உடல் எடையைக் குறைக்க நத்தைச்சூரி மூலிகை
மூலிகையின் பயன்பாடுகளை கவிதை நடையில் வழங்குவதில் நெய்வேலியை சேர்ந்த பேரா.முனைவர்.ச.தியாகராஜன்(VST) அவர்கள் சிறந்து விளங்குகிறார். அவ்வப்போது நமது இணையதளத்தில் அவர் வழங்கும் கவிதை வடிவ மூலிகை நற்பயன்களை பார்க்கலாம்
நத்தைச்சூரி மூலிகை
வயல்வெளிகள், வாய்க்கால் ஓரங்கள், ஈரப்பதமான இடங்களில் தானாக வளர்ந்திருக்கும் பூண்டு வகைத்தாவரம் நீ!
குழி மீட்டான், தாருணி, நத்தைச் சுண்டி, தொல்லியாக் கரம்பை,
நத்தை வராளி எனப் பல்வேறு பெயர்களில் விளங்கும் ஒருபொருள்
குறித்த பல சொல் கிளவி நீ!
சித்தர்கள் போற்றும் மஹா மூலிகை நீ!
உன் காற்று மற்றும் சாறு பட்டால் நத்தையின் ஓடுவெடிக்கும்;இறக்கும் என்பது சித்தர் வாக்கு!.
உடல் சூடு, உடல்பருமன்குறைப்பு, தாய்ப்பால் அதிகரிப்பு, ஆண்மை பலம் அதிகரிப்பு, நரம்பு பாதிப்பு, சிறுநீரகக் கற்கள், கண் எரிச்சல், முடி உதிர்தல், இரத்த சுத்தி, புற்றுநோய், உடல் பருமன், மாதவிடாய்க்கோளாறு, ஊளைச்சதை, சளி, இருமல், மூலநோய், உடல் சூடு, எலும்பு வலிமைஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
Also Read: தினசரி உண்ணும் உணவுகளில் தீங்கு தரும் பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
விதை, வேர், தண்டு, இலை, மலர், காய்கள் என எல்லாம் பயன்படும் நல்ல செடியே! சித்து வேலைகளுக்குப் பயன்படும் சின்னச் செடியே!உடலுக்கு வலுவைத் தரும் கற்பக மூலிகையே!
சிறிய இலைகளை உடைய சின்னச் செடியே! பறவைகளுக்கு விதை உணவு தரும் விந்தைச் செடியேரேகைகள்
இல்லா இலைசெடியே!
நீல நிறப் பூப்பூக்கும் ஞானச் செடியே! நிறைய விலைபோகும் வேர் செடியே! நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
தவசி முருங்கை செடி.
தமிழகம் உன் தாயகம்!
தரிசு நிலங்கள், கடற்கரை ஓரங்களில் வளரும் மூலிகைச்செடி நீ!
உன் இன்னொரு பெயர் ‘சன்னியாசி முருங்கை!’.
கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்ட வினோதச் செடி நீ!
ஆஸ்துமா, இருமல், ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், உள்நாக்கு, நெஞ்சு சளி, இரைப்பு, மாந்தம், வயிறு உப்புசம், அஜீரணம், வயிற்றுவலி, காய்ச்சல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை நீ!

கூட்டு, பொரியல், துவையல் செய்யப் பயன்படும்தமிழ்நாட்டுச் செடியே! வாய்ப்புண்ணுக்குப் பச்சை இலை தரும் பசுமைச் செடியே!
முருங்கை இலை வடிவ இலை செடியே!
பத்திய உணவாகப் பயன்படும் சத்துச் செடியே!
வீடுகளில் வளர்க்கப்படும் அழகு செடியே!
கொத்துக் கொத்தாய் வெண்பூக்களைக் கொண்டமுத்துசெடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி; பேரா.முனைவர், ச.தியாகராஜன்(VST),நெய்வேலி. 9443405050.(WhattsApp no)
பின்குறிப்பு; மூலிகைகளை எப்படி உண்ண வேண்டும் என்பதை வாட்ஸ் ஆப் எண் வாயிலாக பேரா.முனைவர்.ச.தியாகராஜன் அவர்களிடம் கேட்டு பயன்படுத்தவும்.
#ThavasiMurungai #NathaiSoori #HealthyHerbs #PatttiVaithiyam

Comments
View More