சென்னை உணவு வரலாற்றில் தடம் பதித்த வடகறி, சிக்கன் 65…


சென்னை மாநகரம் பல மாநில மக்கள், தமிழ்நாட்டின் பல மாவட்ட மக்களை கொண்டதாக இருக்கிறது. எனவே சென்னையின் உணவு என்பதும் பன்முக கலாசாரம் கொண்டதாகவே இருக்கிறது. 

எனினும், சில உணவுகள் சென்னையின் பிறப்பிடமாக இருந்திருக்கின்றன. உதாரணமாக வடகறி என்பது இப்போது தமிழ்நாடு தாண்டியும் புகழ் பெற்ற ஒரு சைட் டிஷ் ஆக விளங்குகிறது. வடகறி என்பது இட்லி, தோசை, இடியாப்பம் உள்ளிட்ட உணவு வகைகளுடன் சைட் டிஷ் ஆக சாப்பிட ஏற்ற சுவையான உணவாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 

Must Read: தன்னம்பிக்கையுடன் டெலிவரி செய்யும் ஒரு கை இல்லாத ஸ்விக்கி ஊழியர்

வடகறியின் என்பது சென்னை சைதாபேட்டையில் உள்ள மாரி ஹோட்டல் என்பது பலருக்கு தெரியாத ஒன்று. மாரி ஹோட்டலில்தான் வடகறி முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. 

மாரி ஹோட்டலில் விற்காமல் மீந்து போன வடையை உதிர்த்துப் போட்டு, அதில் சில மசாலாக்களை சேர்த்து வடகறியாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தனர். புதுவகையான இந்த டிஷ் சென்னை மக்களை மிக விரைவிலேயே கவர்ந்து விட்டது. 

சைதை மாரி உணவகம்

வழக்கமாக சாம்பார், சட்னி, காரசட்னி ஆகியவை தவிர வேறு எதையும் டிபனுக்கு சைட் டிஷ் ஆக சுவைத்திராத வாடிக்கையாளர்கள் வடகறி என்ற புதிய சைட் டிஷ் காரணமாக மாரி ஹோட்டலை நோக்கி வரத்தொடங்கினர். இதனால், வடகறி நாளடைவில் பிரபலம் ஆகத்தொடங்கியது. 

சைதாபேட்டை மாரி ஹோட்டல் 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மாரிஹோட்டலை தொடங்கியவர் மாரிமுத்து தேவர் என்பவர். அவரின் பரம்பரையில் வந்த கண்ணன் மற்றும் அவரது சகோதர ர் இருவரும்தான் இப்போது மாரி ஹோட்டலை நடத்தி வருகின்றனர். 

மாரிஹோட்டல் வடகறியை இப்போது சென்னையில் உள்ள அனைத்து ரெஸ்டாரெண்ட்களும் தங்களது வாடிக்ககையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். வடகறி 70 ஆண்டுகள் கடந்தும் புகழ்பெற்று வருகிறது. 

சிக்கன் 65 உணவின் தொடக்கம்

இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்தவர் ஏ.எம்.புகாரி. இவர் தனதுபெயரிலேயே சென்னையில் ரெஸ்டாரெண்ட் தொடங்கினார். 

புகாரி தனது அசைவ உணவகத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சிக்கன் 65 என்ற உணவை அறிமுகப்படுத்தினார். இந்த உணவு புகாரி ஹோட்டலின் பெருமைகளில் ஒன்றாக்க இன்றளவும் திகழ்கிறது. 

இன்றைக்கு சிக்கன் 65 என்ற உணவானது உலகம் முழுவதும் பிரபலமான உணவாக இருக்கிறது. Taste Atlas என்ற அமைப்பின் ரேங்க்கின்படி டாப் டென் 10 சிக்கன் ப்ரைடு உணவுகளில் ஒன்றாக சிக்கன் 65 இடம் பெற்றிருக்கிறது என்பது சென்னை உணவு வரலாறுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமே. 

-ருசி பிரியன் 

#Chennaiday  #ChennaiHistory  #Chennaifoods #vadakary #chicken65 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments