சென்னையில் 12 ஆம் தேதி நடக்கும் பயிற்சியை தவறவிடாதீர்கள்..


சென்னையில் இந்த வாரம் 12ஆம் தேதி  நம்மாழ்வார் மக்கள் குழு ' வின சார்பில் வள்ளுவம் இயற்கை சந்தை கூடல் மற்றும் சிறப்பு பயிற்சி  நடைபெற உள்ளது. 

இயற்கை சந்தை கூடல் மற்றும் சிறப்பு பயிற்சி

சென்னை அடையாறில் வரும் 12ஆம் தேதி  ஞாயிற்று கிழமை நம்மாழ்வார் மக்கள் குழு ' வின சார்பில் வள்ளுவம் இயற்கை சந்தை கூடல் மற்றும் சிறப்பு பயிற்சி  நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. 

குழந்தைகளுக்கான கலை பழகுதல் பயிற்சி முகாம் துவக்கம், *முப்பரிமான பாறைகள் சிற்ப வடிப்பு ஓவிய வண்ணம் தீட்டுதல், Origami - காகித மடிப்பு பொம்மைகள், கதை_பாடல் விளையாட்டு  கற்றல் ஆகியவை கற்றுத்தரப்படும். 

Must Read: உண்ணும்போது குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது ஏன் தெரியுமா?

குழந்தைகளுக்கான பயிற்சி கட்டணம்: ₹500 - மதிய‌ உணவு வழங்கப்படும் பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு: செய்ய 9566667708 / 8610457700 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.  .

பிப்ரவரி 12ல் இயற்கை வாழ்வியல் பயிற்சி

காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மாடித்தோட்டம் & வீட்டுத்தோட்டம் செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.  வள்ளுவம் வெற்றிமாறன் பயிற்சி அளிக்கிறார். இதற்கான கட்டணம்:₹500 - மதிய உணவு வழங்கப்படும். பயிற்சிக்கான முன்பதிவுக்கு 9566667708 , 8610457700 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.  .

இயற்கையில் விளைந்த தரமான உணவு பொருட்கள் கிடைக்கும். இதற்கு அனுமதி இலவசம்.  பாரம்பரிய அரிசி வகைகள்  /  பருப்பு வகைகள்  /   சீர்தானியங்கள்  /  தூய செக்கு எண்ணெய்கள்  /  மசால் வகைகள்  /  மாவு - பொடி வகைகள்  /  மலைத்தேன்  /    மரபு திண்பண்டங்கள்  /   மரபு விளையாட்டு பொருட்கள்  /  மண்பாண்ட பொருட்கள் / நாட்டு விதைகள் / இயற்கையில் மதிப்புக்கூட்டு பண்டங்கள்  அனைத்தும்‌ கிடைக்கும் .

நிகழ்விடம் :  குமார ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி , 3வது கிராஸ் , காந்திநகர் , அடையார் , சென்னை . 

கூகுள் வரைபடம் : Kumara Raja Muthiah School  https://maps.app.goo.gl/hDQFPS96uDV91LDy9 

மேலும் விவரங்களுக்கு  திரு. வெற்றிமாறன் அவர்களை  9566667708 / 7448558447  ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

முகப்புப்படம்; முந்தைய நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்டதாகும்

#valluvam_organic_farming  #Nammalvar_people_forum  #organicfarming  #organicfarmingtraining  

Comments


View More

Leave a Comments