இன்றைய இயற்கை வேளாண் சந்தை
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
பனங்கிழங்கு மாவு
வேகவைத்துக் காயவைத்து அரைத்துத் தயாரிக்கப் பட்டது பனங்கிழங்கு மாவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு. எந்தப் பொருளோ, உறவோ, உயிரோ பயன்பாட்டில் இல்லை என்றால் பாதுகாக்கப் படாது.
பனை மரம் காப்போம் என்று பஞ்ச் பேசினால் போதாது. பனை உணவுகளை வழக்கத்தில் கொண்டு வருவோம். பனை மரம் காப்போம். பனங்கிழங்கு மாவு தேவைப்படுவோர் 9493943495, 8940925788 ஆகிய வாட்ஸ் ஆப் எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
Must Read: #5PointsForWeightloss எந்த வயதிலும் எடையை குறைப்பதற்கான 5 சிறந்த உணவுப் பழக்கங்கள்
பசும் நெய், வெண்ணைய்
காலை பால் பீய்சி. முந்தைய நாள் இரவு பாலை உறைக்கு ஊத்தி தயிராக்கி காலை கடைந்து மோரும் வெண்ணெய்யும் தனித்தனியே பிரிக்கப்படும். .இப்படியாக...தற்போது 4.5கிலோ காங்கேயம் நாட்டு மாட்டு வெண்ணெய்யும் 3.5லிட்டர் நெய்யும் தயாரிக்கப்பட்டுள்ளது.
சோறூட்டும் குழந்தைகள் முதல் உணவிற்கு மருந்து உட்கொள்ள பத்தியத்திற்கு என அனைத்திற்கும் ஏற்ற வெண்ணெய் மற்றும் நெய் கிடைக்கும். வெண்ணெய் - ரூ.1500/கிலோ, 250கிராம் முதல் கிடைக்கும். நெய் -ரூ.2000/கிலோ 250மி.லி முதல் கிடைக்கும். தேவைப்படுவோர் 08940882992 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். .
தகவல் மற்றும் படங்கள்; சரோஜாகுமார், Karthick Mat முகநூல் பதிவுகள்
முகப்புபடம் நன்றி; செஞ்சோலை
#OrganicAgriFoodMarket #OrganicFoods #TamilarMarabuSandhai

Comments
View More