#HealthAlert கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள்
கண்கள் சிக்கலான நரம்புகள், ரத்தநாளங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. எனவே அவை சரியாக செயல்பட சரியான வைட்டமின்கள் மற்றும் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு தேவை. கணினி திரையில் பணியாற்றுவதை நாம் நிறுத்துவது சாத்தியம் இல்லை. மடிக்கணினியாக இருந்தாலும் அல்லது நெட்ஃபிளிக்ஸில் அதிகமாகப் பொழுதுபோக்கு படங்களை பார்ப்பது என்றாலும் , பணி தொடர்பான மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப் குழுக்களுக்கு பதிலளிக்கவும்; நாம் கணினி உலகை சார்ந்திருக்கின்றோம். இதனால் நமது கண்கள் அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. கண்களுக்கு ஓய்வின்றி அழுத்தம் கொடுப்பதால் சில குறைபாடுகள் நேரிடுகின்றன. வீங்கிய கண்கள், கண்களுக்குக் கீழே வீக்கம், கருவளையங்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
Must Read: #6PointsForHeathy மாலை நேரத்து பசியை போக்க என்ன சாப்பிடலாம்…?
எனவே கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான இனிப்பு உருளைக்கிழங்கு, மாம்பழம், கேரட் மற்றும் பூசணிக்காய் போன்றவை வயது முதிர்வின்போது நேரிடும் கண் சிதைவின் அபாயத்தைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
வைட்டமின் ஏ சூரிய ஒளி பாதிப்பிலிருந்து கண்ணைப் பாதுகாக்கிறது. சரியான பார்வைக்கு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான கார்னியாவைப் பராமரிக்க வேண்டியது முக்கியம். ஆரோக்கியமான கார்னியாவை பராமரிப்பதில் பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது
வைட்டமின் ஈ
பாதாம், அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், எள் மற்றும் ஆளி விதைகள் ஆகியவை உடலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு இடையே உகந்த சமநிலையை பராமரிக்கின்றன.
வைட்டமின் ஈ கண் செல்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வைட்டமின் சி
நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யாப்பழம் மற்றும் தக்காளி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் கொலாஜனை உருவாக்குவதற்கான முக்கிய ஆதாரங்களாகும்.
Must Read: 4 ஆம் தேதி கோவை மாவட்ட இயற்கை விளைபொருள் நுகர்வோர் கூட்டமைப்பு தொடக்கம்…
இவை கார்னியா மற்றும் ஸ்க்லெராவுக்கு கட்டமைப்பை வழங்குவதற்கு அவசியமானது.
பச்சைக் காய்கறிகள்
கீரை, வெண்டைக்காய், பட்டாணி போன்ற பச்சைக் காய்கறிகள் தீங்கு விளைவிக்கும் உயர் ஆற்றல் நீல அலைநீளத்தை வடிகட்டவும் மற்றும் கண்ணை சிதைவிலிருந்து பாதுகாக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.
ஒமேகா 3
ஒமேகா 3 உள்ள மீன் உணவுகள், கடல் உணவுகள் கண்களுக்கு சிறந்தது. சியா விதைகள், அக்ரூட் பருப்புகள், ஆளிவிதை, சோயாபீன் எண்ணெய் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தேவையான அளவில் நிறைந்துள்ளது.
#FoodForEyeHealth #Vitaminfoods #EvitaminFoods #HealthyEye
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments