட பாகற்காய் வேப்பிலை பாதக்குளியலையும் மூணு நாள் செஞ்சார்.
Must Read: தவறவிடக்கூடாத இயற்கை வேளாண்மை, வாழ்வியல் பயிற்சிகள்…
இன்னும் சில விஷயங்களை செஞ்சதுல இப்போ எல்லாம் நார்மல். பிப்ரவரி மாசம் எடுத்த ப்ளட் டெஸ்ட்டுல வெறும் வயித்துல சுகர் 120, சாப்பிட்ட பிறகு 247. அதேமாதிரி ரத்தத்துல உள்ள ட்ரைகிளிசரைடுன்னு சொல்லக்கூடிய ஒருவகை கொழுப்பு 551 இருந்திச்சி.
நாம சொன்ன வழிமுறைகளை பின்பற்றி மார்ச் மாசம் ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்க்கும்போது ஃபாஸ்டிங் சுகர் 99, சாப்பிட்ட பிறகு 168; ட்ரைகிளிசரைடு 186. அடுத்ததா ஏப்ரல் மாசம் டெஸ்ட் பண்ணும்போது ஃபாஸ்டிங் சுகர் 98, சாப்பிட்ட பிறகு 151; ட்ரைகிளிசரைடு 84.6. மே மாதம் ஃபாஸ்டிங் சுகர் 77, சாப்பிட்ட பிறகு 138; ட்ரைகிளிசரைடு 162.9 என இருந்தது.
- எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617
#diabetescare #treatmentfordiabetes #diabetescarecontrol
Comments