
சென்னை, திருப்பூரில் தவறவிடக்கூடாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, ஜொமாட்டோ அடாவடி, தேன்சாப்பிடும் முறை
சென்னை தாம்பரத்தில் வரும் 05ஆம் தேதி ஞாயிறு அன்று மகளிர் தின கொண்டாட்டங்களுடன்- வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா - பெண்களுக்கான மரபு விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளன.
வள்ளுவர் குருகுலம் உயர்நிலைப் பள்ளி , ஜி.எஸ்.டி சாலை, தாம்பரம் மேற்கு ( பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில்) , சென்னை என்ற முகவரியில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
Must Read: இயற்கை பொருட்களை விற்கும் நேர்மை மிக்க இளைஞர்….
5 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு பாரம்பரிய நாட்டு விதைகளின் பகிர்தலுடன் தொடங்கும் நிகழ்வில் முன்னோடி மரபு விதை சேகரிப்பாளர் திருமதி. பிரியா ராஜ்நாராயனன் அவர்கள் மாடித்தோட்டம், வீட்டு தோட்டம் மரபு ,மரபு விதை சேகரிப்பு நுட்பங்கள் குறித்து உரையாற்றுகிறார்
மண்வாசனை அமைப்பின் உரிமையாளர் மற்றும் பாரம்பரிய அரிசிகளின் மதிப்புகூட்டு சாதனையாளர் திருமதி. மண்வாசனை மேனகா அவர்கள் உரையாற்றுகிறார். தொடர்ந்து பெண்களுக்கான மன நலன் மற்றும் சட்ட உரிமைகள் குறித்து மனநல ஆலோசகர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி. டெய்ஸி பாலா அவர்கள் கலந்துரையாடுகிறார்
தாய்வழி மரபு அக்குபஞ்சர் மையத்தை சேர்ந்த திருமதி. அன்பினி பிரஜனா , பெண்கள் குழந்தைகள் நல வாழ்வு , இனிய சுகப்பிரசவம் கலந்துரையாடுகிறார். மதிய உணவுக்கு பின்னர் குழந்தைகளுக்கான கலைப் பயிற்சி நடைபெறும் இதில் வரைதல் , நிழற் பாவை கூத்து பொம்மைகள் உருவாக்குதல் , கதை சொல்லல் , விளையாட்டு, நிழற் பாவை பொம்மலாட்டம் நிகழ்த்துதல் ஆகியவையும் நடைபெறும்
.வள்ளுவம் இயற்கை சந்தையில் - தூய இயற்கை உணவுகள் காய்கறி - கீரைகள் - பாரம்பரிய அரிசிகள் - சீர்தாணியங்கள் - பருப்பு வகைகள் - சமையல் பொடி வகைகள் - குழந்தைகளுக்கான மரபு திண்பண்டங்கள் - சமையல் மண்பாண்டங்கள் - துணி பைகள் - சணல் கைவினை பொருட்கள் - பனை ஓலை பொருட்கள் ஆகியவை கிடைக்கும்.
சிற்பங்கள் - ஓவியங்கள் என இயற்கை சார்ந்த பொருட்களின் நேரடி விவசாயிகளும் மதிப்புக்கூட்டு உற்பத்தியாளர்களுமாக ஒருங்கிணைந்த ஆர்கானிக் விற்பனை சந்தை நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர்: ஹீலர். அன்பினி பிரஜனா வள்ளுவம் இயற்கை சந்தை அவர்களை 7448558447 / 9566667708 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Must Read:அற்புத பலன்களை தரும் முடவாட்டுக்கால் கிழங்கு ரசம்
இயற்கை வேளாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம்
சிறிய இடமும் பெரிய மனமும் இருந்தால் போதும் நீங்களும் இயற்கை விவசாயி ஆகலாம். இயற்கை விவசாயம் குறித்து திருப்பூர் அலகுமலை அருகில் உள்ள மௌனம் இயற்கை பாடசாலை, செம்பருத்தி இயற்கை வேளாண் பண்ணையில் வரும் 19 ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் ஒருங்கிணைந்த பலபயிர் சாகுபடி முறை எவ்வாறு செய்வது என்று களத்தில் செய்து காட்டப்படும். கீரை, செடி, கொடி, மூலிகை மற்றும் மரபயிர் வகைகளின் சாகுபடி நுட்பங்கள், இடுபொருள் தயாரிப்பு முறைகள் ,பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு முறைகள், விவசாய நிலம் அடிப்படை வடிவமைப்பு முறைகள் ஆகியவை கற்றுத்தரப்பட உள்ளன.
பயிற்சி மற்றும் மதிய உணவுடன் சேர்த்து நுழைவு கட்டணமாக ரூ 500 மட்டும் வசூலிக்கப்படும். ரம்யா தேவி, திரு.சண்முகம் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சியில் பங்கேற்க @8508307617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
நம்மாழ்வார்_மக்கள்_குழு #வள்ளுவம்_இயற்கை_சந்தை #organicfarming #organic #organicmarketing #organicfarmingevents #agrieventstirupur
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, ஜொமாட்டோ அடாவடி, தேன்சாப்பிடும் முறை
Comments