தினசரி உண்ணும் உணவுகளில் தீங்கு தரும் பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
உணவுக் கலப்படம் எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி நிறைய கற்றுக்கொண்டோம். இதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) நாம் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது, ஆளும் அரசுகளின் தலையீட்டால் மட்டுமே உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டறிய முடியும். அப்போதுதான் நாம் 'ஆரோக்கியமாக சாப்பிட' முடியும். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலேயே நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் நிறைந்திருக்கின்றன. அது பற்றி இப்போது பார்க்கலாம்.
தயிரிலும் கலப்படம்
தயிரை ஒரு ஆரோக்கியமான உணவாக நாம் நினைக்கின்றோம். ஆனால் சில தனியார் நிறுவனங்கள் தயிரில் கேரமல் கலரிங் போன்ற ரசாயனங்கள் சேர்ககின்றன.
Also Read: பித்த குமட்டல் தீர்க்கும் களா செடி
குழந்தைகளின் அதீத செயல் திறனை தூண்டும் வகையில் மற்றும் பெரியவர்களின் இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும் வகையிலும் கலரிங் ஏஜெண்டுகள் சேர்க்கப்படுகிறது.
தக்காளி சாஸ்
கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸில் பிஸ்பெனால் ஏ (பிபிஏ) நிறைந்துள்ளது, இது ஹார்மோன் அமைப்பில் தலையிடுகிறது,
மேலும் கலப்பட தக்காளி சாஸ் உட்கொள்வதால் இதய நோய், மார்பக புற்றுநோய் மற்றும் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
பழக்கலவை அல்லது சாலட்
சாலடுகள் ஆரோக்கியமானவை. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயாராக இருக்கும் சாலட் டிரஸ்ஸிங் ஆரோக்கியமானதல்ல. நிபுணர்களின் கூற்றுப்படி, பல பிராண்டுகள் கேரமல் நிறத்தைப் பயன்படுத்துகின்றன. இவை மனித நுகர்வுக்கு பாதுகாப்பானவை அல்ல. இருப்பினும், அதை நிரூபிக்க மேலும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று பொது நலனுக்கான அறிவியல் மையம் கூறுகிறது.
வேர்க்கடலை வெண்ணெய்
குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட வேர்கடலை வெண்ணைய்க்கு அடிமையாகிறார்கள், இது பெரும்பாலும் புரதம் மற்றும் நல்ல கொழுப்பின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது.
Also Read: உடல் நஞ்சை தீர்க்கும் கரு ஊமத்தை மாதவிடாய் வயிற்று வலி தீர்க்கும் கல்யாண முருங்கை
ஆனால், இதில் அஃப்லாடாக்சின் என்ற வேதிப்பொருள் கலந்துள்ளது. இது கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாகும்.
ஊறுகாய்
ஊறுகாய்கள் பயன்படுத்த எளிதானவை மற்றும் தெய்வீகமான சுவை கொண்டவை, ஆனால் மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய்ப் பொடியின் விளைவைக் கொடுக்க மஞ்சள் மற்றும் சிவப்பு சாயங்கள் சேர்க்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும், சோடியம் பென்சோயேட்டால் நிறைந்துள்ளன. இது உயிரணுக்களின் மின் நிலையத்தில் உள்ள டிஎன்ஏவின் முக்கியமான பகுதியான மைட்டோகாண்ட்ரியாவை சேதப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
அதிக அளவு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது பல நாள்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
புற்றுநோயை உண்டாக்கும் சேர்மங்களான N-nitroso கலவைகள் உள்ளன. பக்கவிளைவுகளுக்கு காரணமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியின் ஆயுளை அதிகரிக்க சோடியம் நைட்ரைட் சேர்க்கப்படுகிறது.
சூப்கள்
குளிர்கால மாலை நேரத்துக்கு சூப் குடிக்கும் பழக்கம் நம்மில் அதிகம் பேருக்கு இருக்கிறது. புதிதாக தயாரிக்கப்பட்ட சூப் மட்டுமே உண்மையிலேயே சத்தானவை. பேக்கேஜ் செய்யப்பட்ட சூப்பை அனுபவித்து குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. பேக்கேஜ் செய்யப்பட்ட சூப்களில் மோனோசோடியம் குளுட்டமேட், கேரமல் கலர் மற்றும் மால்டோடெக்ஸ்ட்ரின், கலோரிக் இனிப்பு ஆகியவை உள்ளன, இது இரத்த குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை உயர்த்தும் திறன் கொண்டது.
பாப்கார்ன்
ஒரு பெரிய பாக்கெட் பாப்கார்னுடன் உங்களுக்குப் பிடித்த வெப் தொடர் அல்லது சினிமாவை ரசிப்பது பலரது வழக்கம். ஆனால், பாப்கார்ன் உண்மையில் உங்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும். வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் பாப்கார்னில் கேரமல் கலரிங், TBHQ (tert-Butylhydroquinone) உள்ளது,
இது மனித நுகர்வுக்கு நல்லதல்ல. அவை பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலத்தையும் (PFOA) கொண்டிருக்கின்றன, இது டெஃப்ளான் பானைகள் மற்றும் பாத்திரங்களில் காணப்படும் நச்சுப் பொருளாகும்.
புரத மிட்டாய் பார்கள்
வொர்க்அவுட்டிற்குப் பிறகு ஆற்றலுக்கான எளிதான ஆதாரமாக புரத மிட்டாய் பார்களை நாம் சாப்பிடுவது வழக்கம். பேக்கேஜ் செய்யப்பட்ட மிட்டாய் பார்களில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிச்சயம் கிடைக்கும், ஆனால் அதனுடன் அதிக அளவு கேரமல் கலரிங் மற்றும் ஜிங்க் ஆக்சைடையும் உட்கொள்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? துத்தநாக ஆக்சைடு என்பது சன்ஸ்கிரீன் க்ரீமில் பால் போன்ற வெள்ளை நிறத்தைக் கொடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது உடல்நலனுக்கு தீங்கானதாகும்.
பாக்கெட் அல்லது பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் பயன்படுத்த எளிதானவை மற்றும் வெவ்வேறு சுவைகளில் வருகின்றன என்பதெல்லாம் சரிதான், ஆனால் மற்றொரு உண்மை என்னவென்றால், அவற்றில் க்ளோஸ்ட்ரிடியம் போட்லினம் எனப்படும் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அத்தகைய உணவுகளை உட்கொள்வது போட்யூலிசத்தை ஏற்படுத்தும், இது ஒரு தீவிர நோயாகும்,
Also Read:குளிர்காலத்திற்கு ஏற்ற இஞ்சி, இலவங்கப்பட்டை பால்
இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை பெரும்பாலும் பிஸ்பெனால் ஏ அல்லது பிபிஏ என்ற ரசாயனப் பொருளைக் கொண்டிருக்கின்றன, இது பொதுவாக பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவு சேமிப்பு கொள்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது
-ஆகேறன்
#FoodAdulteration #AvoidAdulterationFoods #AdulterationInDailyFoods #UnHealthyFoods
Comments