
உண்ணும்போது குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது ஏன் தெரியுமா?
இன்னொரு பேஷன்ட் நண்பர் மூலம் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார்.
"என்ன ரிசல்ட் பாசா ? Easy delivery ஆச்சு தானே?
" நிஜமாவே உங்களுக்கு நன்றி சொல்லத் தான் வந்தேன் டாக்டர். பல மாசமா அவதிப்பட்டு வந்த முக்கியமான செரிமான பிரச்சினைக்கு உங்களைப் பார்த்தப்பறம் தான் ஒரு தீர்வு கெடச்சுது.
செரிமானம் எப்படி நடக்கிறது?
அவருக்கு நாட்பட்ட மலச்சிக்கல், அஜீரணம், gastritis. அரைமணி நேரம் அமர்ந்து அவருக்கு class எடுத்து ஆலோசனைகள் தந்ததில் அவரது rest room நேரம் கணிசமாக குறைந்து, "நியூஸ் பேப்பர்" சில நாட்களாக ஹாலில் உட்கார்ந்து படிக்கும் அளவு "முன்னேற்றம்". இதற்கு முன் வரை எங்கே படித்தார் என்று அவரைக் கேளுங்கள்
Must Read: பழங்களை அதன் சாதக பாதகங்கள் அறிந்து உண்ண வேண்டியது முக்கியம்
இயல்பாகவே வயது அதிகரிக்க அதிகரிக்க இந்த வயிறு படுத்தல் கொஞ்சம் சகஜம் தான். "கல்லை மண்ணைத் தின்னாலும்" கப் என்று இள வயதில் ஜீரணிக்கும் வயிறும் குடலும் 40 வயதுக்கு மேல் கொஞ்சம் 'மக்கர்' பண்ணி விடுகிறது. நம்ப சாப்பாடு உணவு மற்றும் ஜீரண மண்டலத்தில் மூன்று இடங்களில் சிறிது சிறிதாக, செரிமானம் ஆகிறது.
உணவு வாயில் விழுந்த உடன் முதல் instalment செரிமானம் ஆகத் துவங்கும். இதற்கு முக்கிய தேவை, வாயில் இயல்பாக சுரக்கும் உமிழ் நீர் (saliva). உமிழ் நீரில், நம் உணவில் உள்ள மாவுச்சத்து எனப்படும் carbohydrates சத்துக்கள் செரிக்க உதவும் "சலிவரி அமைலேஸ்" (salivary amylase) என்ற நொதிகள் (enzymes) உள்ளன.
உணவு உமிழ் நீரில் கலப்பது முக்கியம்
அதனால் தான் நம் முன்னோர்கள் சாப்பிடும் போது பேசக் கூடாது என்று அறிவுறுத்தி னார்கள். பேசிக் கொண்டே சாப்பிட்டால் உணவு உமிழ் நீரில் சரியாக கலக்காமலேயே உள்ளே சென்று விடும். இட்லி, தோசை, சாதம், இடியாப்பம், உருளைக்கிழங்கு, பொங்கல் போன்ற உணவுகள் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள். இவை உமிழ் நீரில் சரியாக கலக்க வேண்டும்.
முன்னோர்கள் இன்னொன்றையும் சொல்வார்கள் "நொறுக்கி தின்றால் நூறு வயது". அதாவது உணவை அப்படியே அவசரம் அவசரமாக முழுங்காமல் மெதுவாக பற்களில் அரைத்து உமிழ் நீரில் கலந்து பிறகு முழுங்க வேண்டும். அடுத்த இடம் வயிறு. இங்கு புரதம் மற்றும் கொழுப்பு உணவுகள் செரிமானம் ஆகின்றன. மாவுச்சத்து இங்கு செரிமானம் ஆவதில்லை. ஆனால் பின்னர் குடலில் முழுவதும் செரிமானம் ஆகத் தேவையான சில முன்னேற்பாடுகள் மட்டும் நடக்கின்றன
புரதமும் கொழுப்பும் வயிற்றில் செரிமானம் ஆவதற்கு உதவும் நொதிகள் (proteases and lipases,) மற்றும் பித்த நீர் மற்றும் பித்த உப்பு (bile acids and bile salts) இங்கேயும் பிற இடங்களில் இருந்தும் வந்து சேருகின்றன. இவை புரோட்டினையும் கொழுப்பையும் உடைத்து அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆக (இவைதான் எளிதாக ரத்தம் மூலம் திசுக்கள் மற்றும் செல்களை அடைந்து அங்கு எரிக்கப் பட்டு சக்தி மற்றும் வளர்ச்சிக்கு உதவுகின்றன) மாற்றுகின்றன
உணவில் புளி, எலுமிச்சை சேர்ப்பதன் காரணம்
இதைத் தவிர உணவு செரிமானம் ஆகத் தேவையான முக்கிய பங்கு வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள வெப்பநிலை மற்றும் அமிலநிலை ஆகும் (temperature and pH) உணவு செரிமானம் ஆக முக்கிய பங்கு வகிக்கும் நொதிகள் 30°C வெப்பநிலை மற்றும் 5.5 pH அளவில் முழு வீச்சில் வேலை செய்கின்றன.
எனவே தான் உணவு உண்ணும் போது வென்னீர் குடிப்பது இந்த வெப்பநிலை நொதிகள் அடைய உதவும். செரிமானம் நன்கு நடக்கும். 5.5 pH க்கு தேவையான சூழலை உருவாக்கும் வகையில் நம் முன்னோர்கள் நம் உணவில் புளி, எலுமிச்சை, ஊறுகாய், மோர் இவற்றை சேர்த்துள்ளனர் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.
வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் இதை இன்னும் ஈடு செய்ய வல்லது. உணவு வயிற்றுக்கு வந்ததும் அங்கு ஏற்படும் அசைவுகள் உணவைப் புரட்டித் தந்து செரிமானம் ஆகத் தேவையான உதவிகளை வழங்கும். வென்னீர் பருகுவது இதற்கு மேலும் வலு சேர்க்கும்.
உண்ணும்போது குளிர்பானங்கள் அருந்துதல் மற்றும் குளிர்ந்த தண்ணீர் அருந்துவது ஏன் கெடுதல் என்று இப்போது புரியும் என நினைக்கிறேன். அடுத்த இடம் குடல். இங்கு நொதிகள் மற்றும் இதர காரணிகள் உதவியால் மாவுச்சத்து முழுவதும் செரிமானம் ஆகி குளூக்கோஸ் என்ற சர்க்கரை ஆக மாற்றப்படும்.
Must Read: ஆணின் உயிரணுக்களை எதிர்த்த பெண்ணின் உடல்; குழந்தையின்மை சிகிச்சையின் வெற்றிக்கதை
உணவு பல்வேறு கார்போஹைட்ரேட் வகைகள் கொண்டவை
உருளை மற்றும் இதர கிழங்குகள், அரிசி, கோதுமை மற்றும் இதர தான்யங்கள் இவற்றில் இருக்கும் சர்க்கரை ஸ்டார்ச் (Starch) என்று சொல்லப்படும் பால் சர்க்கரைக்கு : லேக்டோஸ் (Lactose) என்று பெயர் பழங்களில் உள்ள சர்க்கரை : ஃபிரக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் (Fructose, Glucose) வெல்லம், நாட்டு சர்க்கரை, கற்கண்டு, பனங்கற்கண்டு, இத்யாதிகளில் இருக்கும் சர்க்கரை : சுக்ரோஸ் (Sucrose)
மனிதனால் செரிமானம் செய்ய முடியாத செல்லுலோஸ் (CellulOse) தான் புல் மற்றும் வைக்கோல் போன்ற பொருட்களில் உள்ள சர்க்கரை. நல்ல காலம் பகவான் கருணை. வாயில்லா ஜீவன்கள் பிழைத்துக் கொள்ள.மனிதன் உடலில் இந்த "செல்லுலோஸ்" சர்க்கரைக்கு செரிக்க உதவும் "CellulAse" என்ற நொதிகள் இல்லை. Pl note the spelling Cellulose and CellulAse.
இங்கே அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு கார்போஹைட்ரேட் உணவு சாப்பிட்டாலும் முடிவில் அது குளூக்கோஸ் என்ற சர்க்கரை ஆகத்தான் மாற்றப்படும். இனிப்பான பழங்கள், மேல் சொன்ன சுக்ரோஸ் வகைகள் மற்றும் இனிப்பே இல்லாத மற்ற வகை மாவுச்சத்து உணவுகள் எதுவாயினும் அதன் இறுதி வடிவம் குளூக்கோஸ் மட்டுமே. இந்த குளூக்கோஸ் தான் ரத்த ஓட்டத்தில் கலக்கும்.
நாம் சாப்பிடும் இட்லி துகள்களோ, ஜாங்கிரி துகள்களோ, சாப்பாடு துகள்களோ ரத்தத்தில் கலக்கா. எல்லாமே குளூக்கோஸ் தான் குடலில் மேல் தொங்கும் தந்துகிகள் மூலம் செரிமானம் ஆன குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உரிஞ்சப்பட்டு ரத்த ஓட்டம் மூலம் செல்களை அடைந்து அங்கு சக்தி உண்டாகும்.
ஆகவே இந்த அமைப்பில் ஏற்படும் தொந்தரவுகள், மாற்றங்கள் செரிமானம் ஆவதற்கு சிரமத்தை ஏற்படுத்தும். சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது புளி ஏப்பம், வயிறு வலி, வாயுத் தொந்தரவுகள், மலச்சிக்கல், வாய்த் துர்நாற்றம் இவற்றின் காரணிகள்
இந்த ஆலோசனைகள் பின்பற்றிப் பாருங்கள்:
1) ஒவ்வொரு உணவு முடிந்ததும் 200 மிலி வாய் பொறுக்கும் சூட்டில் குடிநீர்
2) காஃபி, டீ ஒரு நாளைக்கு அதிக பட்சமாக இரண்டு முறை மட்டுமே
3) வெறும் வயிற்றில் இவற்றை குடிக்காமல் இருப்பது
4) மாலை வேளையில் 4மணிக்கு மேலும் இரவிலும் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது
5) மசாலா, கிழங்குகள், எண்ணெய் பலகாரங்கள் குறைத்து உண்ணுவது
6) இரவு உணவுக்கு பின் 90 நிமிடங்கள் முழித்து இருந்து பிறகு படுப்பது
7) இரவில் உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் சேர்த்துக் கொள்வது
8)உணவுக்கு முன் அரைமணி நேரம் நடப்பது (இரவு உணவிற்குப் பின் நடப்பது நல்லது அல்ல)
9) பழங்கள் எப்போதும் உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்னர் தான் ஸ்வீகரிக்க வேண்டும்
வாழ்க நலமுடன் அதனால் வளமுடன் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
டாக்டர் இரகுராமன் வரதாச்சாரி, திருச்சிராப்பள்ளி
#digestion #digestivesystem #gastric #Constipation
Comments