நவராத்திரி விரத த்தின் போது எடுத்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?


இந்த ஆண்டின் நவராத்திரி விழாவானது மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 26 திங்கட்கிழமையன்று தொடங்குகிறது. நவராத்திரி விழா அக்டோபர் 4 ஆம் தேதி முடிவடைகிறது. மேற்குவங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நவராத்திரி வெகுவிமர்சையாக க் கொண்டாடப்படுவது வழக்கம். 

தமிழ்நாட்டில் சென்னையில் மயிலாப்பூர், மேற்குமாம்பலம்,நங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நவராத்திரி கொலுவைப்பது, விரதம் இருப்பது போன்றவற்றில் பொதுமக்கள் ஈடுபடுவர். தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களிலும் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். 

Must Read: இயற்கை விவசாயம் கொள்கைக்கான சில முன் மொழிவுகள்

நவராத்திரியை முன்னிட்டு பெண்கள் விரதம் இருப்பார்கள். பெண்கள் 9 நாட்களும் விரதம் இருந்து அம்பாளை வழிபடுவர். சிலர் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் விரதம் இருப்பர். நவராத்திரி விரதத்தின் போது என்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். 

நவராத்திரி உணவுகள்

பெரும்பாலும் விரதம் இருக்கும் போது, பழங்கள், பால், மோர் , அவல், வெல்லம், தேங்காய் மற்றும் பழச்சாறு ஆகியவை சாப்பிடலாம். ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிடுபவர்கள், பால் அல்லது மோர் அருந்தலாம். வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். மேலும், திட உணவாக சாப்பிடாமல், கஞ்சி அருந்தலாம்.

 

தவிர்க்க வேண்டிய உணவுகள்

 

எந்த ஒரு விரதத்தின்போதும் அதிக மசாலா, பூண்டு, வெங்காயம், முருங்கை உள்ளிட்ட  உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்வர். அதே விதிமுறைகள் நவராத்திரி விரதத்துக்கும் பொருந்தும். விரதத்தின் போது அரிசி, கோதுமை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகள், பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். எண்ணையில் பொறித்த உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகளை தவிர்க்க வேண்டும். விரதத்தின் போது இவற்றை சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும்.

-பா.கனீஸ்வரி 

#NavarathiriFastingFoods #WhatFoodEatNavarathiri #NavarathiriFestival

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

 


Comments


View More

Leave a Comments