காலை உணவுத்திட்டத்தின் சுவை குறித்து அதிகாரிகள் ஆய்வு…


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த பேரரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 15ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள  மொத்தம் 1,545 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு தினமும் காலை உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

காலை உணவு திட்டத்தை தான் நேரடியாக ஆய்வு மேற்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரித்திருந்தார். எனவே மாவட்ட ஆட்சியர்களும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிகளில் காலை உணவு முறையாக தரமாக வழங்கப்படுகிறதா என்று சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Must Read: 4 நல்ல விஷயங்கள்; நீரழிவு நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உணவுபாதுகாப்புத்துறை ஆணையர் லால்பினா, சென்னை மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் மற்றும் குழுவினர்,  சென்னை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் காலை உணவுத்திட்டத்துக்கான பொதுசமையல் கூடதில் ஆய்வு மேற்கொண்டனர். 

அங்கு சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு ருசி பார்த்தனர். பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கும் சென்று, மாணவர்களுக்கு உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா, அதை மாணவர்கள் ஆர்வமுடன் சாப்பிடுகிறார்களா என்பது குறித்தும்  ஆய்வு நடத்தினர்.

-நமது நிருபர் 

#TNGovtMorningFoodScheme   #TNSchoolBreakFast   #TNSchoolFoodsScheme

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments