ஜனவரி 21 ஆம் தேதி முதல் 2 நாட்கள் இயற்கை வாழ்வியல் மருத்துவ பயிற்சி


அந்தியூர் செஞ்சோலை இயற்கை வேளாண் பண்ணையின் சார்பில் வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை, 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அதில் விரிவாக இயற்கை மருத்துவம் (Naturopathy) பற்றி நாம் அறிந்து கொள்ள உள்ளோம்,

 முகாமின் சிறப்பாக பழங்குடி மக்கள் வாழ்வியலும் வனமும் பற்றி நம்முடன் பழங்குடி மக்கள் செயல்பாட்டாளர் திரு.அன்புராஜ் அண்ணா அவர்கள் கலந்துரையாட உள்ளார். 

Must Read: அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா?

தொடு மருத்துவர்.திரு.அருள்ஒளி அவர்கள்,இயற்கை வேளாண்மையின் அடிப்படைகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.  பயிற்சி முகாமில், Dr.அஜய் பிரகாஷ் B.Y.N.S அவர்கள் நம்முடன் இயற்கை மருத்துவத்தின் அடிப்படைகள்(Naturopathy),  எளிமையான யோகா & மூச்சுப் பயிற்சிகள், அடிப்படை உடல் இயங்கியல், உணவும் உடல் நலனும்,  உடல் கழிவு நீக்க முறைகள் , எளிமையாக நோய் குணப்படுத்தும் முறைகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

மேலும், சத்துமிகு சிறுதானியங்கள், மரபு அரிசி வகைகள், மூலிகைகள் போன்றவற்றின் மருத்துவ குணங்கள், பழ உணவுகள் மூலம் உடல்நலம் பேணுதல்  போன்ற பல இயற்கை மருத்துவத்தின் அடிப்படைகளை எளிமையாக இயற்கை சூழலில் நமக்கு கற்றுக்கொடுக்க உள்ளார்.

இந்த பயிற்சி முகாமில்  20 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. எனவே முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய சு.அருள்ஒளி 93 61 42 77 47 , த.மயில்சாமி 99 44 019 14 9 ஆகியோரை மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.  

 செஞ்சோலை இயற்கை வேளாண் பண்ணை, நஞ்சமடைக் குட்டை, அந்தியூர், ஈரோடு மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடத்தின் வரைபடத்துக்கு https://goo.gl/maps/YqKF9YxX5WP6tWvw5  என்ற இணைப்பை சொடுக்கவும். 

#NaturalLifeTraining #HealthyLifeTeaching #HowToLifeWithNature

 
 

ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்

 
 
 
 

Comments


View More

Leave a Comments