படர் தாமரைக்கு தீர்வு தரும் கருடக்கொடி
அங்காடிக்கு வரும் வாடிக்கையாளார் ஒருவருக்கு நீண்ட நாட்களாக படர்தாமரை போன்ற தோல் வியாதியால் சிரமப்பட்டார்.கால் தொடைப்பகுதி மற்றும் கைகளிலும் வியாதியின் தாக்கம் இருந்தது. அலோபதி மருந்துகள் போட்டும் குணமில்லை. இதற்கு இயற்கையில் ஏதும் தீர்வு இருக்கா என என்னை அணுகினார்.கருடக்கொடியை அரைத்து பூசினால் சரியாகும். அடுத்தவாரம் காட்டுக்கு போகிறேன். வரும்போது எடுத்து வருகிறேன் என அவரை அனுப்பி வைத்தேன்.

காணி நண்பரின் துணையோடு போட்டாணி வனப்பகுதிக்கு சென்று கருடக்கொடியை தேடி எடுத்து வந்தேன்.வாடிக்கையாளர் நண்பரை வரச்சொல்லி கருடக்கொடி வேரை கொடுத்து வேம்பு,மஞ்சள் கலந்த நீரால் கையை சுத்தமாக கழுவி மூன்றுநாள் அரைத்து பூசுங்கள் சரியாகும் என்றேன். தொடைக்கு மருந்து போடும்போது ஜட்டியோ,இருக்கமான ஜீன்ஸ் பேண்ட்டுகளோ அணிய வேண்டாம். காற்றோட்டமாக கைலி அல்லது பர்மடாஸ் அணிந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தினேன்.
Must Read:கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம் இஞ்சி மிட்டாய்…
நான்காவதுநாள் சந்தோசத்தோடு என்னை தேடி கடைக்கே வந்துவிட்டார். கையை நீட்டினார். கையிலிருந்த தோல்நோய் காணாமல் போயிருந்தது. தொடைப்பகுதியிலும் குணமாகி விட்டதாம்.சந்தோசத்தில் என்னை கட்டி பிடித்து கொண்டார். ஆயிரம் ரூபாயை எடுத்து என்னிடம் நீட்டினார். தட்சணை வாங்கீக்கோங்க... இன்னும் எவ்வளவு வேணும் கேளுங்க....நீண்டநாள் பிரச்சனைக்கு உங்களால்தான் தீர்வு கிடைத்தது என்றார்.
எனக்கு எந்த காசும் வேணாம். இயற்கை எனக்கு இலவசமாய் கொடுத்த மூலிகை இது. அந்த இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள். வனம் பாதுகாக்க பட வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்து கொள்ளுங்கள். முடிந்தால் வீட்டை சுற்றி இரண்டு வேப்பமர கன்றை நட்டு வைங்க. இதுதான் இயற்கைக்கு நீங்கள் செலுத்தும் நன்றிகடன் என்றேன்.நிச்சயம் செய்கிறேன் என நன்றி சொல்லி மகிழ்வோடு விடைபெற்றார்.
நன்றி; தகவல் மற்றும் படம்; பசுமை சாகுல்
பின்குறிப்பு; கருடக்கொடி தேவைப்படுவோர் உங்கள் ஊரில் இருக்கும் நாட்டு மருந்துக்கடைகளை அணுகலாம். இல்லையெனில் இணையதளத்தில் கருடக்கொடி விற்பனை என்று தேடிபார்த்தாலும் சில இணையதளங்களில் கிடைக்கிறது.
#PadarThamarai #CureOfPadarThamarai #KarudaKodi #PattiVaithiyam

Comments
View More