இயற்கை விவசாயத்தில் ஆர்வம்,உழைக்கும் எண்ணம் கொண்டோருக்கு வாய்ப்புகள்….
கோவை சூலூரில் செஞ்சோலை அமைப்பின் சார்பில் இயற்கை வேளாண் பயிற்சிகள் , இயற்கை விவசாயிகள் சந்திப்பு, இயற்கை வேளாண்மை சந்தை உள்ளிட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதே போன்ற முன்னெடுப்புகளை மதுரை நகரை சுற்றி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையில் இது தொடர்பாக வரும் மார்ச் 19ஆம் தேதி மாலையில் அனுஸ்ரீ இயற்கை வைத்திய சாலை, 77, திருப்பரங்குன்றம் சாலை, மதுரை.என்ற முகவரியில் ஆலோசனை நடைபெற உள்ளது.
ஆலோசனையில் பங்கேற்க விரும்பும் ஆர்வலர்கள் செந்தில் குமரன் 956666 5654 பூமிநாதன் 99420 80100 ஆகியோரை மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.
இயற்கை விவசாயம் செய்ய வாருங்கள்
தென்காசி மாவட்டம் புளியங் குடியில் 7ஏக்கர் மரபயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. (சந்தனம் செம்மரம் ஈட்டி மகோகனி தேக்கு மரங்கள்) ஊடுபயிர் சாகுபடி செய்து முழு பலன்களையும் எடுத்துகொண்டு மரக்கன்றுகளை பராமரிப்பு செய்யவும் ,தினம், வாரம் ,மாதம், வருட ,வருமானம் ஈட்டும் முன்மாதிரி லாபகரமான இயற்கை விவசாயம் செய்ய ஆர்வம் அனுபவம் உழைக்கும் நோக்கம் உள்ளவர்கள் தேவை.
Must Read: பொதிகைச்சோலையில் மார்ச் 11ஆம் தேதி வேளாண்மைப் பயிற்சி முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மேல்பழங்கூர் கிராமத்தில் 5ஏக்கர் நிலம் உள்ளது.தங்கும் இடம் விவசாய உபகரணங்கள் சோலார் வேலி சொட்டு நீர் பாசனம் மின்மோட்டார் வசதிகள் உள்ளன.
சந்தை வாய்ப்பு உள்ளது. சந்தனம் செம்மரம் ஈட்டி மகோகனி தேக்கு மரபியல் பராமரிப்பும் ஊடுபயிர் சாகுபடியில் தினம், வாரம், மாதம் ,வருட, வருமானம் ஈட்டும் முன்மாதிரி லாபகரமான இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்.
வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் மற்றும் நல்ல விலைகள் உத்திரவாதம் அளிக்கிறேன். தொடர்பு பாரம்பரிய மரபு மருத்துவர் ராஜேந்திரன்.அன்னை ஆர்கானிக் & நேச்சுரல்ஸ். வாட்ஸ்அப் 9443206790.
#Organicfarming #Organicproducts #organicfarmers
Comments