இயற்கை பொருட்களை விற்கும் நேர்மை மிக்க இளைஞர்….
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, இயற்கைவேளாண் சந்தை, தேன்சாப்பிடும் முறை
சத்தியமங்கலம் திருமூர்த்தி பண்ணையில் வைத்து சில ஆண்டுகள் முன்பு ஒரு சுறுசுறுப்பான இளைஞரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புளியம்பட்டியில் இயற்கை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து சிறிய அளவில் சந்தைபடுத்தி வந்தார். அவரின் நேர்மையான உரையாடல் மூலம் ஈர்க்கப்பட்டு அவருடன் வியாபார தொடர்பு ஏற்படுத்தி கொண்டேன்.
தற்போது தரணி ஹெர்பல்,வேடன், ராம்கேர் என்கிற பெயர்களில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பணியாளர்களோடு வளர்ந்து நிற்கிறது அந்த நிறுவனம். எனது அங்காடியில் அவர் நிறுவன பொருட்கள் நான்கு அடுக்குகளை நிரப்பி வருகிறது. இன்றும் என்னிடம் நட்பு பாராட்டி வரும் அந்த நண்பர்தான் தரணி சுந்தர். இன்றளவிலும் செய்யும் தொழிலை பயபக்தியோடு நடத்தி வருபவர்.
Must Read: இயற்கை விவசாயத்தில் ஆர்வம்,உழைக்கும் எண்ணம் கொண்டோருக்கு வாய்ப்புகள்….
கடந்த மாதத்தில் வாடிக்கையாளர் ஒருவர் நித்தியகல்யாணி பூவின் பொடி வேண்டும் என கேட்டிருந்தார்.என்னிடம் நித்யகல்யாணி இலைப்பொடி மட்டுமே இருந்தது. நான் சுந்தர் அவர்களிடம் இது குறித்து கேட்டேன். அவர்...,
சாகுல்...நித்யகல்யாணி பூ பொடி தயாரிப்பது கொஞ்சம் சிரமம். 100 கிராம் பொடிக்கே நிறைய பூக்கள் தேவைப்படும். இருந்தாலும் அந்த வாடிக்கையாளர் ஏதோ முக்கியமான பெரிய மருத்துவத்திற்காகத்தான் இதை கேட்கிறார். நான் நிச்சயம் தயார் செய்து தருகிறேன். அதற்காக எந்த பணமும் பெற்றுகொள்ள வேண்டாம். நான் அனுப்பி தருகிறேன் என்றார்.
சொன்னபடியே இரண்டு வாரத்தில் பொடியை தயார் செய்து அனுப்பி தந்துவிட்டார். என் வாடிக்கையாளருக்கு பெரும் மகிழ்ச்சி. அவர் எங்கெல்லாமோ அலைந்தும் கிடைக்காத நித்யகல்யாணி பூ பொடி என் மூலமாக சுந்தர் அவர்களிடமிருந்து பெற்றதை நினைத்து நன்றி பெருக்கோடு சென்றார். சுந்தர் சாரும் அந்த பொடிக்காக என்னிடம் ஒரு ரூபாய்கூட பெற்று கொள்ளவில்லை. நானும் அப்படியே.
முகமே தெரியாத எனது வாடிக்கையாளருக்காக அவரின் மருந்துவ தேவைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து முயற்சி எடுத்து இலவசமாக நித்யகல்யாணி பூவின் பொடியை அனுப்பி வைத்த சுந்தர் அவர்களுக்கு நன்றி. மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே..!! தரணி ஹெர்பல் நிறுவனத்தை 099655 32001 என்ற மொபைல் எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளலாம்.
#organicproducts #herbalproducts #orgaincagriproducts #dharaniherbal
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, இயற்கைவேளாண் சந்தை, தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More