#VeganFoodsFSSAIRuels வேகன் உணவுகள் தயாரிப்பதற்கு எஃப்எஸ்எஸ்ஐ-யின் புதிய விதிமுறைகள் வெளியீடு


போலி சைவ உணவுகள் விற்பனையைத் தடுக்க, உணவு ஒழுங்குமுறை அமைப்பான FSSAI, சுத்த சைவ உணவு(Vegan Foods)கள் என்றால் என்ன என்பதை வரையறுத்து, அத்தகைய உணவுப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு குறிப்புகளை பட்டியலிட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (சைவ உணவுகள்) விதிமுறைகள், 2022- ஐ வெளியிடப்பட்டுள்ளது. 2021 செப்டம்பரில் இதற்கான வரைவு விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை பரிசீலித்து, FSSAI புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

Must Read: #TrendingHealthstory கொரோனா காலத்தில் இந்தியர்கள் எந்த உணவுக்கு அதிகம் செலவிட்டார்கள் தெரியுமா?

உணவு அல்லது உணவு மூலப்பொருள், சேர்க்கை பொருட்கள், சுவையூட்டிகள், நொதிகள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் செயலாக்கம் விலங்குகளில் இருந்து பெறப்பட்டதாக இருக்கக்கூடாது.  

அதே போல சேர்க்கை பொருட்கள், சுவையூட்டிகள், நொதிகள் மற்றும் Vசெயலாக்கம் ஆகியவற்றில் எந்த நிலையிலும் விலங்கு சார்ந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் FSSAI வரையறையில் கூறப்பட்டுள்ளது.

இந்த FSSAI விதிமுறைகளுக்கு இணங்காதவரை, எந்தவொரு நபரும் சுத்த சைவ உணவாக எந்த உணவையும் தயாரிக்கவோ, பேக் செய்யவோ, விற்கவோ, விற்பனை செய்யவோ, சந்தைப்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ அல்லது இறக்குமதி செய்யவோ கூடாது. 

சுத்த சைவ உணவுகள் சுத்த சைவம் என்று அழைக்கப்படும்  உணவுப் பொருட்கள் என ஒழுங்குமுறை ஆணையத்தால் வழங்கப்படாத வரையில், பாதுகாப்பு மதிப்பீடு உட்பட எந்தவொரு நோக்கத்துக்காகவும் விலங்கு சோதனையில் ஈடுபடக்கூடாது  , என்று கூறப்பட்டுள்ளது. 

சுத்த சைவ உணவுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பேக்கேஜிங் பொருட்களும் பேக்கேஜிங் விதிமுறைகளின் விதிகளுக்கு இணங்க இருக்க வேண்டும். விற்பனையாளர் அசைவ உணவுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் சுத்த சைவ உணவுகளை, பிரத்தியேகமாகவோ அல்லது சில்லறை வணிகப் பொருட்களின் ஒரு பகுதியாகவோ, சேமித்து வைக்க வேண்டும்.

ஒப்புதலுக்குப் பிறகு, சுத்த சைவ உணவுகளின் ஒவ்வொரு பொட்டலமும், FSSAI-யின் குறிப்பிட்ட லோகோவைக் கொண்டிருக்க வேண்டும்  FSSAI விதிமுறைகளை உணவு வணிக செயல்பாட்டாளர் உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.  அசைவப் பொருட்களின் எதிர்பாராத இருப்பைத் தவிர்க்கும் வகையில் உற்பத்தி நடைமுறைகள்.செயலாக்கம் மற்றும் விநியோகம் ஆகியவை  தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். 

சுத்த சைவ உணவுக்கான விதிமுறைகள் வெளியீடு

அசைவ உணவுகள் அல்லது பொருட்கள் அதே தயாரிப்பு பிரிவில் தயாரிக்கப்படும் பட்சத்தில் சுத்த சைவ உணவுகள் தயாரிப்பை தொடங்கும் முன்பு அந்தப் பிரிவு முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும். நல்ல உற்பத்தி நடைமுறைகளுக்கு இணங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் உற்பத்தி செய்யப்படும் நிலை வரை உற்பத்தி நிலை கட்டமைக்கப்பட வேண்டும்.

Must Read: #TrendingHealthstory புற்றுநோயில் இருந்து குணம் அடைந்தாலும் வாழ்க்கை மாற்றம் முக்கியம்…:

சுத்த சைவ உணவு எனும் நிலையைப் பேணுவதற்கு  உணவு ஆணையத்தால் உணவுகள் அல்லது உணவு பொருட்கள் அல்லது அதன் தயாரிப்புகள் குறித்து அவ்வப்போது குறிப்பிடப்படும் விதிகளுக்கும் இணங்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஏற்றுக்கொள்ளும் அனுமதி இல்லாத வரையில் எந்த சுத்த சைவ உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடாது  

-ரமணி

#VeganFoodsFSSAIRuels  #FSSAIRuels  #VeganFoods   #FSSAI


Comments


View More

Leave a Comments