ஆணின் உயிரணுக்களை எதிர்த்த பெண்ணின் உடல்; குழந்தையின்மை சிகிச்சையின் வெற்றிக்கதை
மருத்துவர்கள் இப்போது அதிகமாகச் சந்திக்கும் சவால்கள் என்ன என்றால் பெரும்பாலும் சர்க்கரை ஒழுங்கின்மை, உயர் ரத்த அழுத்தம், குழந்தை இன்மை குறைபாடு, உடல் பருமன் இளம் பெண்கள் மாதவிலக்கு ஒழுங்கின்மை,,தூக்கம் இன்மை, புற்றுநோய் ஆகிய நோய்கள்தான்.
என்னிடம் பரிசோதனைக்கு வருபவர்களில் majority, மேலே குறிப்பிட்ட பிரச்சினை சம்பந்தப்பட்ட காரணங்களுக்கு வருபவர்கள். ஒரு காலத்தில் "Indian Women are more fertile than the Indian Soil" என்று மற்றவர்கள் நம்மை குறிப்பிட்டு பரிகாசம்/கிண்டல் செய்தது உண்டு.
Must Read: சிபிஆர் சிகிச்சை மேற்கொள்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்…
இதில் irony என்ன என்றால் உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக சீனாவுக்கு அடுத்ததான இடத்தில் இருந்தாலும் குழந்தையின்மை குறைபாடு அதிகரித்து வரும் நாடுகளில் முக்கிய இடம் வகிக்கிறது
குழந்தையின்மைக்கான காரணங்கள்
இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. கலாச்சார மாற்றங்கள், உணவில் மாற்றம், உடைகளில் மாற்றம் விவசாய உற்பத்தி அதிகரிப்பதற்காக உபயோகிக்கும் விதவிதமான ரசாயனங்கள், பருவ வயது மாற்றம், பல காரணங்களால் வயது கடந்த திருமணங்கள், வருவாய் ஈட்டும் ஆர்வம் காரணமாக குடும்ப வாழ்க்கை சமரசம் செய்து கொள்ளப் படுவது,
சில சமயம், வாழ்க்கை சுதந்திரத்திற்கு குழந்தை ஒரு தடை என்று கருதப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வமின்மை இன்னும் பிற காரணங்கள். குழந்தை இன்மை குறைபாட்டிற்குச் சிகிச்சை வழங்குவதாக மிக அதிக நிலையங்கள் தினசரி புதிது புதிதாக தோன்றுவது கண்கூடு. அந்த நிலையங்களில் ஒரே மாதிரியான prototype வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன.

மக்களும் ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்று இங்கு படையெடுக்கின்றனர். இந்த மாதிரி ஒரு நிலையத்திற்குச் சென்று பலன் கிடைக்காத ஒரு தம்பதி என்னிடம் வந்தனர் வழக்கமான எல்லா வகையான வெவ்வேறு பரிசோதனைகள், ஸ்கேன், கருமுட்டை தூண்டும் hormone சிகிச்சை, வித விதமான விலை உயர்ந்த சத்து மாத்திரைகள், மாதா மாதம் பரிசோதனைகள் இப்படி சம்பிரதாய முறைகள் பின்பற்றப்பட்டன.
பரிசோதனைகள்
பெண்ணுக்கு குறிப்பிட்ட பிரச்சினை எதுவும் இல்லை. ஆணுக்கும் குறிப்பிட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்று அங்கு முடிவு வந்தது. இருந்தாலும் இருவருக்கும் வழக்கமான வைத்யம் தரப்பட்டது. ஆனாலும் பலன் கிட்டவில்லை. என்னிடம் வந்தனர். டெஸ்ட்கள் எல்லாம் அந்த இடத்தில் ஓரளவு சரியாக செய்யப்பட்டு இருந்ததால் நான் அவர்கள் செய்த எந்த டெஸ்ட்டும் திரும்பச் செய்ய விரும்பவில்லை.
அங்கு அந்தப் பெண்ணிடம் உடல் பரிசோதனையும் செய்து இருந்தார்கள். அவர்கள் தாம்பத்யமும் நன்றாக நடந்திருக்கிறது என்று உறுதி படுத்தியது இருந்தாலும், உள் மனதில் மட்டும் ஏதோ ஒன்று miss ஆனது என்ற குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

கணவருக்கு Complete Semen Analysis, FSH, Testosterone எல்லாம் நார்மல் குளிக்கும் போது, சாப்பிடும்போது, இரவு படுக்கும் போது தூக்கம் வரும் வரை, கிளினி க்கு காரில் பயணிக்கும் போது என்று சதா சர்வ காலமும் இதைப் பற்றிய எண்ணம் தான் இருந்தது. சட்டென்று ஒரு பொறி தட்டியது.
அன்றைய தினம், கிளினிக் போனதும் அந்த தம்பதியை ஃபோன் பண்ணி வரச் சொன்னேன். பக்கத்து தெருவில் இருந்த poly clinic ல் இருக்கும் Lady Technician இடம் பேசினேன். சில ஏற்பாடுகள் மளமளவென செய்தேன் தம்பதியிடம் ஒரு முக்கிய பரிசோதனை பற்றி விளக்கம் தந்தேன். அவர்களை அந்தக் குறிப்பிட்ட தினத்தில் நான் விளக்கிச் சொன்ன முன்னேற் பாட்டின்படி தயாராக அந்த poly clinic போகச் செய்தேன்.
உண்மை புரிந்தது
அந்தப் பெண்ணிடம் பரிசோதனைக்காக Smear சேகரிக்கப் பட்டது. உடனடியாக எனக்கு அந்த Slide வந்து சேர்ந்தது அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அந்த slide பரிசோதனை நடத்தினேன். Microscopic examination of the stained Post Coital Vaginal smear. ஆச்சரியமாக விஷயம் கிடைத்தது. இதுவரை எந்தக் காரணத்தால் அந்தப் பெண் கருத்தரிக்க வில்லை என்ற உண்மை புலப்பட்டது.
கணவன் மனைவி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை ஆயினும் ஏன் இதுகாறும் பலன் கிடைக்கவில்லை என்பதற்கு விடை கிடைத்தது. அந்த தம்பதியை விட அதீத மகிழ்ச்சியில் நான் ஆனந்தக் கூத்தாடினேன் என்றால் அது மிகையாகாது
இது தான் விஷயம். இரண்டு பேருக்கும் பண்ணிய பரிசோதனைகளில் வெளிப்படையாக குறை ஏதும் தெரியாத நிலையில் முந்தைய ஆஸ்பத்திரியில் இரண்டு பேருக்கும் emperative treatment அதாவது சம்ப்ரதாய வைத்யம் மட்டுமே செய்யப்பட்ட நிலையில் தான் என்னிடம் வந்தனர்
கணவருக்கு நடந்த விந்துப் பரிசோதனை அவருக்கு பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்று தெரிவித்தாலும் எனக்கு மட்டும் அதில் ஏதோ ஒரு குறை இருக்கு என்று என் உள்மனது ஒலித்துக் கொண்டே இருந்தது
சாதாரணமாக ஒரு ஆணுக்கு உயிரணுக்கள் பரிசோதனை நடத்தப்படும் போது அவனது விந்துத் திரவம் அவனால், பரிசோதனைச் சாலையில் தரப்பட்ட ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிக்கப் பட்டு Lab ல் பரிசோதனை செய்வதற்குத் தரப்படும். அதில் பல Lab களில் 10 பரிசோதனைகள் செய்வார்கள்.
Must Read: நாம் ஏலக்காயுடன் ரசாயனங்களையும் சேர்த்து உண்கின்றோமா?
நான் என்னுடைய பரிசோதனைச் சாலையில் 45 பரிசோதனைகள் செய்வது வழக்கம். இப்படி இதுவரை அந்தப் பெண்ணின் கணவருக்குச் செய்யப்பட்ட பரிசோதனைகள் எந்தக் குறையும் இருப்பதாக காட்டவில்லை. இந்த Stage ல் தான் அந்தத் தம்பதியினர் நல்ல நேரம் எனக்கு அந்த பொறி தட்டியது.
கண்ணாடிக் குடுவையில் சேகரித்து பரிசோதிக்கப்பட்ட திரவம் காட்டும் முடிவுகள் எப்படி ஒரு பெண்ணின் உடலிலும் அதே மாதிரியான முடிவுகளாக இருக்க முடியும் என்று என் ஆராய்ச்சி மூளை ஒரு சந்தேகத்தைக் கிளப்பியது. இந்தப் பொறிதான் அந்தப் பெண்ணின் வாழ்வில் வளம் சேர உதவியது.
ஆணின் உயிரணுக்களை எதிர்த்த பெண்ணின் உடல்
பரிசோதனைக்காக சாம்பிள் எடுப்பதற்கு தரப்பட்ட உயிரற்ற, உணர்வற்ற ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில், உயிருள்ள விந்துத் திரவம் போய் ஏற்படுத்தும் விளைவுகள், அது தன் குணங்களில் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள் எப்படி அதே திரவம் உயிருள்ள, உணர்வுகள் உள்ள ஒரு பெண்ணின் உடலிலும் அதே மாதிரியான முடிவுகளின் முழுமையான பிரதிபலிப்பாக அமைய முடியும் என்று தோன்றியது
கண்ணாடி குடுவை ஒரு உயிரற்ற ஜடம் (an inert material). அது தன்னிடம் வரும் எதையும் அப்படியே வாங்கி வைத்துக் கொள்ளலாம். எதிர்க்கவோ, ஆதரிக்கவோ அதனிடம் ஒன்றும் இல்லை. ஆனால் பெண்ணின் உடல் அப்படி அல்ல. உயிருள்ள அது, தன்னிடம் வரும் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். எதிர்க்கலாம் அல்லது வருவதுடன் இணைந்து புதிய ஒன்றை உருவாக்கலாம்.

ஒரு பெண்ணின் Vaginal Canal ல் ரத்தக் குழாய்கள் பரவிக் காணப்படும். மனித உடலின் இயற்கையான குணமான எதிர்ப்பு சக்தி, உடலில் எந்த ஒரு வெளிப்புறப் பொருட்கள் உடலில் முதல் முறை நுழையும் போதும் அதை எதிர்த்து வெளியே தள்ள முயற்சி செய்யும். (Auto-Rejection)
இது விந்து திரவத்திற்கும் பொருந்தும். முதல் முறை ஏற்படும் இந்த திரவத்திற்கு எதிரான எதிர்ப்பு பல முறை உறவுக்குப் பின் அகன்று விடும். இது ஒவ்வொரு உடலிலும் மாறுபடும். இவை Auto Antibodies என்பவை.
இந்த Auto Antibodies பெண்ணின் உடலிலும் இருந்து அவளின் ரத்த ஓட்டம் மூலம், அவளின் partner உடன் உறவு கொள்ளும் போது, விந்து திரவம் உடலில் நுழையும் போது அதற்கு எதிராக வினை புரிந்தால் அதன் விளைவாக விந்துத் திரவத்தில் உள்ள உயிரணுக்கள் இறந்து விடும்.
கண்ணாடிக் குடுவையில் கிடைத்த முடிவுகள் படி எந்தக் குறையும் இல்லை. ஆனால் அந்தப் பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட Post Coital Vaginal Smear ல் உயிரணுக்கள் அனைத்தும் இறந்த நிலையில் தான் காணப்பட்டன. இது தான் அவளது பிரச்சினைக்கு காரணம்.
பலன் கிடைத்தது
இது ஒரு வகை Auto immune Disorder. அவள் கணவனின் உயிர் அணுக்களை எதிரியாக நினைத்து, அவற்றிற்கு எதிராக அந்தப் பெண்ணின் உடலில் இந்த Auto Antibodies உருவாகி அவளது ரத்த ஓட்டம் மூலம் கணவனின் உயிரணுக்களை அழித்துக் கொண்டு இருக்கிறது. இதன் தீவிரத்தை கண்டு பிடிக்க அவள் ரத்தத்திலும் Serum anti Sperm Antibodies டெஸ்ட் நடத்தினேன். மிக அதிக அளவில் இருப்பது தெரிந்தது.
அவள் பிரச்சினையின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது. இதற்கென பிரத்யேக வைத்யம் மேற்கொள்ளப் பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் இந்தப் பிரச்சினை தீவிரம் குறைய அதன் பலன் கிடைத்தது
பெண் கருத்தரிக்க, அனைவருக்கும் சந்தோஷம். தற்போது நடைமுறையில் மறக்கப்பட்ட Post Coital Test போன்ற பல முக்கிய பழங்காலப் பரிசோதனைகளால் சுற்றி வளைத்து மருத்துவமும், பரிசோதனைகளும், நேர விரயமும், பண விரயமும், மன உளைச்சலும் தான் மிச்சம்.
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
மருத்துவம் புதிர் அல்ல புனிதமே என்ற தலைப்பில் ஒரு Pathologist ன் டைரி குறிப்பு என்ற பெயரில் திருச்சிராப்பள்ளி தூசி கிடாம்பி திரு. டாக்டர் இரகுராமன் வரதாச்சாரி முகநூலில் எழுதி வரும் கட்டுரையின் ஒரு பகுதி அவருடைய அனுமதியுடன் பதிவு செய்யப்படுகிறது.
#infertility #infertilityissue #fertilitycare #Infertilitytreatment #successstory
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More