சிறுநீரகக்கோளாறுக்கு தீர்வு தரும் உணவு முறைகள் என்ன தெரியுமா?
சிறுநீரக சுருக்கம், சிறுநீரக குழாய் அடைப்பு , சிறுநீரகக் கல் ,. சிறுநீரகத்தில் இரத்தம் உறைதல் போன்ற புரதச்சத்துக்கள் சிறுநீரில் அதிகப்படியாக வெளியேறுவது, உடலில் உள்ள அமிலத்தன்மை சிறுநீர் வழியாக வெளியேறாமல் ரத்தத்தில் அதிகமாக தங்கி விடுவது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் பலரிடம் காணப்படுகின்றன.
இது தவிர நெப்ரான்கள் எனப்படும் சிறுநீரகத்தின் சல்லடை நார்களில் தொற்று ஏற்பட்டு சிறுநீர் சரியாக வெளியேறாமல் சிறுநீரகப் பைகளிலேயே தங்கி கல், இரத்தம் உறைவு, சிறுநீரக குழாய்களின் அடைப்பு இது போன்ற கோளாறுகளால் சிறுநீரகத்தில் அதிகம் அழுத்தம் ஏற்பட்டு சிறுநீரகத்தை சேதப்படுத்துகிறது.
சிறுநீரகக் கோளாறு ஏன் ஏற்படுகிறது?
நீண்டகாலமாக இரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள், நீரிழிவு நோய் கண்டவர் அதிகப்படியான இன்சுலின் எடுத்துக் கொள்ளுதல், ஏதேனும் மருத்துவ சிகிச்சைக்காக ஸ்டீராய்டு ஊசி அதிகமாக பயன்படுத்துதல் போன்றவை இரத்தத்தில் அமிலத்தன்மையை கூட்டுவதுடன் சிறுநீரக செல்களை சேதப்படுத்தி தொற்றுக் கிருமிகளை உருவாக்கி சிறுநீரகம் செயலிழக்கக் காரணமாகிறது.
Must Read:வானகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நம்மாழ்வாரின் 85 வது பிறந்தநாள் விழா
இது போன்ற சிறுநீரகக் கோளாறுகளிலிருந்து விரைவில் விடுபட சில குறிப்பிட்ட உணவு உட்கொள்ளும் முறைகளும் பத்திய முறைகளும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
உணவு முறைகள்:
சிறுநீரகக் கோளாறுகளுக்கு உட்பட்ட நோயாளிகள் எப்படிப்பட்ட உணவு உண்ண வேண்டும் என்பதில் மிக தெளிவான புரிதல் இருத்தல் வேண்டும்.
முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்:
டீ, காப்பி, வெள்ளை சர்க்கரை, கடுகு, அசைவ உணவுகள் , புளி புளி சார்ந்த உணவுகள், மைதா சார்ந்த உணவுகளான பரோட்டா மற்றும் பிஸ்கட்டுகள், ஊறுகாய், அப்பளம் போன்றவை.
உணவில் உப்பின் அளவு:
சிறுநீரகக் கோளாறுக்கு உட்பட்ட நோயாளிகள் உப்பு எடுத்துக் கொள்ளும் அளவில் மிகவும் கவனம் வேண்டும். மருத்துவர் சிறுநீரக நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது, ஒரு கிராம் அல்லது 1.5 கிராம் மட்டுமே. அதிலும் முருங்கை உப்பையோ குப்பைமேனி கீரை உப்பையோ உண்ணுவது சாலச் சிறந்தது.
ஒரு மண் பாத்திரத்திலோ அல்லது இரும்பு பாத்திரத்திலோ முருங்கைச் சாறு அல்லது குப்பைமேனி சாறு எடுத்து அதில் மூழ்கும் அளவுக்கு கல் உப்பை நிரப்பி மிதமான தீயில் உப்பை வறுக்கவும். வருபட வருபட சிறிது நேரம் கழித்து அதில் சடச் சட என சத்தம் வெளிப்படும். இதுவே உப்பு வறுபட்டதற்கான சரியான பதம்.
அரிசி மற்றும் காய்கறிகள் :
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சீரக சம்பா பச்சரிசியை சாதத்திற்கு பயன்படுத்துதல் வேண்டும். நீண்ட காலம் புழுங்கல் அரிசி சாப்பிட்டு வந்த பழக்கத்தில் முதலில் சற்று வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். ஆனாலும் சில நாட்கள் செல்ல அந்த உபாதைகள் விலகி விடும்.
"சுரக்காய்க்கு உப்பில்லை" என்ற பழமொழிக்கேற்ப நீர்க்காய்களை உண்பது ஜீரணித்தலை மிக எளிதாக்கும். வெள்ளைப் பூசணி மோர் குழம்பு, வெண்பூசணி கூட்டு, சுரக்காய் கூட்டு என தினமும் மாறி மாறி எடுத்துக் கொண்டே வர வேண்டும்.

வாரம் ஒரு முறை வெள்ளை முள்ளங்கி பொரியலாகச் செய்து சாப்பிடலாம். இதுபோக மற்ற எந்த வகை நீர்க்காயானாலும் எடுத்துக் கொள்ளலாம். முருங்கைக்காய், புடலங்காய், கொத்தவரங்காய் முதலியன. நீர் காய்களை எடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவுக்கு திரும்பும்.
பொதுவாக கீரை வகைகளில் பொட்டாசியம் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் அதிகம் என்பது உண்மை. ஆனாலும் கீரை வகைகளை நன்கு வேகவைத்து கடைந்து உண்ணும் போது எந்த பயமும் வேண்டாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கீரைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.காசினிக்கீரை, வல்லாரை கரிசலாங்கண்ணி, மூக்கிரட்டை முருங்கை போன்ற கீரை வகைகளை எடுத்துக் கொள்ளல் அவசியம்.
புளி, புளி சார்ந்த உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக நெல்லி பொடி அல்லது நெல்லி வற்றல் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தலாம். உணவு பதார்த்தங்களாக இட்லி கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி சப்பாத்தி , கோதுமை தோசை , பார்லி கஞ்சி இது போன்ற எளிதில் சீரணிக்கக் கூடிய பதார்த்தங்களை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
மதிய உணவில் சீரக சம்பா பச்சரிசி சாதமும், கீரை, வெண்பூசணி மோர் குழம்பு, சுரைக்காய் கூட்டு, புளி சேர்க்காத நெல்லி பொடியால் தயாரித்த ரசம் என்ற வகையில் எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதும் எளிதில் சீரணக்கக கூடிய உணவுமாக இருத்தல் அவசியம்.
பழங்கள்:
பப்பாளி, கொய்யா, நாட்டு நாவல் பழம், நெல்லிக்காய், சப்பாத்திக்கள்ளி பழம் ( அதிக குளிர்ச்சி, அவரவர் உடல் இயல்புக்கு தகுந்தவாறு சளி பிடிக்காத வண்ணம் எடுத்துக் கொள்ளலாம்.) போன்றவை சிறுநீரக நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும் பழங்கள் ஆகும். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் மாதுளை இரண்டையும் தவிர்ப்பது நல்லது.
குடிநீர்:
திருவருட்பிரகாச வள்ளலார் மழை நீரை புற அமிர்தம் என்பார். அதற்கேற்ற வகையில் மழை நீரை சேமித்து வைத்து அதில் 2 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி சுக்குப் பொடி சேர்த்து ஐந்தில் இரண்டு பங்காக சுருங்கக் காய்ச்சிப் பருக நல்ல பலன் உண்டாகும். மழைநீர் கிடைக்காத காலத்தில் சாதாரண நீரையும் இதே பக்குவத்தில் தயாரித்துப் பருகுவதே உத்தமம்.
சுக்கு சுத்தி முறை:
சுக்கு பொடி தயார் செய்ய காய்ந்த இஞ்சியான சுக்கை எடுத்து நன்றாக சுண்ணாம்பு கவசமிட்டு அதை இடுக்கியின் உதவியுடன் சுக்கை நெருப்பில் சுட்டு அதன் வெளித்தோலை நீக்கிய பின் சூரணித்து வைத்துக் கொள்ளலாம்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க:
உடலில் அதிக உஷ்ணத்தால் சிறுநீரகம், கல்லீரல் போன்ற இராஜ உறுப்புகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு RBC , WBC போன்ற இரத்த அணுக்களின் அளவு மிகவும் குறைந்து 6 அல்லது 7 என்ற அளவிலேயே இருக்கும்.
Must Read:உயிர்ம வேளாண் கொள்கையில் வலுவான திட்டங்கள் இல்லை
இந்த உஷ்ணத்தைக் குறைக்க, அரை மூடி தேங்காயில் எடுத்த பாலில் ஒரு மேஜைக் கரண்டி அளவு கடுக்காய் பொடி சேர்த்து கலந்து, அதை உச்சி குளிர தலையில் மசாஜ் செய்து தேய்த்து சுமார் அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை இருந்து பின் தலை முழகினால் உடலில் நல்ல விதமாகக் குளிர்ச்சி ஏற்படும். அதை தேய்த்து குளிக்க சீயக்காய் மற்றும் அரப்புத் தூள் பயன்படுத்துதல் வேண்டும்.
மேற்கூறிய அனைத்தையும் சரியாக மேற்கொண்டு வந்தால், உடலில் இருக்கும் அதீத உஷ்ணத்தால் பலமின்றி சோர்வாகி சரிவர இயங்காமல் கிடக்கும் எல்லா உறுப்புகளும் உயிர்பெற்று சரியாக இயங்க ஆரம்பிக்கும்.
யூரியா கிரியாட்டின் போன்ற உப்புக்கள் உடலில் குறைய ஆரம்பிக்கும். இவை யாவும் நான் அனுபவத்தால் வெற்றி கண்ட சிறந்த வழிமுறைகள்.காலமெல்லாம் டயாலிசிஸ் செய்து கொண்டு வாழ்க்கையை நரகமாய் வாழ்வதைவிட இந்தப் பக்குவ முறைகளை சரிவர கடைப்பிடித்து சிறுநீரகக் கோளாறுகளிலிருந்து மிக எளிதாக விரைவில் விடுபடலாம். நிரந்தரமாக விடிவு காலம் ஏற்படும்.
#kidneydisease #dietsforkidneypatients #foodforkidneypatients
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, நம்மாழ்வார் பிறந்தநாள், தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More