ஆப்பிள்- கொய்யா இரண்டில் சிறந்து எது தெரியுமா?
ஆப்பிள், கொய்யா இரண்டில் எதில் "நியூட்ரிசன்" அதிகம் இருக்கிறது என்று போட்டி வைத்தால் எது ஜெயிக்கும்? முதலில் ஆப்பிளில் உள்ள சத்துகள் என்ன என்று பார்க்கலாம். 100 கிராம் ஆப்பிளில் 52 கலோரி சக்தி உள்ளது. 14 கிராம் மாவுச்சத்து இருக்கிறது. அதில் 2.5 கிராம் நார்ச்சத்து அடங்கியிருக்கிறது. ஆப்பிளில் புரதம் - 0.3கிராம் இருக்கிறது.
Must Watch: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க நித்தியகல்யாணி மூலிகை…
ரத்த அழுத்தத்தை குறைக்கும் தாது உப்பான பொட்டாசியம் 107 மி.கிராம் உள்ளது. ரத்த அழுத்தத்தை கூட்டும் உப்பான சோடியம் 1மி.கிராம் மட்டுமே உள்ளது.

பிற சத்துகள்;
விட்டமின் சி- 7% = 4.6 IU
விட்டமின் ஏ - 1% = 54 IU
மெக்னீசியம் = 5mg
பாஸ்பரஸ் = 11mg
விட்டமின் பி3 = 0.091mg
விட்டமின் ஈ = 0.18mg
அடுத்து கொய்யாவில் உள்ள சத்துகள் என்னவென்று பார்க்கலாம். 100 கிராம் கொய்யாவில் 68 கலோரி சக்தி உள்ளது. பொடாசியம் 417 மி.கிராம் உள்ளது. சோடியம் 2 மில்லிகிராம், மாவுச்சத்து 14 கிராம் உள்ளது. அதில் நார்ச்சத்து 5 கிராம் இருக்கிறது.
கொய்யாவில் உள்ள இதர சத்துகள்;
புரதம் 2.6 gram
விட்டமின் ஏ 12%= 624mg
விட்டமின் சி 380%= 228.3mg
கால்சியம் 1%
இரும்பு 1%
மெக்னீசியம் 5% =22mg
விட்டமின் பி6 5%
பாஸ்பரஸ் = 40mg
விட்டமின் ஈ = 0.73mg
ரத்த சர்க்கரை ஏற்றும் விதத்தை கணிக்கும் Glycemic Index வைத்து இரண்டையும் சோதிக்கும் போது கொய்யா பழத்தின் Glycemic index - 32 ஆப்பிளின் Glycemic index - 38 இருப்பினும் இந்த இரண்டு பழங்களும் ரத்த சர்க்கரையை பெரிதாக ஏற்றாத Low glycemic பழங்களாக இருக்கின்றன.
நீங்கள் கூகுளில் எங்கு தேடினாலும் டயாபடிக் மக்கள் சாப்பிடக்கூடிய பழங்கள் லிஸ்ட்டில் - கொய்யா இடம்பெற்றிருக்காது. ஆனால் பழங்களிலேயே மிகவும் குறைந்த க்ளைசீமிக் இண்டெக்ஸ் கொண்ட பழம் - கொய்யா தான்.
மேற்கத்திய உலகில் உருவாக்கப்படும் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் கொய்யா விடுபட்டுவிடும். காரணம்.. அங்கெல்லாம் கொய்யா கிடையாது. நான் கூட பேலியோ பரிந்துரைப்பில் கண்டதுண்டு. ந்தியா தவிர வேறு எங்கும் இத்தனை இலகுவாக கொய்யா பழம் ஈசியாக கிடைப்பதில்லை.
Must Read: முட்டை , மாமிசம், மீன் சாப்பிட்டால் ரத்தத்தில் க்ளூகோஸ் ஏறுமா?
அங்கு கிடைக்காத ஒரு பழத்தை எப்படி அவர்கள் எழுதுவார்கள்? ஆனால் நம் ஊரில் எப்போதும் கிடைக்கும் இந்த பழத்தை நாம் நமது புத்தகங்களில் எழுத வேண்டும். அடுத்து பொருளாதார ரீதியாக, செலவு ரீதியாக என்ன நன்மைகள் என்று ஆராய்வோம்.
ஒரு கிலோ கொய்யா - ரூபாய் 50/, ஒரு கிலோ ஆப்பிள் - ரூபாய் 200 /- கொய்யா பொருளாதார பேதமின்றி நம் அனைவருக்குமானது. நான் தினமும் ஒரு கொய்யாகாய் உண்டு வருகிறேன். எங்கள் குடும்பத்தில் எப்போதும் கொய்யா காய் தான். கொய்யாக் காயை நாம் பேலியோவில் பரிந்துரைக்கிறோம். கொய்யா கனியை மெய்ண்டணண்ஸில் எடுக்கலாம்.
நீரிழிவு உள்ள வயதானவர்கள்/ பல் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யாக்கனி சாப்பிடலாம் ஆப்பிள் போல கொய்யாவிலும் நன்மை உண்டு கொய்யா பழத்தை கொய்து உண்ண இன்னும் தயக்கமேன்?
-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,பொது நல மருத்துவர்,,சிவகங்கை
#AppleAndGuava #WhichIsBetterBetweenAppleAndGuava #Apple #Guava

Comments
View More