உடல் நஞ்சை தீர்க்கும் கரு ஊமத்தை மாதவிடாய் வயிற்று வலி தீர்க்கும் கல்யாண முருங்கை
நமது அருகாமையில் வளரும் மூலிகைகளைக் கொண்டு நமது உடல் நலனை பேணி பாதுகாக்க முடியும். அந்த வகையில் மூலிகைகளின் நன்மைகள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆதனூரை சேர்ந்த திரு.ASNசாமி அவர்கள் தொடர்ந்து நமக்கு வழங்கி வருகிறார். இன்று கரு ஊமத்தை மற்றும் கல்யாண முருங்கையில் உள்ள நன்மைகள் குறித்து அவர் கூறும் தகவல்களைப் பார்க்கலாம்.
கரு ஊமத்தை
அகன்ற இலைகளையும் வாய் அகன்ற நீண்ட இயலுமான புனல் வடிவ மலர்களையும் முள் நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடி மலர்கள் வெள்ளை மஞ்சள் கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும்
Also Read: திருச்சியில் முதலாவது தெரு உணவு மையம்…
இவை வெள்ளை ஊமத்தை பொன்னூமத்தை கருஊமத்தை என பெயர் பெறும் பொதுவாக சாலையோரங்களிலும் வளரும் கரு ஊமத்தை மட்டும் சற்று அரிதாக காணப்படும் கருஊமத்தை பொதுவாக நோய் தணிப்பானாகவும் சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயல்படும் மற்றும் மாந்திரீகத்தில் இதன் பயன்பாடுகள் அதிகம்

பொதுவான பயன்களை நாம் பார்ப்போம் இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்ட வாதவலி மூட்டு வீக்கம் வாயு கட்டிகள் அண்ட வாயு தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல் ஆகியவை தீரும் இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் காதில் விட சீதளத்தால் வந்த காது வலிதீரும் இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடி புண்ணில் கட்ட ஆறும்
மூன்று துளி சாரு வெல்லம் கலந்து காலை மாலை மூன்று நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும் கடும் பத்தியம் அவசியம் பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாத சாப்பிடவும். கருஊமத்தை இதில் ஒரு அடுக்கும் பூவும் உள்ளது இரண்டடுக்கு பூவும் உள்ளது இலைச் சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த சதை வளரும் குறைகள் தீரும்
Also Read: பரோட்டாவின் சுவையை உணரும் நாம் மைதாவின் தீமைகளையும் தெரிந்து கொள்வோம்
ஊமத்தை பிஞ்சை உமிழ் நீரில் மையாய் அரைத்து தடவ புழுவெட்டு தீரும் இலை பூ விதை மூன்றையும் பாலில் விட்டாய் அவித்து உலர்த்தி தூள் செய்து பிடியாய் செய்து புகைக்க ஆஸ்துமா மூச்சுத்திணறல் உடனே குறையும் விதைகளை மென்மையாக அரைத்து வெளிப்பூச்சாக தடவிவர பர் சிதைவினால் ஏற்படும் வலி மூலம் கரப்பான் சொறி வெண்மேகம் ஆகியவை தீரும்
கல்யாண முருங்கை
அகன்ற இலைகளையும் கண்ணைப் பறிக்கும் சிவப்பு மலர்களையும் செந்நிற உருட்டு விதைகளையும் கொண்ட மென்மையான கட்டையினையும் உடைய மரம் முருக்க மரம் எனவும் வழங்கப்பெறும் இலை.பூ விதை பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை இலை சிறுநீர் பெருக்கி மலமிளக்கி தாய்பால் பெருக்கி மாதவிலக்கு தூண்டுதல் ஆகிய செய்கைகளை உடையது பூ கருப்பைக் குறை நீக்கியாகவும் பட்டை கோழையகற்றி ஜுர நீக்கி குடல் பூச்சி கொல்லியாகவும் விதை மலம் இளக்கி குடற் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்

இலைச்சாறு 10 துளிகள் 10 துளி வெந்நீர் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தியாகி வயிற்றுப் புளிப்பு கபக்கட்டு கோழி ஆகியவற்றை நீக்கி பசியும் சிரிப்பு திறனும் உண்டாகும் குடற் பூச்சிகள் அகலும் இலைச்சாறு முப்பது மில்லி 10 நாட்கள் மட்டும் கொடுக்க மாதவிடாய்க்கு முன் பின் காணும் வயிற்றுவலி தீரும்
Also Read: குளிர்காலத்திற்கு ஏற்ற இஞ்சி, இலவங்கப்பட்டை பால்
இலைச் சாறு 30 மில்லி வெள்ளை வெங்காயச் சாறு 30 மில்லி அன்னக்கொடி நீருடன் காலை மட்டும் இளம் சூட்டில் கொள்ள நாள்பட்ட இரைப்பு காசம் தீரும் புலால் புகை போகம் விளக்கவேண்டும் சாறு ஒரு கரண்டி மோரில் உட்கொள்ள நீர்தாரை அழற்சி நீர் எரிச்சல் தீரும்
நன்றி; ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505
#KaruOomathaiBenefits #KalyanMurungaiBenefits #HealthyHerbs #PattiVaithiyam

Comments
View More