#5PointsForWeightloss எந்த வயதிலும் எடையை குறைப்பதற்கான 5 சிறந்த உணவுப் பழக்கங்கள்


1 காலை நீங்கள் உண்ணும் உணவில் குறைந்தது 20 கிராம் அளவுக்கு புரதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.  காலையில் திடமான அளவு புரதத்தை உட்கொள்வது ரத்த சர்க்கரை மற்றும் ஆற்றல் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

புரதமானது செரிமானத்தை மெதுவாக்குகிறது. பெரும்பாலான மக்கள் கார்போஹைட்ரேட்-அதிகமான காலை உணவை உட்கொள்கின்றனர். இதன் விளைவாக சில மணிநேரங்களுக்குப் பிறகு ஆற்றல் செயலிழப்பு ஏற்படுகிறது, 

Must Read:#HealthAlert கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள்

காலை உணவில் போதுமான புரதத்தைப் பெறுவது எடை இழப்பை ஊக்குவிக்கும்.  அதிகப்படியான உணவைத் தடுக்க உதவுகிறது  மூளை மற்றும் தசைகளுக்கு எரிபொருளாக புரதத்துடன் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டின் சிறிய பகுதியை சேர்க்க வேண்டும்.முறையான உடல் எடையைப் பராமரிக்க காலை உணவு மிகவும் அவசியம். 

2 ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போது அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.  நிலையான உடல் எடையை பராமரிப்பதில்  நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளில் நார் சத்து நிரம்பியுள்ளது, 

உடல் எடையை பராமரிக்கும் உணவுகள்

3 இரவு நேர தின்பண்டங்களைத் தவிர்க்கவும் .இரவு நேர சிற்றுண்டி  கொழுப்பு எரிப்பை தாமதப்படுத்தும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.  தூங்குவதில் சிக்கல் ஏற்படும்.  மஞ்சள் , மிகளு கலந்த பால் குடிப்பது நல்லது. வயிற்றுக்கு இதம் தருவது மட்டுமின்றி தூங்க உதவும், 

Must Read #6PointsForHeathy மாலை நேரத்து பசியை போக்க என்ன சாப்பிடலாம்…?

4 காய்கறிகளுடன் உங்கள் உணவைத் தொடங்குங்கள். உணவுக்கு முன்பு சாலட் (அல்லது காய்கறி சூப்) சாப்பிடுவது,  நீர் மற்றும் நார்ச்சத்து மூலம்மேலும் குறைந்த கலோரிகளால் உங்கள் வயிறு நிரம்பும். உங்கள் உணவில் அதிக ஊட்டச்சத்து நிரம்பிய, ஆரோக்கியமான, குறைந்த கலோரி உணவைச் சேர்க்க முடியும். 

5. நாள் முழுவதும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.

பூசணி விதைகள், பாதாம் ,சூரியகாந்தி விதைகள் ஆகியவை மெக்னீசியம் உணவுகளாகும்.  காலை உணவின் போது பாதாம் மற்றும் பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.  ஓட்மீல், தானியங்கள் அல்லது தயிருடன் சாப்பிடுங்கள். மதிய உணவில் பீன்ஸ் மற்றும்/அல்லது முழு தானியங்களைச் சேர்க்கவும். 

-ரமணி 

#5PointsForHealthy   #5PointsForWeightLoss   #5PointsForHealhtylife  #WeightLossTips


Comments


View More

Leave a Comments