வீட்டு உணவு போல பாங்கான கோவை போத்தனூர் மாமா & மாமி கிச்சன்


போத்தனூர் 'வெள்ளைக்காரனின் கோயம்புத்தூர்'  என்று அன்போடு எங்களால் அழைக்கப்படும். காரணம் மேற்கு மண்டலத்தில் முதல் ரயில்வே நிலையம் உள்ளிட்ட எக்கச்சக்க பிரிட்டிஷ் கட்டமைப்புகள்தான்.. 

எப்போது ஊருக்கு செல்வதானாலும் முன்பெல்லாம் போத்தனூர் வழியாகத்தான் காரை விடுவோம். இப்போது கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஹைவே போட்டதனால் இந்த ரூட்டை அனேகமாக மறந்தே விட்டோம். அவ்வளவு நன்றி விசுவாசம் (!!!).

போத்தனூர் பகுதியில் 'ஸ்ரீ லட்சுமி விலாஸ்' என்ற ஒரே ஒரு அருமையான பழைய அய்யர் ஹோட்டல் மட்டுமே உருப்படியாய் உண்டு. சைவ உணவகத்திற்கு வட்டு காய்ந்த ஊர் கோயம்புத்தூர் என்ற 'பெத்த' பெயர் எங்களுக்கு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

Must Read:  ஆப்பிள்- கொய்யா இரண்டில் சிறந்து எது தெரியுமா?

அண்மையில் ஹைவேயில் போகாமல் போத்தனூர் வழியாக ஊருக்கு செல்லலாம் என்று முடிவு செய்த போது, ஸ்ரீ லட்சுமி விலாஸ் செல்லலாம் என்று பார்த்தால் நேற்று பார்த்து கடை மூடி இருந்தது. ஆனால் போகும் வழியில் அதற்கு கொஞ்சம் முன்னமே, இந்த கடையின் போர்டை பார்த்துக் கொண்டே சென்றோம். 'மாமா & மாமி கிச்சன்' என்ற பெயர் தனித்தன்மையுடன் ஆக இருந்ததனால் டக் என்று மனதில் பதிந்தது.

ஸ்ரீ லட்சுமி விலாஸ் கடை மூடி இருக்கவும் அப்படியே ஒரு யூ டேர்ன் அடித்து நேராக மாமா & மாமி கிச்சனுக்கு வண்டியை திருப்பி விட்டோம். சும்மா சொல்லக்கூடாது! கோயம்புத்தூரில் மீதமிருக்கும் வெகு சில உருப்படியான வெஜிடேரியன் கடையில் இதற்கு தாராளமாக ஒரு இடம் கொடுக்கலாம்.

மாமா மாமி கிச்சன் எனும் சிறப்பான உணவகம்

மதிய உணவு சாப்பாடு தஞ்சாவூரில் சாப்பிட்ட மாதிரி இருந்தது. கூட்டு, பொரியல், ஊறுகாய், அப்பளம், சாம்பார், மோர் குழம்பு, ரசம், கெட்டி மோர் (what a Trichy terminology!!!), சாதம் என்று எல்லாமே ஒரு ஹோட்டலில் உள்ளது போல் இல்லாமல் வீட்டில் செய்வது போல பாங்காக இருந்தது.

நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒருவர் பார்சல் வாங்க வந்தார். அவர் கொண்டு வந்த வயர் கூடையில் "சாம்பார் இங்கு வைத்திருக்கிறேன்" என்று கடைக்காரர் சொன்னார். வந்தவர் "ஓ குழம்புங்களா!" என்று ஆமோதித்து விட்டு பையை எடுத்துக்கொண்டு போனார்.

Must Read: விவசாயமும், மனிதன் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது….

சைவ உணவு பற்றி கோயம்புத்தூர்காரர்களான எங்களுக்கு எவ்வளவு பிரம்மாண்டமான அறிவு இருக்கிறது என்பதை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்! சாம்பாரில் ஆயிரம் வகைகள் இருந்தாலும் எங்களுக்கு எல்லாமே குழம்பு தான்.

Jokes apart, நேரம் இருப்பவர்கள் உணவை பற்றி கிண்டலடித்து கமெண்ட் போடாமல் ஒழுக்கமாக நேராகச் சென்று ஒரு வாய் சாப்பிட்டு அந்த பிசினஸ் நன்றாக நடக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மிச்சம் மீதி இருக்கும் ஒழுங்கான சைவ உணவுகள் கூட இனிமேல் கோயம்புத்தூரில் இருக்காது. வயிறு பத்திரம்! தொடர்புக்கு; MAMA & MAMEE KITCHEN 086104 06886  https://maps.app.goo.gl/TiD3Evnp5QB9uPon8

படங்கள் மற்றும் கட்டுரை நன்றி; திரு.பிராண்டிங் குமார் முகநூல் பக்கம்  

#CoimbatorePothanurMamaMamiKitchen  #MamaMamiKitchen  #KumarShobana

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்


Comments


View More

Leave a Comments