மாதவரம் அருகே 2 கி.மீ தொலைவில் அடையாளம் காணப்பட்ட 36 மூலிகைகள்…


மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான திங்களன்று எங்கள் பகுதியில் செயல்படும் அத்திக்குழு சார்பில் மூலிகைகளை இனங்காணும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மாதவரம், மாத்தூர், மணலி பகுதியில் இயற்கை சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகிறது அத்திக்குழு. அத்திக்குழுவின் முன்னோடிகளான திரு.வானவன், திரு.சுப்பிரமணி, திரு.ஶ்ரீதரன், திரு.ஜம்புலிங்கம், திரு.கோபி, திரு.கமல், திரு.சுரேஷ், திரு.பிரபு, திரு.ராஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Must Read: பிரிட்டானியா மில்க் பிகிஸ் விளம்பரத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு எதிர்ப்பு

காலை 7 மணி அளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மாதவரம் பால்பண்ணை மருத்துவமனையின் வெளிப்புறம் உள்ள மாதா கெபிக்கு எதிரே தொடங்கி சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் தன்னிச்சையாக வளரக்கூடிய மூலிகைகளை இனம் கண்டு அவற்றின் பெயர் மற்றும் மருத்துவ குணத்தை சொல்லும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

மூலிகைகள் அடையாளம் காணல்

கானாவாழை, குப்பைமேனி, துத்தி, அரிவாள் மனைப்பூண்டு, நாயுருவி, கரும்பூலா, பொன்னாவாரை, தும்பை உள்ளிட்ட சுமார் 35 மூலிகைகளை அடையாளம் கண்டு சொன்னதில் உள்ளபடியே மகிழ்ச்சி.  இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடரும். நிகழ்ச்சியின் முடிவில் அத்திக்குழு சார்பில் வாழைப்பழம், முளைகட்டிய வேர்க்கடலை, கொத்தமல்லி - தேங்காய்ச் சாறு வழங்கப்பட்டது. அத்துடன் மாதவரம் பால்பண்ணை சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள மூலிகைத்தோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

-- எம்.மரிய பெல்சின் - 9551486617

#HerbalWalk  #HerbalsIdentify  #TraditionalMedicine

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

 

ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்

 
 

Comments


View More

Leave a Comments