நெகிழி வரி விதிக்கலாம் பசுமை சாகுல் முன்வைக்கும் யோசனை


மாற்றுவழி கண்டுபிடிக்காத வரையில் நெகிழி பயன்பாட்டை தடுப்பது கடினம். நம் அன்றாட வாழ்வில் நெகிழி இறண்டற கலந்து விட்டது. ஒரு பல்பொருள் அங்காடியை எடுத்து கொண்டால் அதில்  90 சதவிகிதம் பொருட்கள் நெகிழி சட்டை அணிந்தே இருக்கும்.

பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் மேல் சுற்றியிருக்கும் நெகிழி பொதியில் அனுமதிக்கப்பட்ட நெகிழி என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கும். அதுவே ஒரு ஏமாற்றுத்தான். பிளாஸ்டிக் எப்போதும் பிளாஸ்டிக்தான். 'மைக்கிரான் அளவு மாறினால் மட்டும் அவை மண்ணிற்கு உரமாகிவிடுமா என்ன. பயன்பாட்டில் இருந்து நெகிழியை விலக்க முடியாது. ஆனால் நெகிழியில் இருந்து பூமியை காப்பாற்றலாம்.

Must Read: ஷவர்மா ஏன் விஷமாகிறது? டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா விளக்கம்

அது எப்படி சாத்தியம்.நெகிழி கழிவுகளுக்கு ஒரு நல்ல விலை தரப்பட வேண்டும். ஒரு கிலோ நெகிழி கழிவை அரசே 50 ரூபாய்க்கு பொதுமக்களிடமிருந்து பெற்றுகொள்ள வேண்டும். மாநகராட்சிகள் முதல் ஒவ்வொரு ஊராட்சி வரை இதற்காக ஒரு பிரிவு ஏற்படுத்தி ஊழியர் நியமிக்க படவேண்டும். அதுதான் நெகிழி பிரிவு.நெகிழி பிரிவு மூலம் பொதுமக்கள் கொண்டு தரும் நெகிழி கழிவுகளை பெற்றுகொண்டு அதற்கான தொகை தரப்பட வேண்டும். பிறகு பாருங்கள் ஊரில் எங்குமே நெகிழி கழிவுகள் சிதறி கிடக்காது.

பிளாஸ்டிக்கை ஒழிக்க புதுமையான யோசனை

சரி... ஒரு கிலோ நெகிழி கழிவிற்கு 50 ரூபாயா... தொகை அதிகமாக இருக்கிறதே. ஆம்... தொகை அதிகமாக இருந்தால்தான் வீடு,கடை,பொது என நெகிழியை சேகரித்து பொறுப்பாக ஒப்படைப்பார்கள். பலர் இதை ஒரு தொழிலாக கூட மேற்கொள்ளலாம். மிட்டாய் கவரிலிருந்து பால் கவர் வரையிலும் சேகரித்து வைத்து கொள்வார்கள். லைகளிலோ,குப்பைகளிலோ கூட நெகிழியை காண முடியாது.

சரி... இந்த திட்டத்திற்கு நிறைய செலவாகுமே எப்படி சமாளிப்பது, ஆம். செலவுதான். ஆனால் அதை சுலபமாக சமாளிக்கலாம். மறுசுழற்சிக்கு அளிப்பதம் மூலம் பத்தில் இருந்து பதினைந்து சதவிகிதம் தொகை கிடைக்கும். மீதமுள்ள தொகைக்கு நெகிழி வரி என்ற ஒரு புது வரி உருவாக்கப்பட வேண்டும்.

Must Read: புற்றுநோய் செல்களை அழிக்க வேப்பம் பூ சாப்பிடலாம்…

ஊறுகாய் முதல் சேமியா வரை... கின்லே முதல் பெப்ஸி வரையில் தன் தயாரிப்புகளை பிளாஸ்டிக் கவர் மற்றும் புட்டிகளில் அடைத்து விற்கும் நிறுவனங்களுக்கு இரண்டில் இருந்து ஐந்து சதவிகிதம் வரை நெகிழி வரி விதிக்கலாம்.

வியாபார நிறுவனங்கள், பல் பொருள் அங்காடிகள், சிறிய மற்றும் பெரிய கடைகள் என தரம் பிரித்து மாதம் ரூ. 50 முதல் 250 வரை நெகிழி வரி விதிக்கலாம்(சராசரியாக 100 ரூபாய்).வீடுகளுக்கு மாதம் ரூ.25 வீதம் நெகிழிவரி விதிக்கலாம். ஒரு நகராட்சியில் 100 கடைகளும் 5000 வீடுகளும் இருக்கிறது என்றால் 100×100 = 10000, 25× 5000= 1,25,000 ஆக மொத்தம் ஒரு லட்சத்து முப்பத்தி ஐந்தாயிரம். மறு சுழற்சி மூலம் 15 ஆயிரம். மாதம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நெகிழி வரியாக கிடைக்கும். இதன் மூலம் நெகிழி பணியாளர் சம்பளமும், நெகிழி கழிவுகளுக்கான தொகையினையும் தாராளமாக வழங்கலாம். நெகிழி கழிவுகளில் இருந்து பூமியை காப்போம்...!

படம், செய்தி; நன்றி; பசுமை சாகுல்

#BanPlastic #PlasticTax  #HowToAvoidPlastic 


Comments


View More

Leave a Comments