
விவசாயமும், மனிதன் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது….
10 நிமிடம் நேரம் ஒதுக்கி படிக்கலாம், உங்களுக்காகவே இந்தப் பதிவு. 2017 சென்னையில் அலுவகலம் திறக்கணும், அதுக்கேற்ற மாதிரி சில நுட்பங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தோம், சரியாக அடுத்து வந்த பொங்கல் அன்று அப்பாவுக்கு சிறுநீரக கோளாறு இருந்தது தெரியவந்தது. ஆனால் அபாயக்கட்டமில்லை என்பதால் மாத்திரை யில் கொண்டு செல்லலாம் என்று நினைத்தபோதுதான் சிக்கல் ஆரம்பித்தது,
அப்பாவுற்கு நோயின் தன்மை பற்றி தெரியவில்லை, அதன்பின் தான் ஆட்டம் ஆரம்பமானது. வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பதால் திண்பண்டம், உணவு எல்லாமே தானியம்தான், ஏற்கனவே சுகர் உள்ளவர்களுக்கு அது மேலும் அதிகரிக்கும், யாருக்கும் சுகர் ஏன் வருகிறது என்று தெரியவில்லையே.
Must Read: முட்டை , மாமிசம், மீன் சாப்பிட்டால் ரத்தத்தில் க்ளூகோஸ் ஏறுமா?
சில நேரங்களில் நள்ளிரவில் வாந்தி எடுக்கும்போது உடனே சேலத்துக்கு வண்டி எடுத்து மருத்துவமனைக்கு கூட்டுட்டு போவோம், உடனே எல்லா பரிசோதனையும் பார்த்துவிட்டு சாப்பிட்டது செட் ஆகலை அதனாலத்தான் வாந்தி என்பார், ஆனால் அதற்கு ஆகும் செலவு மிக அதிகம், இப்படி சில முறை நடந்தபின் அவர் சாப்பிடும் உணவில் தீவிர கவனம் செலுத்திதான் பல மாதங்களுக்குப் பிறகு தெரிந்தது அவருக்கு கொடுக்கப்படும் எண்ணெய்தான் சிக்கல் என்று.
பின் நாங்களே தேங்காயை கானம் ஆட்டி எண்ணெய் மூலம் சமைத்தபோது வாந்திப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது. அதன்பின் அப்பாவின் டயட்டில் Raja Ekambaram சார் பேலியோ டயட்டில் நிறைய மாற்றங்களை கொடுத்தார், நிஜமாகவே நல்ல பலன் இருந்தது, ஆனால் நெப்ரோ டாக்டர் அப்பா முழுசாக மூன்று முட்டை சாப்பிடுவதாக சொன்ன உடன் ரொம்ப கோவப்பட்டார்.
ஆனால் தொடர்ந்து அப்பாவின் சுகர் அளவு கட்டுப்பாட்டில் இருந்ததால் அவரும் எதுவும் சொல்லவில்லை. தொடர்ந்து நெல்லை சாரதி பதிவில் சுரைக்காய் பார்த்த உடன் அப்பாவின் உணவு முறையில் சுரைக்காய் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.அப்போதுதான் நிறைவுற்ற புரதம், நிறைவுறா புரதம், கார்ப்போஹௌட்ரேட், புரோட்டின் பற்றி தெரிய ஆரம்பித்தது.
அப்போதுதான் ஊட்டச் சத்து பற்றி புரிய ஆரம்பித்தது, பிறகு எண்ணெய் ஆய்வகப்பரிசோதனை, கருப்புக் கவுனி ஆய்வகப் பரிசோதனை எல்லாம் செய்தபோதுதான் நமக்கு தரமான உணவு கிடைத்தால்தான் நம் உடல் சரியாக இயங்கும் என்ற எண்ணம் எனக்கு கிடைத்தது,
அப்போதுதான் அப்பாவின் தானிய வியாபாரத்தில் நானும் பார்த்த்துக்கொண்டே இருந்தபோது அப்பா அடிக்கடி சொன்ன வார்த்தை இது மாட்டுக்குதான் போட முடியும், கடையில் விற்க முடியாது என்பது.ஆனால் தொடர்ந்து வந்த வருடமெல்லாம் தரமில்லை என்பதை கண்கூடாக பார்த்தபின்னர்தான் விவசாயத்தில் கிடைக்கும் பொருட்களை உண்ணுவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பிடிபட ஆரம்பித்தது.
விவசாயத்தில் தரமில்லாத பொருள்கள் கிடைத்தால் அதை உண்ணும் எல்லாருக்கும் அடிப்படை ஊட்டச்சத்துக்கள் எப்படி கிடைக்கும், 4 வருடமாகவே மருத்துவமனையில் பெரும்பான்மை நேரம் செலவிட்டிருப்பதால் அங்கே இருப்பவர்களை அவர்கள் எதற்காக மருத்துவமனையில் இருக்கிறார்கள் என கேட்கும்போது அவர்கள் சொன்ன காரணத்தில் பலரும் மருத்துவரின் ஆலோசனையை மீறியிருக்கிறார்கள் எனத் தெரிந்தது.
Must Watch: சளி, இருமலை தடுக்கும் யூகலிப்டஸ் இலைகள்
4 வருசதுக்கு முந்தி எனக்கும் தெரியாமல்தான் இருந்தது. அடிப்படை ஊட்டச் சத்து குறித்த புரிதல் பலருக்கும் இல்லை, விவசாயமும், மனிதன் ஆரோக்கியமும் தனித்தனியாக இல்லை, அது நம்மோடு இணைந்தது, அதை விவசாயி என செண்டிமெண்டாக பார்க்காதீர்கள், நம் வாழ்வியலாகப்பாருங்கள்.
இல்லையென்றால் நாம் சம்பாதிக்கும் பெரும் பணம் மருத்துவச் செலவுக்கே போகும், தவறு நம்மேல் வைத்துக்கொண்டு மருத்துவமனைகள் மேல் குறைச் சொல்லக்கூடாது. இங்கே விழிப்புணர்வு மிகக் குறைவு, அந்த குறைவால் பாதிக்கப்படுபவர்கள் மிக அதிகம், அந்த பாதிப்பு நம் வாழ்வை நிச்சயம் புரட்டிவிடும்.
அக்ரிசக்தி(AgriSakthi)யில் நான் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டுக்கிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும், நீங்களும் எங்களுடன் இணைந்து இணைந்து கொள்ளலாம்.
-நன்றி; செல்வமுரளி முகநூல் பக்கம்
#SelvaMurali #AgriSakthi #OrganicFood
Comments