சென்னையில் வரும் 13ஆம் தேதி வள்ளுவம் இயற்கை சந்தை கூடல்


நம்மாழ்வார் மக்கள் குழுவின் சார்பில் வரும் 13ஆம் தேதி சென்னை அடையாறு பகுதியில்  வள்ளுவம் இயற்கை சந்தை கூடல் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளர் சித்தர் திருதணிகாசலம் அவர்கள்  இயற்கை மருத்துவமும் இனிய வாழ்வும்  எனும்‌ தலைப்பில் கருத்துரை நிகழ்த்துகிறார்.

தமிழ்நிலம் தமிழ்ப்பண்ண அமைப்பைச் சேர்ந்த முன்னோடி விவசாயி திரு.இறையழகன், அவர்கள் மரபு விதைகளும் நம் மரபுவழி  வேளாண்மையும்  எனும்‌ தலைப்பில் கருத்துரை நிகழ்த்துகிறார்.

Must Read: மரபீனி மாற்றக் கடுகு - உணவும் உழவும் உணர்வும்-பாமயன்

இயற்கை விவசாய பொருட்களின் சந்தையுடன் , இயற்கை உணவு ,இயற்கை விவசாயம் , இயற்கை மருத்துவம் , சுற்றுச்சூழல் குறித்த ஆழமான கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்கள்‌ மற்றும் கொண்டாட்டமான பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற உள்ளன. 

அனைவருக்குமான பாரம்பரிய விளையாட்டு கொண்டாட்டங்கள்மற்றும் இயற்கையில் விளைந்த தரமான உணவு பொருட்கள் கிடைக்கும். பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள், சீர்தானியங்கள்,  தூய செக்கு எண்ணெய்கள்,  மசால் வகைகள் , மாவு - பொடி வகைகள, மலைத்தேன் ,மரபு திண்பண்டங்கள் ,  மரபு விளையாட்டு பொருட்கள்,  மண்பாண்ட பொருட்கள் , நாட்டு விதைகள், இயற்கையில் மதிப்புக்கூட்டு பண்டங்கள்  அனைத்தும்‌ கிடைக்கும் .

பாரம்பர்ய திண்பண்டங்கள் கிடைக்கும்

13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மாலை 6 வரை‌ நிகழ்வு நடைபெறுகிறது. அனுமதி இலவசம், அனைவரும் பங்கேற்கலாம். குமார ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி , 3வது கிராஸ் , காந்திநகர் , அடையார் , சென்னை .என்ற முகவரியில் நடைபெறுகிறது. 

கூகுள் வரைபடம்: Kumara Raja Muthiah School  https://maps.app.goo.gl/hDQFPS96uDV91LDy9 

மேலும் விவரங்களுக்கு திரு.வெற்றிமாறன்.இரா அவர்களை  9566667708 / 7448558447 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

#TraditionalFunction  #OrganicAgri  #OrganicFoods #ChennaiEvents

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

 


Comments


View More

Leave a Comments