அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா?


முட்டை என்பது ஒரு சுவையான மற்றும் பல்வேறு சத்துகள் அடங்கிய  சமையலின் பிரதானமான உணவாகும்.  பல்வேறு விரைவு உணவு, எளிய உணவுகளில் முக்கியமாக இடம் பெறுகிறது. முட்டையில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் ஆரோக்கியமற்றது என்ற கருத்து நீண்டகாலமாகவே ஒரு சர்ச்சை உள்ளது.  அதிக கொலஸ்ட்ரால் உள்ள ஒருவர், உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது சரியா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. 

நோய் கட்டுப்பாட்டு மையங்களின்படி  தகவல்படி, அமெரிக்காவில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் 11.5%  பேர்,  உயர்ந்த மொத்த கொலஸ்ட்ரால் அளவுகள்  (240 mg/dlக்கு சமமாக அல்லது அதிகமாக ) உயர்த்தியுள்ளனர். அதிக கொலஸ்ட்ரால் என்பது பெருந்தமனி தடிப்பு அல்லது தமனிகளுக்கு சேதம் விளைவிக்கும், இது காலப்போக்கில் இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. ஒருவரின் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதில் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது.

Must Read: வீட்டு உணவு போல பாங்கான கோவை போத்தனூர் மாமா & மாமி கிச்சன்

முட்டையில் உணவுக் கொழுப்பு அதிக அளவு உள்ளது. (அமெரிக்காவின் USDA அமைப்பின் கூற்றுப்படி  ஒரு முட்டையில் சுமார் 207 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது), இந்த USDA அமைப்பானது பெரும்பாலும் உணவு மற்றும் இரத்தக் கொலஸ்ட்ரால் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.  அமெரிக்காவின் இதய நோய் அசோசியேஷனின் (AHA) 2019 வெளியீட்டின்படி, சராசரியாக, அமெரிக்க பெரியவர்களின் உணவு திட்டத்தில்  முட்டைகள் 25% அளவுக்கு உணவுக் கொழுப்பை உருவாக்குகின்றன என்பது தெரியவந்துள்ளது. 

கொலஸ்ட்ரால் ஒருபுறம் இருக்க, முட்டை பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. உதாரணமாக, 7 கிராம் புரதத்தை வழங்குவதோடு, வைட்டமின் டி, கோலைன் மற்றும் லுடீன் ஆகியவற்றின் மூலமாகவும் முட்டை உள்ளது. பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு கோலைன் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும், மேலும் லுடீன் கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.

முட்டைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் என்ன தொடர்பு?

கொலஸ்ட்ரால் உடலில் உற்பத்தியாகிறது மற்றும் உணவின் மூலமும் பெறப்படுகிறது. உண்மையில், பெரும்பாலான கொலஸ்ட்ரால் உங்கள் உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது (சுமார் 80%). உணவைத் தவிர, ஒரு நபரின் கொலஸ்ட்ரால் அளவுகளில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் ஹார்மோன் உற்பத்தி மற்றும் மனித திசு அமைப்பு உட்பட பல செயல்பாடுகளை கொண்டுள்ளது.

கொலஸ்ட்ராலுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்ததா?

நோயியல் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி  இரண்டு வெவ்வேறு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன. குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) பெரும்பாலும் "கெட்ட" கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது தமனி சுவர்களில் குவிந்து மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். 

உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL), அல்லது "நல்ல" கொழுப்பு, கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு கொண்டு செல்கிறது, பின்னர் அது உடலில் இருந்து வெளியறி விடும்.  அதிக அளவு கெட்ட கொழுப்பு என்பது  இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையது, அதே சமயம் அதிக அளவு நல்ல கொழுப்பு என்பது நமது உடலுக்கு பாதுகாப்பானதாகும். 

முட்டை உட்கொள்ளல் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு குறித்து மக்கள்தொகை அடிப்படையிலான ஆய்வுகள்  கண்டறியவில்லை. 2018 இல் வெளியிடப்பட்ட ஊட்டச்சத்துக்கள் என்ற இதழில் வெளியான மருத்துவரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளில், பெரும்பாலான மக்களுக்கு (மக்கள் தொகையில் ~2/3) முட்டை உட்கொள்ளல் கொலஸ்ட்ராலில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியது. 

உணவுக் கொலஸ்ட்ரால் காரணமாக அதிக பாதிக்கப்படுவோர்  அதிக முட்டைகளை உட்கொள்வது அவர்களின் கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு  இரண்டையும் அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு இரண்டும் உரிய முறையில் பராமரிக்கப்படும்போது அவற்றால் இதய நோய் பாதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கவில்லை. 

அமெரிக்க இதய நோய் அசோஷியேசன் கூற்றின்படி, நிறைவுற்ற கொழுப்புகளின் அதிகப்படியான நுகர்வு கெட்ட கொழுப்பு அளவுகளுடன் வலுவான தொடர்பைக் கொண்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

முட்டை உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா?

ஆம், முட்டை உட்கொள்வது உங்கள் கொலஸ்ட்ரால் அளவுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். இருப்பினும், முட்டை மட்டும் இதய நோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்காது. 

Must Read: ஆப்பிள்- கொய்யா இரண்டில் சிறந்து எது தெரியுமா?

"முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலும், அவை முதலில் நினைத்தது போல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது என்று சமீபத்திய ஆராய்ச்சி சுட்டி காட்டுகிறது. இது உண்மையில் வெண்ணெய், சிவப்பு இறைச்சி மற்றும் சில எண்ணெய்களில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு தான் கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற சில ஆபத்து காரணிகள் உள்ள தனிப்பட்டவர்கள், உணவுக் கொழுப்பின் விளைவுகளுக்கு அதிகம் பாதிப்பு கொண்டவர்களாக இருக்கலாம்" என்கிறார் மெலிசா மிட்ரி நியூட்ரிஷனின் எம்.எஸ்., ஆர்.டி., மெலிசா மிட்ரி.

ஒரே ஒரு உணவில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கொலஸ்ட்ரால் அளவை ஆரோக்கியமான அளவில் நிர்வகிக்க ஒட்டுமொத்த ஆரோக்கியமான உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

கொலஸ்ட்ராலுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்ததா?

முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் பெரும்பாலான கொலஸ்ட்ரால் உள்ளது. உணவு மற்றும் இரத்தக் கொழுப்பு ஆகியவற்றுக்கு இடையேயான உறவை நன்கு புரிந்துகொள்வதற்கு முன்பு, பெரும்பாலான கொலஸ்ட்ராலைத் தவிர்க்க முழு முட்டைகளுக்குப் பதிலாக முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம் என  வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கொலஸ்ட்ரால் தவிர, மஞ்சள் கருவில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள், கோலைன் மற்றும் லுடீன் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. முழு முட்டைகளை சாப்பிடுவது என்பது முட்டையிலிருந்து அனைத்து ஊட்டச்சத்து நன்மைகளையும் பெறுவதாகும். 

முட்டைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் என்ன தொடர்பு?இருப்பினும், கொலஸ்ட்ரால் உட்கொள்ளல் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடும் நபராக இருக்கலாம் என்று மித்ரி பரிந்துரைக்கிறார். உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணர் உங்களுக்கு எது சிறந்த உணவு எது என்பதைக் கண்டறிய உங்களுக்கு மேலும் உதவ முடியும். 

ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?

சாதாரண கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள் ஒரு முழு முட்டையையும் பாதுகாப்பாக சேர்க்கலாம். இருப்பினும், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்ற பிற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு முட்டைக்கான குறிப்பிட்ட வரம்பை தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.

கவனத்தில் கொள்ள வேண்டியவை 

முட்டை என்பது  புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக திகழ்கிறது.  வல்லுநர்கள் உணவுக் கொழுப்பைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, முட்டைகளை சாப்பிடுவது, இரத்தக் கொழுப்பில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உங்களுக்கு அதிக கொழுப்பு அல்லது இதய நோய் இருந்தால், ஒரு குறிப்பிட்ட உணவைக் காட்டிலும் ஒட்டுமொத்த ஆரோக்கியமான உணவு முறையில் கவனம் செலுத்துமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உங்கள் முட்டை உட்கொள்ளல் குறித்த குறிப்பிட்ட சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். 

-பா.கனீஸ்வரி 

#FoodDiet  #Cholesterol  #EggCholesterol  #EggBenefits

 
 
 
 

Comments


View More

Leave a Comments