தவறவிடக்கூடாத இயற்கை வேளாண்மை, வாழ்வியல் பயிற்சிகள்…


சென்னையில் இயற்கை மாம்பழம் திருவிழா வரும்  04 ஆம் தேதி தாம்பரம் - வள்ளுவர் குருகுலம் பள்ளி வளாகத்தில்  வள்ளுவம் இயற்கை சந்தை - நம்மாழ்வார் மக்கள் குழு ஆகியவற்றின் சார்பில் நடைபெற உள்ளது. 

இயற்கை விளைபொருட்களை வாங்கிட நுகர்வோரின் ஆதரவு மட்டுமே இயற்கை விவசாயம் செய்யவும் அவை சார்ந்த மதிப்புக்கூட்டு உற்பத்தி செய்திடவும் வழிவகை செய்யும் .. ஆகவே அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம். சந்தை நிகழ்வில் தன்னார்வலர்களாக பங்காற்ற விரும்பும் நண்பர்கள்  மற்றும் நுகர்வோரின் தேவைகளும் யோசனைகளுக்கும்.  9566667708 என்ற எண்ணில் அழைக்கவும். 

Must Read: அதிக இனிப்பு அதிக ஃப்ரக்டோஸ் உணவுகளை உண்டால் ஆபத்து ஏன் தெரியுமா?

தூய இயற்கை உணவுகள் காய்கறி - கீரைகள் - பாரம்பரிய அரிசிகள் - சீர்தாணியங்கள் - பருப்பு வகைகள் - சமையல் பொடி வகைகள் - குழந்தைகளுக்கான மரபு திண்பண்டங்கள் -  சமையல் மண்பாண்டங்கள் -  துணி பைகள் - சணல் கைவினை பொருட்கள்  ஆகியவை மாம்பழ திருவிழாவில் கிடைக்கும். 

மாம்பழத் திருவிழா

மேலும்  பனை ஓலை பொருட்கள் - சிற்பங்கள் - ஓவியங்கள் என இயற்கை சார்ந்த    பொருட்களின் நேரடி விவசாயிகளும் மதிப்புக்கூட்டு உற்பத்தியாளர்களுமாக ஒருங்கிணைந்த ஆர்கானிக் விற்பனை சந்தை நடைபெற உள்ளது. 

இயற்கை விவசாய பொருட்களின் சந்தையுடன் , இயற்கை உணவு / இயற்கை விவசாயம் / இயற்கை மருத்துவம் / சுற்றுச்சூழல் குறித்த ஆழமான கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்கள்‌ மற்றும் கொண்டாட்டமான பாரம்பரிய விளையாட்டுகள் நிகழும் .

இயற்கையில் விளைந்த  பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள்,   சீர்தானியங்கள் ,  தூய செக்கு எண்ணெய்கள் ,  மசால் வகைகள்  , மாவு - பொடி வகைகள், மலைத்தேன், மரபு திண்பண்டங்கள்,  மரபு விளையாட்டு பொருட்கள், மண்பாண்ட பொருட்கள் , நாட்டு விதைகள் , இயற்கையில் மதிப்புக்கூட்டு பண்டங்கள்  அனைத்தும்‌ கிடைக்கும்.

சந்தை நடைபெறும் இடம்; இடம்  :  வள்ளுவர் குருகுலம் உயர்நிலைப் பள்ளி , ஜி.எஸ்.டி சாலை, தாம்பரம் மேற்கு ( பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில்) , சென்னை.  ஒருங்கிணைப்பாளர்:  வெற்றிமாறன்.இரா மேலும் தொடர்புக்கு : 9566667708 /  7448558447


அடுப்பில்லா சமையல் பயிற்சி 

ஆரோக்யத்தை இல்லந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில் ஜுன் 10 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் ஞாயிறு மாலை 4 மணி வரை   அழகு மலை சாரலில் அமைந்துள்ள மெளனம் இயற்கை பாடசாலையில்*  இயற்கை உணவில் உலக சாதனை படைத்த  கோவை ஸ்ரீஈசன்  குருஜி  நடத்தும். அடுப்பில்லா சமையல் பயிற்சி பட்டறை & பஞ்ச சுத்தி முகாம்  நடைபெற உள்ளது. 

நமது இல்லத்தில் ஆரோக்கியம் அளிக்கும் அடுப்பில்லா உணவுகளை தயாரிக்க. இயற்கை அங்காடி, இயற்கை தயாரிப்பில் உணவகங்கள் அமைத்திட. இயற்கை உணவு தயாரிப்பு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக... இந்த பயிற்சி ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுப்பில்லா சமையல் பயிற்சி

பயிற்சி அளிக்கப்பட உள்ள இயற்கை உணவு வகைகள் தயாரிப்பு:

ஜூஸ் வகைகள், கீர் வகைகள், மில்க் ஷேக், சாலட் வகைகள், இயற்கை இட்லி, இயற்கை பால், தயிர், உப்புமா, கிச்சடி,பிரியாணி, லட்டு வகைகள், துவையல், பச்சடி பொங்கல், சட்னி, பானகங்கள், நொறுக்கு தீனிகள்,  மூலிகை சாறுகள் இன்னும் பல இயற்கை உணவு வகைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

ஆரோக்கியமான இயற்கை உணவு, மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.  ஜுன்10 சனிக்கிழமை காலை 8மணி  முதல் ஞாயிறு மாலை 4 மணி வரை இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம் : மெளனம் இயற்கை பாடசாலை. செம்பருத்தி தோட்டம், அழகு மலை அருகில், திருப்பூர் மாவட்டம். கட்டணம்: ஒரு நபர்க்கு 2500/- முன்பதிவு விபரங்களுக்கு செல்: 85083 07617 8610823072

பொதிகையில் களப்பயில்கை 

பல்கலைக்கழகம், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் பிற ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்போது பொதிகைச் சோலையில் களப்பயில்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பாமயன் அவர்களின் தலைமையிலான குழுவினரின் வழிகாட்டுதலின்படி பயிற்சி பெறுகிறார்கள்.

Must Read: மாங்காய்களை பழுக்க வைத்து உண்ணுங்கள்…

பொதிகைச் சோலை வாழ்வூர் நூறு ஏக்கர் பரப்பளவில் மேற்குமலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் பொதிகைமலைச் சாரலில் அமைந்துள்ள ஒரு கூட்டுப் பண்ணையுடன் கூடிய வாழ்வியல் கல்வி நிறுவனம். இங்கு வேளாண்மை, கைத்தறி, கட்டுமானம், சுற்றுச் சூழல், திணை வாழ்வு போன்ற தற்சார்புநெறி சார்ந்த களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. 

அணிநிழற்காடு எனப்படும் உணவுக் காடுகள், உழாமல் செய்யும் வேளாண்மை, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இடுபொருள் தயாரிப்பு, போன்ற வேளாண்மை சார்பான கற்கை அனுபவங்களும், கைத்தறி நெசவு, நூல் நூற்றல், போன்ற தற்சார்பு நெசவு முறைகளும் கற்றுத்தரப்படும். 

அறிவு விளையாட்டுகள், பனையோனை தயாரிப்புகள், பனை உணவுகள் நன்னல உணவுகள், மூலிகை தயாரிப்புகள் போன்ற பலவும் உள்ளன.ஆர்வமுள்ளவர்கள் களப்பயில்கைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: சரவணன் - +91 80722 15581

#Nammalvar_people_forum #organicfarming #organic #organicmarketing #naturallifestyle

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments